Published:Updated:

''விஜயகாந்த் என்னைவிட காமெடி பீஸுண்ணே!''

''விஜயகாந்த் என்னைவிட காமெடி பீஸுண்ணே!''

''விஜயகாந்த் என்னைவிட காமெடி பீஸுண்ணே!''

''விஜயகாந்த் என்னைவிட காமெடி பீஸுண்ணே!''

Published:Updated:

கோயில் காளைபோல் திரியும் பேச்சுலர்கள், குடும்பஸ்தன் ஆன பிறகு... கோயில் குருக்கள்போல பரமசாதுவாகிவிடுவார்களே, அப்படித்தான் ஆளே மாறிவிட்டார் ஜே.கே.ரித்தீஷ்.

''என்னாச்சு சார், ஆளையே காணோம்...?''

''ஏ... யப்பா, எல்லோரும் இதே கேள்வியைக் கேட்கிறீங்க. நான் ராமநாதபுரம் தொகுதிக்குள்ள பிஸியா இருந்தேண்ணே. எம்.பி. பணிகள் நிறைய இருக்கு. அதனால சென்னைக்கு அடிக்கடி வர முடியலை. எந்த அளவுக்கு பப்ளிசிட்டியை லைக் பண்ணேனோ, இப்ப அப்படியே ஆப்போசிட்டா மாறிட்டேண்ணே. இப்போ பேச்செல்லாம் கிடையாது ஒன்லி செயல்தான்னு போய்க்கிட்டு இருக்கேண்ணே!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''விஜயகாந்த் என்னைவிட காமெடி பீஸுண்ணே!''

''உங்க தாத்தா சுப.தங்கவேலன்கூட சண்டை போட்டுட்டீங்க...இப்போ ராசியாகிட்டதா சொல்லிக் குறாங்களே...?''

''ராசியா....நானா? சான்ஸே இல்லை. அது சண்டைலாம் ஒண்ணுமில்லைண்ணே... உரிமைக்குக் குரல் கொடுத்தேன். அவ்வளவுதான். அவர் என்னைப் பத்திக் கேவலமாப் பேசிக்கிட்டுத் திரிஞ்சாரு. பதிலுக்கு நானும் ஒருசில வார்த்தைகள் கொஞ்சம் கூடக்குறையப் பேசுனேன். வெட்கத்தைவிட்டு சொல்றேன். நான் எம்.பி. ஆகறதுக்குப் பெரிய தடையா இருந்ததே அவருதான். சீட்டை அவர் பையனுக்குக் கொடுக்கலைனு நேரடியாத் தலைவர்கிட்ட போய் என்னைப்பத்தி 'காமெடிப் பீஸு... எழுத்துக் கூட்டி வாசிக்கக்கூடத் தெரியாத பயலுக்கு எம்.பி. சீட்டா?’ அது இதுனு சொல்லி ஆட்டையக் கலைக்கப் பார்த்தாருண்ணே.  எனக்கு இருந்த மக்கள் செல்வாக்கால எம்.பி. தேர்தல்ல 2,94,945 வாக்குகள் வாங்கி ஜெயிச்சுக் காட்டுனேன். இப்போ மாவட்டச் செயலாளருக்கான தேர்தலைத் தலைமைக் கழகம் நடத் துது. அவருக்குப் போட்டியா நானும் நிக்கிறேன்... தலைவர் நல்ல முடிவு எடுப்பாருனு நம்புறேன்!''

''விஜயகாந்த் பத்தி...''

''அவரு என்னைவிட காமெடி பீஸுண்ணே. காமராசர், அண்ணானு பெரிய தலைவருங்க பேசுன இடம்னே சட்டமன்றம். அங்கே போயி, தான் ஒரு டம்மிங்கிறதைக் காட்டிப்புட்டாரு.  நெட்ல பார்த்தீங்கள்ல, என்னை விட்டுட்டு இப்பல்லாம் அவரைத்தான் ஜனங்க கலாய்க்கிறாங்க!''

''முன்னமாதிரி தி.நகர் மலேசியன் ரெஸ்டாரெண்ட் பக்கம் உங்களைப் பார்க்க முடியலைனு அந்த ஏரியாவில் பொரிகடலை வியாபாரம் பண்றவர் சொல்றாரே?''

''எப்பயாச்சும் போறேண்ணே...  சத்தமில்லாம பல உதவிகளை செஞ்சுக்கிட்டுதான் இருக்கேண்ணே. முன்னமாதிரி பணத்தைத் தண்ணியா வாரி இறைக்குறதில்லை. போனா... பெருங்கூட்டம் கூடிடுது. அதான் காரணம். அடுத்து எங்க ஆட்சி வரட்டும் அப்போ பாருங்க என்னோட பவரை!''

''சினிமாலாம் என்னாச்சு...?''

''வேட்டைப் புலி ஆடியோ ரிலீஸுக்குத் தயார்ணே... மொதல்ல மாவட்டச் செயலாளர் தேர்தல்ல ஜெயிக்கணும். அதுக்குப் பிறகுதான் ஷூட்டிங். நடுவுல கொஞ் சம் சிக்கன், மட்டன்னு நிறைய சாப்ட்டு சாப்ட்டுத் தொப்பை போட்ருச்சு. கொஞ்சம் அதைக் கரைக்கணும்!''

''இந்திப் படத்துல நடிக்கப்போறதா பேச்சு இருக்கு போலிருக்கே?''

''ஆமாண்ணே... எம்.பியா டெல்லிக்குப் போயி இந்தியும் பேசுற அளவுக்குக் கத்துக்கிட்டேன். வேட்டைப் புலியை 'துஷ்மன்’னு டப்பிங் பண்ணி மும்பைல விடலாம்னு திட்டம். என்னோட ஓப்பனிங் ஸாங் குக்கு சீனப் பெருஞ்சுவர், ஆப்கானிஸ்தான் டோரா போரா குன்றுனு லொக்கேஷன் பார்த்திருக்காங்க. ஓப்பனிங் ஸாங்குக்குள்ள தொப்பையைக் கரைச்சுட்டா, ஒரு எட்டுப் போயிட்டு வந்துரவேண்டியது தான்!''

- ஆர்.சரண்