Published:Updated:

மிஸ்டு கால்

பாரதி தம்பிபடம் : ஆ.வின்சென்ட் பால்

மிஸ்டு கால்

பாரதி தம்பிபடம் : ஆ.வின்சென்ட் பால்

Published:Updated:
##~##

ந்தப் பெண் கல்லூரியில் படிக்கிறாள். செல்போன் வைத்துக்கொள்ள வீட்டிலும் கல்லூரியிலும் தடை. ஆனாலும், அவள் வைத்திருந்தாள். எல்லா நேரங்களிலும் அவளது செல்போன் வைப்ரேட் மோடில்தான் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு வருடம் வீட்டுக்குத் தெரியாமலேயே செல்போன் பயன்படுத்திவந்தாள். ஒருநாள் வைப்ரேட் மோட் செல்போனுடன் இருக்கும் கல்லூரிப் பையை டி.வி-க்கு அருகில் வைக்க, அந்த நேரத்தில் அலைபேசிக்கு அழைப்பு வர, டி.வி. திரையில் வரி வரியாக அலையடிக்க, சந்தேகப்பட்ட அண்ணன் பையைத் திறந்து பார்க்க.... ஒளிர்ந்தது செல்போன், உடைந்தது ரகசியம். தங்களை ஏமாற்றிவிட்டதாக வீட்டில் உள்ளவர் கள் எகிறிக் குதிக்க... ''இனிமே இதைத் தடுக்க நினைக்கிறது முட்டாள்தனம்'' என்று செல்போனை வாங்கிய அப்பா, அதை அந்தப் பெண்ணிடமே கொடுத்துவிட்டார். இப்போது அப்பாவுக்குத் தினமும் ஃபார்வர்ட் மெசேஜ்கள் பறக்கின்றன பெண்ணிடம் இருந்து.

மிஸ்டு கால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

னைவிக்கு ஒன்று, கடன்காரனுக்கு ஒன்று, ஆபீஸுக்கு ஒன்று, 'ரகசியக் காதலி’க்கு ஒன்று என நான்கு சிம் கார்டுகள் வைத்திருக்கிறார் அவர். ஆனால், அவரிடம் இருப்பதோ இரண்டு செல்போன்கள்தான். ஒரு கையால் டீ குடித்தபடியே அசால்ட்டாக மற்றொரு கையால் செல் போனைக் கழற்றி சிம் கார்டை மாட்டிப் பேச ஆரம்பிப்பார். சற்று நேரத்தில் அதைக் கழற்றி விட்டு இன்னொன்றைச் செருகுவார். எப்படி இத்தனை சிம் கார்டுகளை வைத்துக்கொண்டு சமாளிக்கிறார் என்று ஆச்சர்யமாக இருக்கும். ''உங்க நம்பர் என்ன?'' என்று கேட்டால், நான்கில் எதைச் சொல்வார் என்று தெரியவில்லை. யார் கண்டது? அப்படிக் கேட்பவர்களுக்கு எனத் தனியே ஒரு சிம் கார்டு அவரிடம் இருக்கலாம்.

 'தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தா எடுப்பது இல்லை’ என்பது சிலரது கொள்கை. அது என்ன கொள்கையோ தெரியவில்லை. விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் நண்பனைப் பற்றி தகவல் வரலாம். ''ஏம்ப்பா, இந்த நம்பரைக் கொஞ்சம் போட்டுத் தர்றியா?'' என இரவல் செல்போன் வாங்கி உறவினர் ஒருவர் பேசலாம். புதிய வாய்ப்பு ஒன்றுக்கான அழைப்பாக இருக்கலாம். ஆனால், ''நம்பர் தெரிந்தால்தான் நம்புவேன்'' என்பவர்கள் கஸ்டமர் கேர் அழைப்புகளை வெளிநாட்டு நம்பர் என நினைத்து, பதறி எடுப்பதைப் பார்த்தால், ஒரே சிப்புச் சிப்பா வருது!

 சிறையில் இருக்கும் தன் உறவினருக்கு போண்டாவுக்குள் சிம் கார்டை மறைத்து வைத்துக் கொடுக்க முயன்ற ஒருவரைப் போன வாரம் திருவொற்றியூரில் கைது செய்திருக்கிறார்கள். சிம் கார்டுக்கு போண்டா என்றால், செல்போனை எதில் மறைத்துக் கொடுத்துஇருப்பார்?

தெருவோரத் தள்ளு வண்டி வியாபாரிகளிடம் பழம், காய்கறிகளை ஓசியில் அபேஸ் செய்யும் போலீஸ்காரர்கள் யாரும் 'ஓசி டாப்-அப்’ செய்யாமல் இருப்பதன் உளவியல் காரணம் என்னவாக இருக்கும்?

நான்கு வருடங்களுக்கு முன்பு என் கணவர் செல்போன் வாங்கினார். அதில் இருந்துதான் எல்லோரும் பேசுவோம். நான் இரண்டு நாட்கள் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுவிட்டு வீடு

மிஸ்டு கால்

திரும்பினேன். என் பெரியம்மா என்னுடன் பேச வேண்டும் என போன் செய்ததாக என் கணவர் சொன்னார். அப்போது இரவு 9 மணி. அப்போது ஒரு நிமிடத்துக்கு 75 பைசா. அதுவே 10 மணிக்குப் பிறகு பேசினால், ஒரு நிமிடத்துக்கு 39 பைசாதான். எனவே '10 மணி ஆகட்டும், நிறையப் பேசலாம்’ என நினைத்துப் பிள்ளைகளுடன் பேசிக்கொண்டு இருந்தேன். சரியாக 9.45-க்குப் பெரியம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. பேசினால், ''பெரியம்மா பத்து நிமிஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. 9.30 மணி வரைக்கும் நல்லாதான் வேலை பார்த்துக்கிட்டு, பேசிக்கிட்டு இருந்தாங்க. சும்மா தலையணையை எடுத்துப்போட்டுப் படுத்தாங்க... அப்படியே இறந்துட்டாங்க'' என்றபோது நான் வெடித்து அழுதுவிட்டேன். 9 மணிக்கே பேசியிருந்தால் என் பெரியம்மாவின் குரலைக் கேட்டிருக்கலாம். யார் கண்டது, அந்தத் திடீர் மரணம்கூடத் தவிர்க்கப்பட்டு இருக்கலாம். இப்போது எல்லாம் யாரிடமாவது பேச வேண்டும் எனத் தோன்றினால், உடனே பேசிவிடுகிறேன்.

- சு.லௌரா சாந்தினி, மதுரை.

டந்த ஆறு மாதங்களில் 12 முறையேனும் அவருக்கு போன் செய்திருப்பேன். ஒவ்வொரு முறையும், 'நீங்கள் கேட்கும் பாடலை உங்களுக்கு காலர் டியூனாக வைத்துக்கொள்ள ஸ்டார் மற்றும் ஒன்பதை அழுத்தவும்’ என்று பதிவுசெய்யப்பட்ட அறிவிப்பு முடிவதற்குள்ளேயே அழைப்பை அட்டெண்ட் செய்துவிடுகிறார். அவர் என்ன தான் பாட்டு வைத்திருப்பார் என்று தெரியவில்லை. அவரைக் கேட்காமலேயே தெரிந்துகொள்ளலாம் என நானும் முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன்.

- எம்.ஸ்டாலின் சரவணன், புதுக்கோட்டை.

மிஸ்டு கால்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism