Published:Updated:

மிஸ்டு கால்

மிஸ்டு கால்

##~##

காலையில் சமைத்து, பள்ளிக்குப் பிள்ளை களைத் தயார்செய்து, அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருக்கும்போதும், இரு சக்கர வாகனத் தில் சிக்னலில் காத்துக்கொண்டு இருக்கும்போதும் சிலர் அலைபேசியில் விடாக்கண்டனாக ஓயாமல் அழைத்து டென்ஷன்படுத்துவார்கள். ஒரு முறை அழைத்து எடுக்கவில்லை எனில், ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். நேரம் கிடைக்கும்போது நாமே கூப்பிடுவோம் இல்லையா? அதைவிடுத்து தொடர் டார்ச்சர் கொடுப்போரை என்னதான் செய்வது?

 - ஆர்.விஜயா ரவி, ஈரோடு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரைவழித் தொலைபேசியில் அழைப்பு வந்தால் 'ஹலோ! யார் பேசுறது?’ என்றுதான் தொடங்குவோம். செல்போனில் 'எங்கே இருக்கே?’ என்றுதான் பேச ஆரம்பிக்கிறோம். இது சற்று அநாகரிகமாக இருக்கிறது. நான் இப்போது கொஞ்சம் பேச வேண்டும்; பேசலாமா? பயணம் எதிலும் இல்லையே?’ என்று ஆரம்பிக்கலாம்.  

- ஆர்.நடராஜ கண்ணன், மயிலாடுதுறை.

 றவினர் இறந்துவிட்டார் என்று பெற்றோருடன் சென்னை வந்தேன். என்னிடம் அவரது செல்போன் எண் மட்டுமே இருந்தது. அவர் செல்போனை அணைத்துவிட்டார்கள். கடும் வெயிலில் வயதான பெற்றோரை வைத்துக்கொண்டு துக்க வீட்டைக் கண்டுபிடிப்பதற்குள் படாதபாடுபட்டேன். ''ஏம்ப்பா, செல்லை ஆஃப்

மிஸ்டு கால்

பண்ணீங்க?'' என்று கேட்டால், ''அவர்தான் இறந்துட்டாரே... யார் போன் பண்ணப்போறாங்கன்னு நினைச்சுட்டோம்'' என்கிறார்கள். என்னத்த சொல்ல?!

- ஆர்.வசந்தகுமார், சிதம்பரம்.

 ற்கெனவே லேட். இன்னும் குளிக்கலை, ஷேவ் பண்ணலை. பிடித்த மணத்தோடு சமையல் அறை வேறு இழுக்கிறது. டி.வி-யில் பரபரப்பான செய்தி ஒன்று கண்ணை அசையவிடாமல் செய்கிறது. இந்த நேரம் பார்த்து 'அன்பே வா... முன்பே வா’ என்று அலைபேசி அழைத்தால்... அது எவ்வளவு தான் பிடித்த பாடலாக இருந்தாலும், ஷ்ரேயா கோஷலே பாடியிருந்தாலும் எனக்குக் கோபமும் எரிச்சலும்தான் வரும். உங்களுக்கு?

- சி.பழனிச்சாமி, ஈரோடு.

 லக அளவிலான செல்போன் தூக்கி எறியும் போட்டி ஒவ்வொரு வருடமும் நோக்கியாவின் தலைமையகம் அமைந்திருக்கும் பின்லாந்தில் நடக்கிறது. அதிக தூரம் செல்போனைத் தூக்கி எறிபவர்களுக்குப் பரிசும் உண்டு. இது வரையில் 102 மீட்டர் தூரம் எறிந்ததுதான் உலக சாதனை யாம்!

- எம்.விக்னேஷ், மதுரை-9.

 டந்த வாரத்தில் ஒரு நாள் வேலை முடிந்து கிளம்பிக்கொண்டு இருந்தபோது ஒரு மிஸ்டு கால். எண் புதிதாக இருக்கவே மறுபடியும் அழைத்தேன். 'ஹலோ... ஹலோ...’ என்று சொல்லிவிட்டு ஒரு குழந்தையின் முனகல் குரலில் அழுகை கேட்டது. அது என் குழந்தையின் குரல்போலவே இருந்ததால், பதறிப்போய் பக்கத்து வீட்டுக்கு அழைத்து, குழந்தை டியூஷனில் இருந்து வந்துவிட்டானா என்று பார்க்கச் சொன்னேன். இடியும் மழையுமாக இருந்ததால் அவர்களால் உடனே சென்று பார்க்க முடியவில்லை. 'குழந்தையை யாரேனும் கடத்திஇருப்பார்களோ’ என்று அலுவலகத்தில் இருந்து  அடித்துப்பிடித்து வீடு வந்தேன். அங்கு என் குழந்தையைப் பத்திரமாகப் பார்த்த பிறகுதான் நிம்மதி. பிறகு, அந்த எண்ணுக்கு மீண்டும் அழைத்தால், மறுபடியும் அதே ஹலோ... ஹலோ... அதே குழந்தையின் முனகல். பிறகுதான் அது பதிவு செய்யப்பட்ட குரல் எனப் புரிந்தது. அதற்குள் என் செல் கணக்கில் இருந்து 95 ரூபாய் போய்விட்டது. கவனித்தால் அது ஒரு 11 இலக்க எண். இந்தக் காசு யாருக்குப் போகிறது? எப்படி இதை எல்லாம் அனுமதிக்கிறார்கள்? ஒன்றும் புரியவில்லை. அந்த நம்பரை 'ஃப்ராடு’ என்று சேமித்துவைத்தேன். அடுத்த நாள் இன்னொரு 11 இலக்க எண்ணில் இருந்து மிஸ்டு கால். உஷார் மக்களே... உஷார்!

- சித்ரா பாபு, சேலம்.

  மீட்டிங் என்பதற்காக செல்போனை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு, மீட்டிங் முடிந்ததும் ஒன்றுஇரண்டு மிஸ்டு காலாவது வந்திருந்தால்தான் 'கௌரவ மாக’ இருக்கிறது. இல்லை எனில், ஏமாற்றம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

- பெ.பாண்டியன், கீழச்சீவல்பட்டி.

Call Ended