Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

##~##

ருடந்தோறும் அக்டோபரில் கார்ட்னர் நிறுவனம் (www.gartner.com) வெளியிடும், ஐ.டி. உலகில் அடுத்த சில வருடங்களுக்கு 'ஹாட்’ ஆக இருக்கப்போவது என்னவெல் லாம் என்பதை யூகித்துச் சொல்லும் அறிக்கைக்கு மரியாதை உண்டு.

 100 பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த அறிக்கை, பல தரப்பு தொழில்நுட்பங்களை அலசினாலும், அடுத்த ஐந்து வருடங்களில் ஏகப்பட்ட டிமாண்டுடன் இருக்கப்போவது என்று பார்த்தால், அது பெருந்தகவல் (Big Data) என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. பெருந் தகவல் என்பதை முதன்முதலாகக் கேள்விப்பட்டு இருப்பவர்களுக்கு சுருக் விளக்கம். எண்களிலும் எழுத்துகளிலும் சேகரிக்கப்படுவது சாதா தகவல் என்றால், அதனுடன் ஒலி (ஆடியோ), ஒளி (புகைப்படங்கள், வீடியோ), ஆவணங்கள் போன்றவற்றை இணைத்துக்கொண்டால், அது பெருந்தகவல் ஆகிவிடுகிறது. எண், எழுத்துகள் போலன்றி, பெருந்தகவலை எளிதாகச் சேமித்து வைக்கவோ, தொகுத்துவைத்து, அதில் இருந்து தேடலுக்குப் பயன்படுத்திக்கொள்வதோ எளிது அல்ல.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

பெருந்தகவல் என்பதைத் தனிப்பட்ட சந்தை யாகப் பார்க்க முடியாது. உதாரணத்துக்கு, ஆரக் கிள் டேட்டாபேஸ் அல்லது அலை பேசி மென்பொருள் போன்று, தேவை / விநியோகம்/விலை (Demand/Supply/Price) என்று பெருந்தகவலைத் தனிப் படுத்திப் பார்க்க முடியாது. எல்லாவற்றிலும் பங்கேற்கும் விதத்தில் இருக்கிறது பெருந் தகவல். பெரிய நிறுவனங் களின் ஐ.டி. திட்டமிடுதலில் இருந்து, தனியாளாக ஐபோனில் இயங்கும் மென்பொருள் எழுதும் பள்ளி மாணவன் வரை தூண் டு துரும்பு வரை பெருந்தகவல் பயன் படப்போகிறது.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அவசர கதியில் உருவாக்கப்பட்டு இருக்கும் இன்றைய பெருந்தகவல் தொழில்நுட்பங்கள் மறைந்துபோய், புதுமையாக்கம் தொடர்ந்து அடுத்த சில வருடங்களுக்குச் செயல்பட்டபடி இருக்கும். பெருந்தகவல் சார்ந்த தொழில் நுட்பங்களுக்கு இந்த வருடம் மட்டும் 28 பில்லி யன் டாலர்கள் செலவு செய்யப்பட்டு இருக்கிறது. இது அடுத்த சில வருடங்களில் 10 மடங்குக்கும் மேல் அதிகரிக்கும். இதில் பெரும்பான்மையானது பெருந்தகவலைச் சேமிக்கவும் பகுத்தறியவும் தேவைப்படும் இயந்திரங்களின் வலிமைக்கும், பெருந்தகவலை நுகரும் பயனீட்டாளர்கள் சமூகத் தொடர்பு தகவல்களை இணைத்துவைத்து அலசவும் பயன்படும்போலத் தெரிகிறது.

பெருந்தகவல் கூறுகளையும் அதை நிர்வகிக் கும் தொழில்நுட்பங்களையும் தெரிந்துகொண்டு இருக்கும் ஆசாமிகளின் எண்ணிக்கை இன்றைய தேதியில் குறைவு. இந்தத் துறை தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பதால், இதில் பரிச்சயம் உள்ளவர்களுக்குச் சந்தை மதிப்பு குறிப்பிடத்தக்க விதத்தில் கூடும்.

குறிப்பாக, என்ன தொழில்நுட்பங்கள் என்று சொன்னால் அவற்றை இப்போதே படித்து விடுவோமே எனத் துறுதுறுப்பவர்களுக்குக் கீழ்க் கண்ட பாரா பயன்படும்.

சாதா தகவல்களைச் சேமிக்கவும், தேடலுக்குப் பயன்படுத்தப்படும் Relational Database தொழில்நுட்பங்கள் பெருந்தகவலுக்குச் சரிப்பட்டு வராது. Oracle, SQL Server, MySQL வகையறாக்கள் இந்தப் பிரிவில் சேரும். கடந்த 20 ஆண்டுகளில் இந்தத் தொழில் நுட்பம் மிகப் பெரிய மனித வளச் சந்தையை உருவாக்கியிருந்தாலும், பெருந்தகவல் பிரிவைப் பொறுத்தவரை Relational Database பொருத்தம் இல்லாதது என முடிவாகிவிட்டது. பெருந்தகவல் பிரிவுக்கு உகந்தது No SQL என்று அழைக்கப்படும் டேட்டாபேஸ் தொழில்நுட்பம். வணிகரீதியில் பெயர் சொல்லும் வகையில் இன்னும் எந்த நிறுவனமும் No SQL தொழில்நுட்பத்தை வெளி யிடவில்லை என்றாலும், ஃபேஸ்புக், இன்ஸ்ட்ரா கிராம் போன்ற பெருந்தகவல்சார்ந்த சேவைகள் பயன்படுத்துவது மேற்படி தொழில்நுட்பங்கள் தான் என்பது இதன் முக்கியத்துவத்தை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது. Cassandra, MongoDB, Hbase, Redis போன்ற ஓப்பன் சோர்ஸ் தொழில் நுட்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படப் போவது தெரிகிறது. இவற்றை கூகுளில் தேடி மேல் விவரங்கள் தெரிந்துகொண்டு பிடித்த ஒன்றைத் தேர்வுசெய்து படிக்கலாம்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

பை தி வே, முக்கியமானதொரு தகவல்.

இணைய தொழில்நுட்பத்தின் ட்ரெண்டு களையும் அது சம்பந்தமான ஐ.டி. உலகின் நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்ளும் நோக்கம் கொண்ட இந்தத் தொடரின் வடிவமைப்பு முடிவுக்கு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் பிராக்டிக்கலான, சம காலத்திய நிகழ்வுகளை விறுவிறுவென வேறு வடிவத்தில் கொடுக்கலாம் என்ற எண்ணம்.

இது சம்பந்தமான பரிந்துரைகளை @antonprakash-க்கு ட்வீட்டுங்கள். புதிய வடிவத்தில் மீண்டும் சந்திப் போம்.

shut down