Published:Updated:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Published:Updated:

இந்த வாரம் எனக்கு ரெண்டு சந்தேகம் விஜய்...

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

டவுட் 1: விஜய் ஒரு நகைக் கடை விளம்பரத்தில் நடிக்கிறார். அந்த விளம்பரத்தில் ஒரு பெண் குழந்தைக்குத் தன் தாய் ஷோபா பெயரைச் சூட்டுகிறார். இதை அம்மா மடியில் படுத்துக்கொண்டே விஜய் பகிர்ந்துகொள்ள, ஷோபாவும் பரவசத்தோடு சிரிக்கிறார். ஆனால், அந்த விளம்பரத்தில் விஜய் பெயர் சூட்டும் குழந்தைக்கு எப்படிப் பார்த்தாலும் இரண்டு வயதுக்கு மேல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

இருக்கும். ஒரு படத்தில் கவுண்டமணி ஒரு குழந்தைக்கு 'முருகேசன்’ என்று பெயர் சூட்டிவிடுவார். ஆனால், அது பெண் குழந்தை. கொஞ்சமும் சளைக்காமல் உடனே 'முருகேசி’ என்று பெயரை மாற்றிவிடுவார் கவுண்டமணி. 'இப்போ முருகேசிக்கு அண்ணன் பணம் தருவார்’ என்று செந்தில் ஒரு பிட்டைப் போட்டுவிட்டு, பச்சைப்புள்ளை மாதிரி முகத்தை வைத்துக்கொள்வார். மறு நாள் 10 வயசுப் பையனில் இருந்து 60 வயசுக் கிழவன் வரைக்கும் பெயர் சூட்ட, கவுண்டமணி வீட்டு வாசலில் கியூ கட்டி இருப்பார்கள். முன்பு ஒரு முறை, தான் அடிக்கடி, 'ங்ணா’ போட்டுப் பேசுவது கவுண்டமணியிடம் இருந்து எடுத்ததுதான் என்று விஜய் தெரிவித்திருந்தார். ஏங்ணா, இந்த விளம்பரம்கூட அந்த ஜோக்கோட ரீமேக்காங்ணா?

டவுட் 2:  தயாரிப்பாளர் சங்கம் தனக்கு காட்டு காட்டு எனத் தண்ணி காட்டும் நிலையில் 'நலிந்த தயாரிப்பாளர்களுக்கு 5,000 ரூபாய் உதவி செய்வதாக’ அறிவித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். எங்க ஆபீஸ்லேயே இதைவிட அதிகமாக போனஸ் தருகிறார்கள். இந்த 5,000 ரூபாயை வைத்து எப்படி தீபாவளி கொண்டாடுவார்கள்? சரி, அதுபோகட்டும், எஸ்.ஏ.சி. சார்... இந்த 'நலிந்த’ தயாரிப்பாளர்கள் எல்லாம் விஜயை வெச்சுப் படம் எடுத்தவங்களாங்ணா?

மகாத்மா காந்தியை அரசாங்கமே 'தேசப் பிதா’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும் என்று லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற ஆறாம் வகுப்பு மாணவி, பிரதீபா பாட்டீலுக்கும் மன்மோகன் சிங்குக்கும் கடிதம்  எழுதியிருந்தார். வழக்கம்போல நோ ரெஸ்பான்ஸ். 'தனது கடிதத்துக்கு என்ன பதில்?’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டார் அந்த மாணவி. 'அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் இல்லை’ என்று உள்துறை அமைச் சகம் தெரிவித்தது. விவரம் தெரியாத சின்னப்புள்ள என்பது சரியாத்தான் இருக்கு. இதையே சோனியா காந்திக்குத் 'தேசத் தாய்’ அங்கீகாரம்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தால் அரசியல் சட்டத்தையே திருத்தி இருக்க மாட்டாரா மன்மோகன்?

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆதரவு திரட்டப்போன ஒபாமா தனது ஆதரவாளர்களுடன் பீர் அருந்தி ஆதரவைத் திரட்டி இருக்கிறார். இதே மாதிரியான செய்தியை மூன்று மாதங்களுக்கு முன்பும் படித்தேன். ஒபாமா சார், நீங்க உண்மையிலேயே பிரசாரத்துக்குத்தான் போறீங்களா? இல்லை, இதான் சாக்குன்னு நைஸா ரெண்டு பீர் வுட்டுக்கப் போறீங்களா?

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

விஜயகாந்த் ஒரு பத்திரிகையாளரை 'நாயே’ என்று திட்டிய செய்தியைப் படித்தபோது என் மைண்ட் வாய்ஸ் கேட்டது... ஏன் வடிவேலு 'தலைநகரம்’ படத்தில் 'நாய் சேகர்... நாய் சேகர்... நாய் சேகர்’ என்று முகத்தை மூன்று முறை திருப்புகிறார்?