Published:Updated:

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

Published:Updated:
பேயோன் பக்கம்!

குழந்தைப் பாடல்கள்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

(உங்கள் குழந்தைகளின் தமிழறிவை வளர்த்திட...)

மாமரம்

மாமரமாம் மாமரம்
கிளைகள் நிறைந்த மாமரம்
மரம் முழுதும் இலைகளாம்
பட்டுப்போனால் உதிருமாம்
உதிர்ந்துபோனால் என்ன இப்போ,
திரும்பத் திரும்ப முளைக்குமே!

மூட்டை

மூட்டை நல்ல மூட்டை
சுமக்க உப்பு மூட்டை
உள்ளே நிறைய புத்தகம்
படித்து சென்டம் வாங்கணும்
அப்பா அம்மா தூக்கினால்
விழுந்து வாருவார்களே
நான் மட்டுமே தூக்குவேன்
சோட்டா பீம் போல் பலசாலி!

பேயோன் பக்கம்!

ஆன்ட்டி

ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ஆன்ட்டியாம்
தினமும் அவள் கல்லூரிக்கு
ஸ்கூட்டியிலே போவாளாம்
அப்பா ஒரு நாள் பார்த்தாராம்
இனிக்கப் பேசி வழிந்தாராம்
அம்மா ஒரு நாள் பார்த்தாளாம்
அப்பா முதுகில் வைத்தாளாம்!

நூடுல்ஸ்

அம்மா செய்த நூடுல்ஸ்
புழுப்புழுவாய் இருக்குமே
கையிலிருந்து வழுக்குமே
வாயில் இட்டால் சுவைக்குமே
பாட்டிக்குத்தான் பிடிக்காது
'ஆண்டவனுக்கே அடுக்காது'
'இட்லி, தோசை செய்யவே
நேரம் எங்கே இருக்குது?'
நீயும் ஒண்ணு வாங்கிக்கோ
டாட்டூகூடக் கிடைக்குது!

எம்.எல்.ஏ.

எம்.எல்.ஏ-வாம் எம்.எல்.ஏ.
எங்க தொகுதி எம்.எல்.ஏ.
ஓட்டு கேக்க வருவாராம்
நிறைய காசு கொடுப்பாராம்
எனக்குக் கிடைக்கும் லட்டு
அம்மாவுக்கு வெறும் மூக்குத்தி!

கனவு டீச்சர்

கனவில் டீச்சர் வருவாரே
தினமும் சாக்லேட் தருவாரே
லேட்டாய் நாமும் வந்திட்டால்
பெஞ்சில் ஏறி நிற்பாரே
ஹோம்வொர்க்கை நாம் மறந்திட்டால்
பிரம்பால் அடித்துக்கொள்வாரே
வகுப்பின்போது பேசினால்
வெரி குட் என்றே சொல்வாரே
கனவில் கலக்கும் என் டீச்சர்
நிஜத்தில் ஏன்தான் அரை லூஸோ?

சுயமொழிகள்

பேயோன் பக்கம்!

•  தர்க்கம் பார்க்கின் சொர்க்கம் இல்லை.

• அழகு இருக்கும் இடத்தில்தான் திருமணத்திற்குப் பிறகு ஆபத்து இருக்கும்.

• சீறும் பாம்பையும் சிரிக்கும் பெண்ணையும் நம்புபவன் காட்டுமிராண்டி.

• வெறுங்கையோடு வந்தோம், வெறுங்கையோடே போகிறோம். சட்டை பாக்கெட்தான் எவ்வளவு சௌகரியம்!

• நல்ல பேரை 'வாங்க’ வேண்டும் பிள்ளைகளே...

