பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

எனக்கும் விகடனுக்குமான உறவு நிலத்துக்கும் விதைக்குமான உறவைப் போன்றது. அதுவும் காற்றில் அடித்து வந்து போடப்பட்ட ஒரு விதைபோல இருந்த என்னையும் ஏற்றுக்கொண்டு, முளைக்க இடம் தந்து, என்னை ஒரு விருட்சமாக்கியது விகடனே!

ஆனந்த விகடன் வெறும் வார இதழ் இல்லை; அது தமிழ் வாசக ரசனையின் உன்னத அடையாளம். தமிழ்க் குடும்பங்களின் அறிவார்ந்த துணை!

நான் விகடனில் எழுதுகிறேன் என்பதைவிடவும், விகடனின் 30 ஆண்டு கால வாசகன் என்பதில்தான் எனக்குப் பெருமிதம் இருக்கிறது. காரணம், விகடனின் வழியாக நான் பெற்றவை ஏராளம்.

எங்கள் குடும்பத்தில் 50 வருஷங்களுக்கும் மேலாக விகடன் வாசித்துக்கொண்டு வருகிறோம். ஒரு வகையில் சிறிய ஊர்களில் வசித்த எல்லாத் தமிழ்க் குடும்பங்களையும்போல விகடன் வழியேதான் எங்களுக்கு உலகமும், அதன் சகல விசித்திரங்களும், பரபரப்பும் அறிமுகம் ஆகின. என் சிறு வயதில் எனது அம்மாவும் சித்திகளும் யார் முதலில் விகடன் வாசிப்பது என்று போட்டி போட்டுச் சண்டையிடுவதைக் கண்டிருக்கிறேன்.

ஆனந்த விகடன், ரயில் நிலையங்களில் உள்ள புத்தகக் கடைகளுக்கு முன்பாகவே வந்துவிடும் என்று ரயில் நிலையத்தில் காத்துக்கிடந்த பள்ளி வயது எனக்கு உண்டு. வாசித்து முடித்த விகடனை, பழைய பேப்பர் கடையிலும் போட மாட்டார்கள். கதைகள், தொடர் கதைகள், ஆன்மிகக் கட்டுரைகள் எனத் தனியே பிரித்து, பைண்டிங் பண்ணி வைத்துக்கொள்வார்கள். விகடனில் தேவையற்றது என்று எதுவும் இல்லை என்ற எண்ணம் எல்லோரிடமும் இருந்தது. அதைப் பாது காத்தார்கள். மறுபடி மறுபடி தேடி எடுத்துப் படித்தார்கள்.

அப்படிப் பழைய விகடனில் வெளியான கேலிச் சித்திரங்களின் ஒரு பைண்டிங்கை நெடுநாட்கள் எனது பாடப் புத்தங்களுடன் சேர்த்து பையிலே வைத்துக்கொண்டு சுற்றியது உண்டு. அதில் இருந்த மாலியின் கேலிச் சித்திரங்கள் அற்புதமானவை. அதைப் பார்த்தவுடனே சிரிப்பு தானே பீறிடும். அதுபோலவே மதன் வரைந்த ரெட்டைவால் ரெங்குடு. சிரிப்புத் திருடன் சிங்காரவேலு உள்ளிட்ட கேலிச் சித்திரங்கள். நகைச்சுவையின் உச்சம், சொற்களின் துணை இல்லாமல் சிரிப்பதுதானே.

நான் ஆனந்த விகடனின் வாசகனாக மாறியதற்கு முக்கியக் காரணம் சுஜாதா. அவரைப் படிப்பதற்காகவே நான் விகடனைக் கையில் எடுத்தேன். மாய வசீகரம்கொண்ட அவரது எழுத்து நடை அபாரமானது. எதையும் சுவாரஸ்யமாக எழுதிவிடக்கூடிய தனித்துவம் அவருக்குக் கைகூடி இருந்தது. சுஜாதா எழுதிய சிறுகதைகள், தொடர்கதைகள், அறிவியல் கட்டுரைகள், கேள்வி-பதில்கள், கற்றதும் பெற்றதும் என்று பேக் பைப்பரின் இசையில் மயங்கி அவரைப் பின்தொடர்ந்து செல்லும் எலியைப்போலவே எழுத்தின் பின்னால் சென்றுகொண்டு இருந்தேன்.

