Published:Updated:

நான் நிரபராதி என சி.பி.ஐ.யிடம் நிரூபிப்பேன்:ஆ.ராசா

Vikatan Correspondent

சென்னை, டிச.11,2010

தாம் நிரபராதி என சிபிஐ-யிடம் நிரூபிக்க தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார். ##~~##

2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ராசாவின் டெல்லி மற்றும் சென்னை வீடுகளில் சிபிஐ சோதனையிட்டது. அவரது உதவியாளர் மற்றும் அவருக்கு நெருங்கியவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஆ.ராசாவிடம் சிபிஐ நேரடி விசாரணை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ராசா, சிபிஐ விசாரணை தொடர்பாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், "சி.பி.ஐ.யிடம் நான் முழுமையாக ஒத்துழைப்பு தருவேஎன். எந்த விதிமுறை என்றாலும், அதைப் பின்பற்றுவேன்.

யாருமே ஆய்வுக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. சி.பி.ஐ.க்கு முழுமையாக ஒத்துக்கவே தயாராக இருக்கிறேன். நான் நிரபராதி என நிரூபிப்பேன். இதைத் தான் சொல்ல விரும்புகிறேன்," என்றார் ராசா.