தலையங்கம்

உலகின் பல இடங்களில் இயற்கைச் சீரழிவு கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. நிறைய நாடு களில் வன்முறை. மக்கள் கஷ்டப்படுகிறார்கள். வர்க்க பேதம் பார்க்காமல் மனிதனை மனிதன் சுரண்டுகிறான். அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைக்கூட வேட்டையாடி யாகம் செய்கிறார்கள். தேசத் தலைவர்கள் வெளிநாட்டிற்குப் போய் இருதய அறுவைசிகிச்சை செய்துகொண்டு தாங்கள் மட்டும் சொகுசாக வாழ்கிறார்கள். கேள்வி எழுப்பினால் மழுப்புகிறார்கள். எதையும் இரு மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. லஞ்சத் தொகை களும் விலைவாசிக்கேற்ப அதிகரிக் கின்றன. ஏழைகள் இன்னும் ஏழை களாகவே இருக்கிறார்கள். என் புத்தகங்களை இரவல் வாங்கித்தான் படிக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும். எல்லோரையும் பிடித்துச் சிறையில் போட வேண்டும். அப்போதுதான் உலகம் உருப்படும்.


நானே கேள்வி, நானே பதில்

'நானே கேள்வி, நானே பதில்’ பகுதிக் குக் கொஞ்சம் பங்களிக்கலாம் என்று தோன்றியது...

எப்போதும் உங்களைப் பற்றியே எழுதுகிறீர்களே?

நமக்குத் தெரிந்ததைத்தானே எழுத முடியும்.

பேயோன் பக்கம்!

நோபல் பரிசு பெற்ற பின் என்ன செய்யத் திட்டம்?

உள்ளூர் விருதுகளைத் தொண்டு நிறுவனங்களுக்குத் தானம் செய்யப்போகிறேன்.

உங்கள் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத சம்பவம் எது?

கடின உழைப்பு.

தற்போது நிலவும் பல சமூகப் பிரச்னைகளைப் பற்றி?

சமூகப் பிரச்னைகள் எல்லா வற்றையும் மசோதா இயற்றித் தடை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு பிரச்னை இருக்காது.

உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?

இதென்ன மடத்தனமான கேள்வி? எனக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று எனக்குத் தெரியாதா?

உங்களையும் ஒரு நடிகையையும் இணைத்து ஒரு கிசுகிசு...

என் எதிரிகள் என்னைப் பற்றிக் கிளப்பும் வதந்திகளை நான் நம்ப மாட்டேன்.

இரு வியாபாரிகள்

பேயோன் பக்கம்!

ரு வியாபாரி காசுக்காக ஜென் தத்துவங்களைப் போதித் துக்கொண்டு இருந்தான். அவனி டம் ஜென் கற்க ஒரு ஏழை மது வியாபாரி வந்தான். ஜென் வியாபாரி முன்பணம் கேட்டான். அதற்கு ஏழை வியாபாரி தன்னி டம் பணம் இல்லை என்றும், அதற்குப் பதிலாக மதுவைத் தருவதாகவும் கூறினான். 'சரி, உன்னிடம் உள்ள மதுவில் பாதி யைக் கொண்டுவா' என்றான் ஜென் வியாபாரி. மது வியாபாரி யும் அவ்வண்ணமே செய்தான். மதுவை வாங்கிக்கொண்ட ஜென் வியாபாரி, நாளை முதல் வகுப்பு தொடங்கும் என்று சொன்னான். ஏழை வியாபாரி மறு நாள் பாடம் படிக்க வந்தான். ஜென் வியாபாரி அப்போது நிறைய மது அருந்தி முழு போதையில் இருந்தான். 'குருவே, ஜென் என்றால் என்ன?' என்றான் மது வியாபாரி.

அதற்கு குரு சொன்னான்: 'எது இருக்கிறதோ அது இல்லா மலும் எது இல்லையோ அது இருந்துகொண்டும் இல்லாதிருக் கிற நிலை மாறாமலும் மாறிக் கொண்டும் இருக்கின்றபோது மலரும் பூவின் மீதமரும் வண்டின் பறத்தல்தான் ஜென்.'

குருவின் போதையைப் புரிந்துகொண்ட மது வியாபாரி, 'குருவே, இதைச் சொல்வது நீங்களா, மதுவா?' என்றான்.

'நான் வேறு, மது வேறா?' என்றான் குரு. ஏழை வியாபாரிக்கு அக்கணமே ஞானம் பிறந்தது.

- புரட்டுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism