Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

புகைப்படம்போல நினைவுத் திறன் ((Photographic memory அல்லது இன்னும் சரியான பதத்தில் Eidetic memory)  என்ற பதத்தைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

 எனக்கு இந்தத் திறன் இல்லை. அத்தகைய திறனற்ற சாதாரணர்களுக்கு ஒரு டெக் தீர்வு வந்திருக்கிறது. தீப்பெட்டியில் பாதி அளவு இருக்கும் இந்தச் சாதனத்தைச் சட்டையில் செருகிக்கொண்டால் போதும். 30 நொடிகளுக்கு ஒரு முறை தானாகவே புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கும். சாதனம் இயங்கத் தேவைப்படும் பேட்டரி இரண்டு நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும். பேட்டரியை சார்ஜ் செய்ய கணினியில் இணைக்க வேண்டும். இணைக்கும்போது பேட்டரி சார்ஜ் ஆவதுடன் தானாகவே படங்கள் இணைய அக்கவுன்ட்டில் பதிவேற்றம் ஆகிவிடுகிறது. இப்படிப் பதிவாகும் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடங்களைப் பற்றிய புவி தகவல்களையும் (Geolocation) ஒருசேரச் சேர்த்துச் சேமித்துக்கொள்கிறது. மெமோடோ என்ற இந்தச் சாதனம் எடுக்கும் படங்களைத் தொகுத்துப் பார்த்துக்கொள்ள ஐ போனிலும் ஆண்ட்ராய்டிலும் மென்பொருட்களும் ரெடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிவிழி

நல்ல படங்கள் சிலவற்றை நீங்கள் ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ பகிர்ந்துகொள்ளலாம். மெமோடோ வாங்க, அதன் வலைதளம் செல்லுங்கள் http://memoto.com/  சும்மா புகைப்படங்களை எடுத்துவைத்துக்கொள்வது உங்களுக்கு சலிப்பாகத் தெரிகிறதா? உடல் ஆரோக்கியத்தைக் கருத்தாகப் பேணுபவரா நீங்கள்? உங்களுக்கு என FuelBand  என்ற பெயரில் கையில் அணிந்துகொள்ளும் பிரேஸ்லெட் போன்ற சாதனத்தை, இந்தக் கட்டுரை எழுதப்படும் நாளில் ஆப்பிள் கடைகளில் வெளி யிட்டு இருக்கிறது Nike நிறுவனம். இந்தச் சாதனத்தை அணிந்துகொண்டால் நீங்கள் நாள் முழுக்க எங்கே, என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் போன்ற விவரங்களைத் தொடர்ந்து பதிவுசெய்துகொண்டே வரும்.

இந்த நடவடிக்கைகள் மூலம் எவ்வளவு கேலரிகள் கரைத்திருக்கிறீர்கள் என்பதைக் கணக்கிட்டுச் சொல்லிவிடும். இந்தத் தகவல்களை, சாதனத்துடன் இருக்கும் ப்ளூ டூத் மூலம் உங்களது ஐ போன்/ஆண்ட்ராய்டு அலைபேசி மூலம் பார்த்துக்கொள்ளலாம். எப்போதும் மஞ்சத்தில் தவழ்ந்தபடி இருக்கும் உருளைக் கிழங்காக (Couch Potato) இருந்தால், உங்களைப் படு ஆக்டிவ்வான பலராமனாக மாற்ற ஊக்குவிக்க FuelBand  உதவலாம். சாதனம் எப்படி இயங்குகிறது என்பதைப் பார்க்க இந்தக் காணொளியைச் சொடுக்குங்கள்... http://youtube/TtfJAyjkkGs.

