Published:Updated:

சென்னையில் ஒரு இராக்காலம்!

சென்னையில் ஒரு இராக்காலம்!

சென்னையில் ஒரு இராக்காலம்!

சென்னையில் ஒரு இராக்காலம்!

Published:Updated:

பரபரப்பான சென்னையை எப்போதாவது  இரவில் பார்த்திருக்கிறீர்களா? அவ்வளவு அழகு.அத்தனை அமைதி. ஒரு மழை நாளின் இரவில் சென்னை மாநகரைச் சுற்றப் புறப்பட்டேன்...

சென்னையில் ஒரு இராக்காலம்!

இரவு 11 மணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவல்லிக்கேணி ரத்னா கஃபே பார்க்கிங் அந்த இரவிலும் நிறைந்து இருந்தது. எல்லா டேபிளிலுமே சாம்பார் இட்லியை 'இரு ஸ்பூன்’ பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

இரவு 11.30

கோஷா மகப்பேறு மருத்துவமனை. பிரசவத்துக்கு உள்ளே சேர்க்கப்பட்டு இருக்கும் அம்மாவைக் கேட்டு விசும்பிக்கொண்டு இருந்த ஒரு பெண் குழந்தையைச் சமாதானப்படுத்திக்கொண்டு இருந்தார் ஓர் மூதாட்டி. வெளியே சைக்கிள் கேன் டீ-க்கு நல்ல வியாபாரம்.

சென்னையில் ஒரு இராக்காலம்!

இரவு 12.10

துறைமுகம் காவல் நிலையத்தைத் தாண்டி சாலையின் இடது பக்கமாகத் திரும்பினால், ஒரு சிறிய கோயிலின் வாசலில் இரண்டு திருநங்கைகள் படுத்து இருந்தனர்.

'ஒங்க புக்குல நடிகைங்க போட்டோல்லாம் பெருசு பெருசாப் போடுறீங்களே, அதே மாதிரி எங்க போட்டோவையும் போடுவீங்களா?’ என்றபடி விதவிதமாக போஸ் கொடுத்தனர்.

இரவு 12.25

ஒரு ஷாப்பிங் மாலின் வாசலில் அந்நேரமும் உற்சாகமாக இளைஞர்கள். ''மச்சி, எங்கேடா சிகரெட் கிடைக்கும்?'' என்று ஆர்வமாக விசாரித்துக்கொண்டு இருந்தார் ஓர் இளைஞர். ''காலையிலே நுங்கம்பாக்கத்திலே இன்டர்வியூ இருக்குடா. சீக்கிரம் எந்திருச்சுக் கிளம்பணும்'' என்ற குரலைக் கேட்டுக்கொண்டே கடந்தேன்.

சென்னையில் ஒரு இராக்காலம்!

இரவு 12.40 மெரினா கடற்கரை...

கலங்கரை விளக்கம் அருகே சில இளைஞர்கள் உற்சாக ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தனர். அதற்கு சற்றுத் தள்ளி ஒரு காதல் ஜோடி. (காலமெல்லாம் காதல் வாழ்க!) இன்னும் சற்று தூரத்தில் ஏழு பேர் அடங்கிய ஒரு குடும்பம். அதில் மூன்று இளம் பெண்கள். கிளம்பும்போது மணல் பரப்பைச் சுத்தம் செய்யும் மாநகராட்சி ஊழியர் தனது வேலையைத் தொடங்கினார்.

இரவு 1.10

கச்சேரி சாலையில் கும்மிருட்டு. அவ்வப்போது கடந்து செல்லும் வாகன வெளிச்சத்தை நம்பி ஒரு முதியவர் சாலை ஓரமாக நடந்து வந்துகொண்டு இருந்தார். பவர் கட் என்பதால் கடற்கரையில் தூங்கப்போகிறாராம்.

அங்கிருந்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், சித்திரைக்குளம், மந்தைவெளி வழியாகச் சென்று கீரீன்வேஸ் சாலையை அடைந்தேன். அமைச்சர்கள் வசிக்கும் அந்தச் சாலை அர்த்த ஜாமத்திலும் மின்விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்தது. எல்லா வீட்டு வாசலிலும் காவலுக்கு போலீஸ்காரர்கள்.

-கோபாலகிருஷ்ணன்