சுஜாதாவின் தொடர்கதைகளை வாசித்துவிட்டு, அடுத்த வாரம் எப்போது வரும், ஏன் ஒரு வாரத்துக்கு ஏழு நாட்கள் இருக்கின்றன என்று பலரும் சலித்துக்கொண்டது விகடனில் அவர் எழுதியபோது மட்டுமே நடந்தது. அவருக்காகவே வாராவாரம் காத்திருந்து விகடன் வாசித்திருக்கிறேன். வாசித்த இரண்டு நாட்களுக்கு அதைப்பற்றி நண்பர்களுடன் பேசி விவாதித்துச் சண்டையிட்டு இருக்கிறேன். சுஜாதா தனது எழுத்தின் வழியே ஓர் இளம் தலைமுறையை உருவாக்கினார். நானும் அதில் ஒருவனாக இருந்தேன்.

இதுபோலவே விகடனை எனக்குப் பிடித்த தற்கு இன்னொரு காரணம் அதில் வெளியான சிறுகதைகள். அதுவும் முத்திரைக் கதைகள், வைர மோதிரக் கதைகள். நட்சத்திரக் கதை கள் என்று மாறுபட்ட சிறந்த கதைகள் விகடனில் தொடர்ச்சியாக வெளியாகி, பரந்த வாசகக் கவனத்தைப் பெற்றன. சிறுகதைப் போட்டிகளைத் தொடர்ச்சியாக நடத்தி, தமிழ் சிறுகதை உலகை வளப்படுத் தியதும் ஆனந்த விகடனே. விகடனில் ஒரு சிறுகதையை எழுதிவிட்டால், எழுத் தாளர் என்ற அந்தஸ்தை அடைந்துவிடலாம் என்ற எண்ணம் அன்றும் இருந்தது... இன்றும் இருக்கிறது. அது உண்மையும்கூட. அந்த வாசிப்பும் ரசனையுமே நான் சிறுகதைகள் எழுதுவதற்குப் பெரிதும் தூண்டுகோலாக இருந்தன!

நான் கல்லூரி படிக்கும்போது விகடனின் மாணவப் பத்திரிகையாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருந்தேன். அதற்கான நேர்காணலில், 'ஏன் எப்போதுமே பத்திரிகையாளர்களை உருவாக்குகிறீர்கள்? எழுத்தாளர்களையும் உருவாக்கலாம்தானே?’ என்று கேட்டேன். 'உங்களுக்கு விருப்பம் இருந்தால் நிச்சயம் சிறுகதைகள் எழுதுங்கள். அது தரமாக இருந்தால், கட்டாயம் வெளியிடப்படும்’ என்று ஒரு கல்லூரி மாணவனாக இருந்த எனது சிறுகதைகளைத் தொடர்ச்சியாக விகடனில் வெளியிட்டு, என்னை உலகறியச் செய்தது விகடன்.

இதைவிடவும், என் வாழ்வின் நெருக் கடியான தருணம் ஒன்றில் விகடன் தந்த அன்பும் அக்கறையும் என்னால் ஒரு போதும் மறக்க முடியாதது.

20 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் இருந்து சென்னைக்கு ஓடி வந்திருந்தேன். என்ன செய்யப்போகிறேன்... எங்கே போவது என்று தெரியாது. வட இந்தியாவுக்குப் போய் சில ஆண்டு காலம் அலைந்து திரிய வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டு இருந்தேன். டெல்லி ரயில் இரவுதான் புறப்படுகிறது. பகலில் என்ன செய்வது?

எனக்குத் தெரிந்த ஒரே இடம் ஆனந்த விகடன் அலுவலகம். மதியம் 3 மணி இருக்கும். அண்ணா சாலையில் உள்ள விகடன் அலுவலகத்தின் வாசலில் வந்து நின்று அந்த பெயர்ப் பலகையைப் பார்த்தபடியே இருந்தேன். உள்ளே போவதற்குத் தயக்கமாக இருக்கிறது.

நான் வாசித்து வியந்த ஜெயகாந்தன், சுஜாதா, கி.ராஜநாராயணன் துவங்கி எத்தனை பெரிய பெரிய எழுத்தாளர்கள் அங்கு வந்து போயிருப்பார்கள் என்று நினைத்தபடியே நின்றுகொண்டு இருந்தேன்.

உள்ளே போய் என்ன கேட்பது, என்ன பேசுவது என்று தெரியவில்லை. யாரைப் பார்ப்பதாகச் சொல்வது என்றுகூடத் தெரியாது. அத்தனை லட்சம் வாசகர்கள்கொண்ட ஒரு பத்திரிகை அலுவலகம், இவ்வளவு அமைதியாக இருக்கிறதே என்ற வியப்புடன் வெளியே நின்று இருந்தேன்.

எனது தோளில் ஒரு ஜோல்னா பை. அதற்குள் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவல். ஒரு மாற்று உடை. மனது முழுவதும் குழப்பம். அலுவலக வரவேற்பாளரின் முன்பாகப் போய் நின்றபடியே, 'நான் மதன் சாரைப் பார்க்க வந்து இருக்கிறேன்’ என்றேன். 'நீங்கள் யார்’ என்று கேட்டார். என்ன பதில் சொல்வது என யோசித்துவிட்டு, 'நான் ஒரு வாசகன். விருதுநகரில் இருந்து வருகிறேன்’ என்று சொன்னேன். போனில் பேசிவிட்டு, 'மேலே சென்று பாருங்கள்’ என்றார். நான் அலுவலகத்தின் மாடி ஏறி நடந்து சென்று, மதன் அவர்களின் அறைக்குள் நுழைந்தேன்.

அவர் புன்சிரிப்போடு என்னை உட்காரவைத்து, 'சொல்லுங்கள்... எங்கு இருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார். 'நான் எஸ்.ராம கிருஷ்ணன், விருதுநகரில் இருந்து வருகிறேன்’ என்றேன். உடனே அவர், 'நம்ம பத்திரிகையில் சிறுகதைகள் எழுதி இருக்கிற ராமகிருஷ்ணன் தானே?’ என்று கேட்டார்.

தலையசைத்தேன். அவர், 'உங்க சிறுகதை ரொம்ப நல்லா இருக்கு, நம்ம ஆபீஸ்லயே உங்களுக்கு நிறைய வாசகர்கள் இருக்கிறாங்க. நம்ம எம்.டிகூட உங்க சிறுகதைகளைப் படித்துப் பாராட்டி சொல்லியிருக்கார். என்ன செய்றீங்க? உங்க போஸ்ட் கார்டு ஒண்ணுகூடப் பார்த்தேன். வேலை இல்லாம இருக்கிறீங்களா?’ என்று கேட்டார்.

நான் அன்று மிகக் குழப்பமான மன நிலையில் இருந்தேன். 'இங்கே எழுதுவதற்கான சூழல் இல்லை. என்னிடம் பணம் இல்லை. எங்காவது போய் சம்பளத்துக்கு வேலை செய்ய மனம் இல்லை’ என்றேன்.

அவர் சிரித்தபடியே, 'எனக்கு உங்க பிராப்ளம் நல்லா புரியுது. பத்திரிகை ஆபீஸ்ல வேலை செஞ்சா, கொஞ்ச நாள்ல எழுதுற ஆசை போயிடும். 25 வயசுல எல்லாப் பசங்களுக்கும் வீடு பிடிக்காமப் போயிடும். அதுக்கு நிறைய ரீசன்ஸ் இருக்கு. நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்வேன்.

எல்லாமே நாம நினைக்கிறதுபோல எப்பவும் நடந்திராது. எங்காவது ஒடிப் போயிட்டா மட்டும் பிரச்னை தீர்ந்துபோயிடாது. ஆனா, எதுக்காகவும் நாம விருப்பத்தை கைவிட்டுறக் கூடாது. நீங்க என்ன ஆகணும்னு நினைக்கிறீங்களோ... அதை கெட்டியாப் பிடிச்சுக்கோங்க. விடாதீங்க. நிச்சயமா உங்களால் ஒரு நல்ல எழுத்தாளரா வர முடியும். நான் உங்க எழுத்துக்களைப் படிச்சதால சொல்றேன். கட்டாயம் பெரிய ரைட்டரா வர முடியும்’ என்றபடியே, 'என்ன சாப்பிடுறீங்க?’ என்று அன்போடு கேட்டார்.

அவரது பதிலும் அதில் இருந்த அக்கறையும் அதுவரை எனக்குள் இருந்த குழப்பத்தைத் துடைத்து எறிந்ததுபோல் ஆக்கியது. 'ஒரு நிமிசம் இருங்க’ என்ற மதன் வெளியே சென்றுவிட்டு உள்ளே திரும்பி வந்து, 'எம்.டி-யைப் பார்த்துட்டுப் போங்க’ என்றார்.

நான் விகடன் எம்.டி பாலசுப்ரமணியன் அவர்களைக் காண்பதற்காக அவரது அறைக்குள் சென்றேன். அவர் என்னை வரவேற்ற விதம், காட்டிய அன்பு, பேச்சில் இருந்த நேசம், என்னை நெகிழவைத்துவிட்டது. அவர், 'நீங்கள் விரும்பினா, உடனே ஒரு தொடர்கதை எழுதலாம். உங்களால நல்லா எழுத முடியுது. வெரி டிஃபரென்ட் ஸ்டைல் ஆஃப் ரைட்டிங். நிறைய ஊர் சுத்திப் பாருங்க. அப்போதான் லைஃப் புரியும். ஆனா, எதுக்காகவும் எழுதுறதை விட்றாதீங்க. அதோடு, உங்களுக்கு எது தேவைன்னாலும் கேளுங்க. நான் கட்டாயம் செய்றேன்’ என்று பரிவோடு சொன்னார்.

அன்று அவர்கள் இருவரும் என் மீது காட்டிய அக்கறையும் வழிகாட்டுதலுமே என்னை சென்னையிலேயே நிறுத்திவைத்தது. டெல்லி ரயிலுக்கு வாங்கிய டிக்கெட்டைத் தூர எறிந்தேன். அன்று அவர்கள் சொன்னவை வெறும் வார்த்தைகள் இல்லை.

சில வருடங்களுக்குப் பிறகு, என்னை அழைத்து பத்திகளும் சிறுகதைகளும் எழுதவைத்து... எனக்கென ஒரு பெயரையும் அடையாளத்தையும் உருவாக்கியது விகடன்தான். அந்த நன்றி என்றும் மனதில் ஆழமாக இருக்கிறது.

யாரோ ஓர் இலக்கற்ற இளைஞன், பைத்தியக்காரத்தனமாக ஏதோ பேசுகிறான் என்று புறக்கணித்துவிடாமல், சரியான ஆலோசனைகள் தந்து அவர்கள் என்னை நடத்திய விதமும், எழுதுவதற்குத் தந்த சுதந்திரமும் விகடன் எழுத்தாளர்கள் மீது எப்போதும் கொண்டிருக்கும் மாசில்லாத அன்புக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று இப்போது புரிகிறது.

ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஏதாவது ஒரு காரணம் இருக்கிறது என்பார்கள். நான் அறிந்த வரை விகடனின் மகத்தான வெற்றிக்குப் பின்னால் இருப்பது அதன் வாசகர்களும் அவர்கள் மீது விகடன் காட்டும் அக்கறையுமே!

வாசகர்கள் விகடனை வெறும் வார இதழாகப் படித்துக் கடந்து போய்விடுவது இல்லை. அதில் தாங்கள் கற்றுக்கொண்டதை வாழ்வில் செயல்படுத்திப் பார்க்கிறார்கள். எனது துணையெழுத்தில் எழுதிய கட்டுரைகளுக்குக் கிடைத்த நேரடி அனுபவங்களில் இதை நன்றாக உணர்ந்து இருக்கிறேன். அதுபோல விகடனில் தாங்கள் வாசித்து அறிந்த உண்மைகளைப் பலர் அறியப் பகிர்ந்துகொள்கிறார்கள். சுட்டிக்காட்டும் அரசியல் அதிகாரப் போலித்தனத்துக்கு எதிராகத் தாங்களும் கோபம் கொள்கிறார்கள். நல்ல விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆதரவு தருகிறார்கள்.

விகடன், வாசகர்களை ஒருபோதும் மலினமான தந்திரங்களால் ஏமாற்றுவது இல்லை. அது வாசகர்களை அறிவார்ந்தவர் களாகக் கௌரவப்படுத்துகிறது. அதனால், வாசகர்களும் அதைத் தங்களின் அறிவுத் துணையாகக் கைக்கொள்கிறார்கள்.

அவ்வகையில், நானும் பல லட்சம் விகடன் வாசகர்களில் ஒருவனே. அதுதான் பெருமையாக இருக்கிறது!