அறிவிழி

இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது, நீங்கள் இருக்கும் இடம் உலர்ந்து ஈரம் அல்லாமல் இருக்கலாம். ஆனால், கட்டுரையை எழுதும் இந்த நாளில் நியூயார்க், சென்னை எனத் தெரிந்த இடங்களில் எல்லாம் மழையும் புயலும்தான். இந்த இயற்கைச் சீண்டலைச் சாக்காக வைத்துக் கிண்டலாக நிணீஜீ நிறுவனம் கீழ்க்கண்ட ட்வீட்டை அனுப்ப, //சாண்டி புயலில் பாதிக்கப்பட்ட அனைவரும் பத்திரமாக இருங்கள். நாங்கள் நிறையவே ஷாப்பிங் செய்யப்போகிறோம் இன்று. நீங்க எப்படி?// என்ன உணர்வு கெட்டத்தனம் என்று வலுவான பின்னூட்டங்கள்.

இதைப் படித்தபோது, இதெல்லாம் என்ன ஜுஜுபி எனத் தோன்றியது எனக்கு. சமூக ஊடகங்களில் முன்பின் யோசிக்காமல் தகவல் பகிர்ந்துகொண்டு படாதபாடுபட்டவர்கள் சிலரைப் பார்க்கலாம். ஜார்ஜியா மாநிலத்தில் ஆசிரியையாகப் பணியாற்றுபவர் ஆஸ்லி பெய்ன். விடுமுறைக்காக ஐரோப்பா சென்றவர், நண்பர்களுடன் குடித்துக் கும்மாளம் அடிக்கும் படங் களைப் பகிர்ந்துகொண்டதோடு, ஓரிரண்டு ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளில் அச்சேறக் கூடாத வார்த்தைகள் இருக்க, பள்ளி நிர்வாகம் 'வேலையில் இருந்து விலகிக்கொள்ளுங்கள்’ எனக் கேட்டுக்கொண்டது. 'ஹே... ஹே... இதெல்லாம் டூ மச். இது என் சொந்த வாழ்க்கை. இதில் நான் எப்படி இருந்தால் என்ன?'' என்று கேட்டு வழக்கு மன்றம் சென்றாலும் ஆஸ்லியின் வாதம் செல்லுபடி ஆகவில்லை.

பிரதிநிதிகள் சபை உறுப்பினரான (கிட்டத்தட்ட நம்மூர் எம்.பி.) அந்தோணி வீனர் அரை குறை ஆடைகளில் கிளுகிளுப்பாகப் படங்கள் எடுத்து, அதை ட்விட்டர் மூலம் பல இளம் பெண்களுக்கு அனுப்பிவைக்க, அதில் ஒருவர் மீடியாவுக்கு அனுப்பிவைக்க, வீனரின் அரசியல் வாழ்க்கை வீணாய்ப் போனது. காமெடியன் கில்பெர்ட் காட்ஃப்ரீட் கிண்டலாக இப்படி ஒரு ட்வீட்டை அனுப்பினார் 'இப்போதுதான் எனது பெண் தோழியும் நானும் பிரிந்தோம். ஜப்பானில் சொல்வதுபோல், 'இன்னொன்று எந்த நொடியிலும் மிதந்து வரும்’. ஜப்பானிய சுனாமியின்போது பிணங்கள் மிதந்ததைக் கொடூரமாகக் கிண்டல் செய்ததை அவரை ஸ்பான்சர் செய்யும் ஜப்பானிய கம்பெனி ஆஃப்லக் ரசிக்கவில்லை. உடனடியாக கான்ட்ராக்ட் கேன்சல் ஆனது. இப்படி மாதம்தோறும் பல சம்பவங்களைக் கேள்விப்படுகிறேன். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு இவை உதாரணங்கள்.

முக்கியமாக, இது எதிலுமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை கிரிமினல் குற்றமாக வழக்கு தொடரவில்லை. இந்தியாவில் சமீபத் தில் சில வழக்குகளில் பதிவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாக அறிகிறேன். கருத்துச் சுதந்திரத்தைக் காவல் துறை கட்டுப்படுத்துவது நல்ல முன்மாதிரி அல்ல. இதைப் பற்றிய கருத்துகளை @antonprakashக்கு ட்வீட்டுங்கள்.

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism