பெயர் வேண்டாமே... ப்ளீஸ்...

''ஒரு ஆசிரமத்தில் இருந்து நான் ஒரு ஆண் குழந்தையைச் சட்டப்படி தத்தெடுத்தேன். இப்போது அவனுக்கு வயது எட்டு. சட்ட விதிப்படி தத்தெடுத்த குழந்தைக்கு ஆறு வயதாகும்போதே அவன்/அவள் தத்தெடுக்கப்பட்ட உண்மையைச் சொல்ல வேண்டும் என்று எனது நண்பர்கள் சிலர் கூறுகிறார்கள். அது உண்மையா... அவசியமா?''

''தத்தெடுத்த குழந்தையிடம் அப்படி உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சொல்லித்தான் ஆக வேண்டும் என்று சட்டமும் வலியுறுத்தவில்லை. சூழலைப் பொறுத்தோ அல்லது குழந்தையின் மனப் பக்குவத்தைப் பொறுத்தோ, தேவைப்பட்டால் உண்மையைச் சொல்லலாம். அதுவும்கூட அந்தக் குழந்தையின் பிற்கால நலனைக் கருத்தில்கொண்டுதான். ஏனெனில், பின்னாளில் உங்கள் சொத்தில், தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு இருக்கும் உரிமையை உங்கள் உறவினர்கள் வழங்க மறுக்கும் சூழல் ஏற்பட்டால், அதற்கேற்ப உங்கள் குழந்தை முன்தயாரிப்போடு இருக்கும். ஆனால், எட்டு வயதில் தத்தெடுத்த பின்னணியை நீங்கள் சொன்னால், குழந்தையின் மனது பாதிக்கப்படலாம். குழந்தை மனது பாதிக்காமல், இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துக்கு வந்த பிறகு உண்மையைச் சொல்லுங் கள்.''

ஆ.கிருஷ்ணன், விழுப்புரம்.

'ஓய்வுக் காலத்தில் கஷ்டப்படாமல் இருக்க எப்படிச் சேமிக்கலாம்? வழிகாட்டுங்களேன்...''

''ஓய்வுக்குப் பிறகு மாதம் எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கிடுங்கள். அதற்குத் தேவையான பணத்தை மாதாமாதம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்பளிக்கும் சேமிப்புத் திட்டத்தில் உங்கள் சேமிப்பை முதலீடு செய்யுங்கள். 'எனக்கு எந்த ரிஸ்க்கும் வேண்டாம்’ என்று நீங்கள் நினைத்தால், அஞ்சல் அலுவலகம், வங்கி சேமிப்புத் திட்டம், பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் ஓய்வுக் காலத்தில் சிரமப்படக் கூடாது என்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் திட்டம் நியூ பென்ஷன் திட்டம். உங்களுக்கு நிதி மேலாண்மை குறித்த அடிப்படை புரிதலும் நேரமும் இருந்தால் மியூச்சுவல் ஃபண்ட் பென்ஷன் திட்டம், காப்பீட்டு நிறுவன பென்ஷன் திட்டம், பங்குகள் மற்றும், கடன்பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். ஆனால், கவனம் தேவை. உங்கள் வசதி, தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தக்க நிதி ஆலோசகரின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுங்கள்!''

க.சுமதி, ஆழ்வார் திருநகர்.

''என் மகள் இப்போது ப்ளஸ் ஒன் படிக்கிறாள். அவளுடைய பாடப் புத்தகத்தில் ஒரு பையனின் போட்டோ இருந்தது. அவனைக் காதலிக்கிறாளா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?''

''போட்டோ வைத்திருப்பதாலேயே அவனை உங்கள் மகள் காதலிக்கிறாள் என்ற முடிவுக்கு வராதீர்கள். உங்கள் மகளிடம் அந்த போட்டோகுறித்து இயல்பாக... மிகவும் இயல்பாக விசாரியுங்கள். கொஞ்சமும் கோபப்படாமல், ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். தோழனாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காகவோ அந்தப் படத்தை உங்கள் மகள் வைத்திருந்தால், எந்தப் பிரச்னையும் இல்லை. ஒருவேளை உங்கள் மகள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாலோ, ஏதேனும் உண்மையை மறைப்பதுபோலப் பேசினாலோ, உங்கள் மகளை அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டு ஆறுதலாகப் பேசுங்கள். 'அம்மா... உன் நல்லதுக்குத்தான் எதுவும் சொல்வேன். உன்னைக் கண்டிக்கிறதுனால எனக்கு எந்த சந்தோஷமும் கிடைக்கப்போறது இல்லை. நீ நல்லா இருக்கிறது மட்டும்தான் என்னைச் சந்தோஷப்படுத்தும்’ என்று அவள் உங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் செயல்படுங்கள்!''

எம்.லதா, சென்னை.

''என் மகளுக்கு வயது 20. என் மகனுக்கு வயது 15. டீன் ஏஜ் எட்டியதும் என் மகளிடம் செக்ஸ் தொடர்பாகவும், ஆண் - பெண் உறவு தொடர்பாகவும் சில அடிப்படை விஷயங்களைச் சொல்லிப் புரியவைத்தேன். இப்போது என் மகள் நட்பு வட்ட உறவுகளுடன் தெளிவான மனநிலையில் பழகிவருகிறாள். ஆனால், என் மகனிடம் அது குறித்துப் பேசத் தயக்கமாக இருக்கிறது. என் கணவரிடம் பேசச் சொன்னால், நான் என்ன பேச என்று கேட்கிறார். இப்போது நான் என்ன செய்வது?''

''முதலில் உங்கள் கணவரின் கூச்சம் போக்கி அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பையனுக்கு எதைப் பற்றி சொல்லித்தரலாம், அதை எப்படி சொல்லித் தர வேண்டும், அவன் கேட்கும் சந்தேகங்களைக் களைவது எப்படி என்றெல்லாம் உங்கள் கணவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சரியான நபர், சரியான நேரத்தில், சரியாக வழிகாட்டவில்லை என்றால், தவறான நபர்களால், தவறான முறையில் செல்லும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் இன்றைய இணைய யுகத்தில் அநேகமாக இப்போதே உங்கள் மகன் அனைத்தையும் தெரிந்துகொண்டு இருப்பான். இந்த சமயத்தில் ஆண் - பெண் உறவு, ஹார்மோன்கள் ஏற்படுத்தும் மாற்றம், உடல் அங்கங்களைத் தொடுவதால் ஏற்படும் சிலிர்ப்புகள் போன்றவற்றை உங்கள் கணவரே கற்றுக்கொடுப்பது... உங்கள் மகனின் மன நலனுக்கு நல்லது. தாமதிக்காமல் உடனே செயல்படுங்கள்!''