Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

ருங்காலத் தொழில் நுட்பம் தொடர் 140 அத்தியாயங்களை எட்டியது யாரும்... ஏன் நானே எதிர்பார்க்காதது. 140 ரன்கள் எடுத்து விளையாடிக்கொண்டு இருந்தவனை,  'அண்டன்... அடுத்த ஆட்டம் ஆரம்பம். இது டி-20...’ எனத் தள்ளிவிட... ஐ’ம் பேக்!

 இந்தத் தொடரில் என்னவெல்லாம் கவர் செய்யலாம்... உலகம் முழுவதும் தொடர்ந்து நிகழ்பவற்றைப் பார்க்கும்போது செம ரகளையாக இருக்கிறது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  ஐபேட் மினி ரெடி.

• மைக்ரோசாஃப்ட்டின் சர்ஃபேஸ், கணினியா... டேப்லட்டா? இல்லை இரண்டும்கெட்டானா?

• World of Warcraft வீடியோ கேமில் ஹேக்கர்களின் அட்டூழியத்தால் தெருவெங்கும் பிணங்கள் குவிந்தன.

• டேப்லட்டுக்குள் செல் என விவகாரமாக இருதலைக் கொள்ளி டிசைன் செய்திருக்கும் Asus இன் PadFone பயன்படுத்திய அனுபவம்.

அறிவிழி

• டெக்னாலஜியைப் பயன்படுத்தி சிறந்த எழுத்தாளர் ஆக முடியுமா?

• ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தித் தன் காதலை முறித்துக்கொண்டவரின் ஆணுறுப்பு சர்ஜிக்கலாகத் துண்டிக்கப்பட்டதன் குற்றப் பின்னணி...

இவை போன்ற உலகத்தின் டிரெண்டுகளை இந்தத் தொடரில் பிரதிபலிப்பதாக எண்ணம்.

இந்த இரண்டாம் இன்னிங்ஸில் வல்லினம் இருக்கும்; மெல்லினம் இருக்கும்; செல்லினம் பற்றிய தகவல்களும் அதிகம் இருக்கும். சுருக்கமாக... என்ன வரப்போகிறது என்று யூகித் துக்கொண்டு இருப்பதைவிட, வந்தே விட்டவை குறித்த தாக்கத்தையும் இந்தப் புதிய தொடரில் பகிர்ந்து கொள்ளலாமே!  

அறிவிழி

இந்தப் புதிய வடிவு மனதில் உருவாகியதும் முதல் அத்தியாயத்திலேயே, உலகைக் கலக்கும் 'கங்ணம் ஸ்டைல்’ பாடலைப் பற்றிப் பதிவு செய்திட வேண்டும் என நினைத்தேன். தென் கொரிய ராப் பாடகரான Psy  (உச்சரிப்பில், சி) இந்தப் பாடலை எழுதி, இயக்கிய நபர். இந்தப் பாடலின் பிரபலத்தைக் கொலைவெறி எனச் சொல்லலாம். கங்ணம் என்றால் கொரிய மொழியில் குதிரை என்று அர்த்தமாம். குதிரை சவாரி செய்வதுபோன்ற நடன அசைவுகளுடன் அழகிய பெண்கள் சகிதம் கலக்கல் ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியினர் துவங்கி, ஐ.நா. செயலர் வரை ஆடிப்பார்த்துவிட்டனர். கங்ணம் வீடியோ யூ டியூபில் இது வரை 530 மில்லியன் ஹிட்ஸ்களைத் தாண்டிவிட்டது.

-விழிப்போம்

கோவையில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானத்தில் லேப்டாப்பில் இந்த முதல் அத்தியாயத்தை எழுதத் தொடங்கினேன். பாதி எழுதியதும் லேப்டாப் பேட்டரி பணால். அத்தியாயத்தைக் கொடுக்கும் டெட் லைன் நெருங்கிவிட்டதால், பதற்றம். பின்னர் நினைவுக்கு வந்தது பையில் இருக்கும் 'Livescribe’.

அறிவிழி

'Livescribe’ பார்ப்பதற்கு பெரிய சைஸ் பேனா போல் இருக்கிறது. அதன் மூலம் எழுதுவதற்கு ஸ்பெஷல் நோட்டுப் புத்தகம் தேவை. அதைவைத்து எழுதும்போது, அந்த நேரத்தில் அங்கு இருக்கும் சத்தத்தையும் ஒருசேர சேர்த்துப் பதிவுசெய்து வைத்துக்கொள்கிறது. எழுதி முடித்த பின்னர், கணினியில் இணைத்துவிட்டால் எழுதியதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதென்ன பெரிய விஷயம் என்று தோன்றுகிறதா?

பதிவிறக்கம் செய்யப்பட்ட பக்கத்தை Pencast  எனப்படும் PDF format-ல் சேமித்துக்கொண்டால், அதை ரீ ப்ளே செய்து வீடியோவாகப் பார்க்க முடியும். அது மட்டுமல்லாமல், அந்த PDF கோப்பில் பல பகுதிகளுக்குச் சொடுக்கினால், அந்த நேரத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களும், அந்த நேரத்தில் சேமிக்கப்பட்ட ஆடியோவையும் கேட்க முடியும்.

மேற்கண்ட அத்தனையும் 'Livescribe’ல் எழுதப்பட்டது. இதனை எழுதி முடித்து விட்டு, அதைப் பதிவேற்றப் போகிறேன். விமான அறிவிப்புகள் சிலவற்றைத் தவிர்த்தால் பெரும்பாலான நேரங்களில் விமான இன்ஜினின் 'ஹம்ம்ம்...’ சத்தம் கேட்டபடி இருக்கும். எனது கோழிக் கிறுக்கல் கையெழுத்தையும் இந்தப் பகுதி எப்படி எழுதப்பட்டது என்பதை யும் வீடியோ வடிவில் பார்க்க இந்த உரலிக்குச் செல்லவும் www.ephrontech.com/ls.pdf

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism