Published:Updated:

இடுப்பு வலி... ஜில்ஜில் களி!

இடுப்பு வலி... ஜில்ஜில் களி!

இடுப்பு வலி... ஜில்ஜில் களி!

இடுப்பு வலி... ஜில்ஜில் களி!

Published:Updated:

''வழக்கமா அந்தரங்கம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஆண்கள்தான் விரும்பிப் பார்ப்பாங்க. ஆனா கேப்டன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'சமையல் மந்திரம்’ நிகழ்ச்சியைப் பெண்களும் சேர்ந்து பார்ப்பதுதான் எனக்கான கிரெடிட்'' என்று உற்சாகத்தோடு பேசுகிறார் அருண் சின்னையா. சமையல் மந்திரத்தில் அந்தரங்கப் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்வதோடு, மூடுக்கேற்ற உணவுகளைச் சமைத்துக்காட்டும் சித்த மருத்துவர். விடலைப் பருவத்தில் இனக் கவர்ச்சி வராமல் இருக்க, 'குட்டுவைக்கும் மொட்டு ரோஜா குல்கந்து’ அயிட்டத்தை அவர் சமைத்துக்காட்டும் 'அழகில்’ அசந்துபோனேன்.

இடுப்பு வலி... ஜில்ஜில் களி!

''அந்தரங்கப் பிரச்னையை மிகப் பெரிய குறையாக நினைத்துக்கொண்டு பலபேர் மனசுக்குள் புழுங்குகிறார்கள். தனிப்பட்ட சில நபர்கள் மட்டுமே மருத்துவரை நாடுகிறார்கள். அவை ஆங்கில மருந்துப் பொருட்களாக இருப்பதால்தான், அதிகப் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. அதனால்தான் சித்த மருத்துவ உணவுகளை அறிமுகப்படுத்துகிறோம். உணவில் இருந்துதான் உணர்வு வரும். உணர்வுதான் உறவுச் சேர்க்கைக்கு ஆதாரம். இதைச் சித்த மருத்துவ உணவுகளே சொல்கின்றன. மூட்டு வலிக்குக் கடுகு சாதம், ஆண்மை வீரியம் பெற அமுக்கரா கிழங்கு, விந்து வளர்ச்சிக்கு ஆல் வள்ளிக்கிழங்கு, நரம்புப் புத்துணர்ச்சிக்குப் புடலங்காய்ப் பொறியல், பாலுறவு உந்து சக்திக்கு ஆட்டுக் கறி, கொண்டைக் கடலை, விறைப்புத்தன்மைக்கு ரசம், இடுப்பு பலம் பெற உளுந்துக் களி'' என்று பார்ட் பார்ட்டாகப் பிரித்துமேய்கிறார் டாக்டர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இடுப்பு வலி... ஜில்ஜில் களி!

''இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியாவில் 50% பேரால்தான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. அதற்குக் காரணம் ஒரே மாதிரி யான உணவுகளைத் திரும்பத் திரும்ப சாப்பிடுவதே. எனவே 100 வகை உணவுகளையும் சாப்பிட்டால், உடல் வலுப் பெறும்.

இடுப்பு வலியால் அவதிப்பட்ட ஒருவர் என்னைத் தேடி வந்தார். 15 வருஷமா இடுப்பு வலியில் அவதிப்பட்டவருக்கு நான் கொடுத்த ஜில் ஜில் உளுந்துக் களியைச் சாப்பிட்டதும் ஒரே நாள்ல சரியாப்போச்சு'' என்கிறார் பெருமையாக.

அருண் சின்னையாவைவிட ஆச்சர்யம், நந்தினிதான். அந்தரங்கப் பிரச்னைகளை அலசும்போது கொஞ்சமும் சங்கடப்படாமல் சிரித்த முகத்துடன் இருக்கிறார்.

''செக்ஸ்ங்கிறது இயற்கையான விஷயம். பல சந்தேகங்களுக்குத் தெளிவு கிடைக்கும்னு நம்பிக்கை யோட இருக்கும் நேயரா இருந்துதான் கடிதங்களைப் படிக்கிறேன். என்னால் எல்லா வயசுக்குரிய நபர்களுக்கும் பாலியல் புரிதல் கிடைக்குதே.  

குழந்தை ஒரு வரம்னு என்னால மத்தவங்களுக்குப் புரியவைக்க முடியுதேனு சந்தோஷப்படறேன். இதுல சங்கடமோ, கூச்சமோ எனக்குத் துளியும் கிடையாது. ஆரம்பத் துல வீட்ல பயங்கர எதிர்ப்பு இருந்துச்சு. 'இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு எல்லாம் காம்பியரிங் பண்ணாதே’னு சொன்னாங்க. ஆனா இப்போ நிகழ்ச்சியோட ரெஸ்பான்ஸ் பார்த்து ஓ.கே. சொல்லிட்டாங்க'' என்கிறார்.

ஓ.கே... ஓ.கே!

- நாகு