Published:Updated:

முகம்

ஏ.ஆர்.ரஹ்மான் (இசையமைப்பாளர்)நா.கதிர்வேலன்

முகம்

ஏ.ஆர்.ரஹ்மான் (இசையமைப்பாளர்)நா.கதிர்வேலன்

Published:Updated:
முகம்
##~##

ஸ்கர் தமிழன்! 'வானமே எல்லை’ என்று வாழ்ந்து காட்டியவன். இந்திய இசைக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுக்கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் பெர்சனல் நோட்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே பேசுகிற பழக்கம். ஒரு நிமிடம்கூட வீணாக்கப் பிடிக்காது.

• ஹோம் தியேட்டரில் பார்க்கும் உலகத் திரைப்படங்களும் வீடியோ கேம்ஸ் விளையாட்டுகளும்தான் பொழுதுபோக்கு. இசை தவிர்த்த நேரம் அனைத்தும் குழந்தைகள் கதீஜா, ரஹிமா, அமீன் மூவருக்கும் அர்ப்பணம்.

• ஐந்து வேளை தொழுகை நிச்சயம். வருடத்துக்கு இரண்டு முறையேனும் நாகூர், ஹைதராபாத் தர்ஹாக்களில் சிறப்புப் பிரார்த்தனை நடத்துவார். படிக்கும் புத்தகங்களும் மத நல்லிணக்கம் சம்பந்தப்பட்டவையாகவே இருக்கும்.

முகம்

சென்னை, மும்பை, லண்டன், லாஸ் ஏஞ்சலீஸ் என உலகின் முக்கிய நகரங்களில் ரஹ்மானுக்கு ஸ்டுடியோக்கள் உண்டு. இவற்றில் ஏதாவது ஒன்றில்தான் இவரின் இசைக்கோர்ப்பு வேலைகள் நடக்கும்.

• எந்த நேரமும் எந்த நிமிடமும் ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்திக்கும் உரிமை பெற்ற ஒரே நபர் இயக்குநர் மணிரத்னம்.

• வரும் ஜனவரி 6 வந்தால், ரஹ்மானுக்கு 47 வயது. பிறந்த நாளைக் கொண்டாடும் பழக்கம் கிடையாது.

• அம்மா கரீமா பேகத்தின் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. அம்மாவோடு இரண்டு முறை ஹஜ் யாத்திரை சென்று வந்திருக்கிறார்.

• கீ போர்டு, பியானோ, கிடார்... ரஹ்மான் மனசுக்குப் பிடித்த வாத்தியங்கள். ரஹ்மானின் பியானோ வாசிப்பு எந்த மனதையும் சாந்தப்படுத்தும் என்று உருகுகிறார்கள் நண்பர்கள்.

• பி.எம்.டபிள்யூ. கார்கள் என்றால் ரொம்ப இஷ்டம். இப்போது ப்ரடோ காரும் வைத்திருக்கிறார்.

• உணவில் ஆர்வம் கிடையாது. அதே சமயம், எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. கொடுத்ததைச் சாப்பிடுவார். தயிர் சாதம், ஊறுகாய்கூடப் போதும்.

• உடைகளின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. மிகவும் தேர்ந்தெடுத்துதான் அணிவார். ஃபேஷன் டிசைனர்... மனைவி சாய்ரா.

• தனிமை விரும்பி. 11 வயது முதலே வாழ்க்கை இசைவழிப் பயணமாகிவிட்டதால், நண்பர்கள் மிகச் சிலரே. அவர்களுடன்கூட மிகக் குறைவாகவே பேசுவார்.  

• இரவுப் பறவையாக விழித்திருந்து இசைக் கோர்வை செய்த காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் இரவு 10 மணிக்கு வீட்டில் குழந்தைகளோடு ரஹ்மானைப் பார்க்கலாம்.

• எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களைக் கேட்பது பிடிக்கும். உற்சாகமாக இருந்தால், மெல்லிய குரலில் பாடவும் செய்வார்.  

• மகன் அமீனுக்கு கிரிக்கெட்டில் அதீத ஆர்வம். வீட்டுத் தோட்டத்திலேயே சின்ன பிட்ச் அமைத்துக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான்.  

• சத்தம் இல்லாமல் அவர் வேலையை மட்டுமே கவனித்துக்கொண்டு இருப்பதாகத் தோன்றும். ஆனால், மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களைத் தவறாமல் கேட்டுவிடுவார். நேர்காணலில், விமான நிலையச் சந்திப்புகளின்போது மனதாரப் பாராட்டவும் செய்வார்.

• ரஹ்மானின் 'டிமாண்ட்’களைச் சமாளிப்பதற்கு ஜேம்ஸ் பாண்ட் சாகசம் தேவைப்படும். அந்த சாமர்த்தியம் கைவரப் பெற்று, 24 வருடங்களாக அவரது பெர்சனல் மேனேஜர் ஆக இருப்பவர் நோயல் ஜேம்ஸ்.

• ஆறு முறை தமிழ்நாடு அரசு விருது, 27 ஃபிலிம்ஃபேர் விருதுகள், பத்மஸ்ரீ - பத்மபூஷண் விருதுகள், நான்கு முறை தேசிய விருது, இரண்டு ஆஸ்கர் விருது, மூன்று கோல்டன் குளோப் விருது, கிராமி விருது... ரஹ்மானுக்கு இது ஒரு தொடர்கதை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism