. ஆர்.ரேவதி, சென்னை-75. .
''எனக்கு 21 வயது. ஊட்டியில் இருந்து சமீபத்தில்தான் மாற்றலாகி சென்னைக்கு வந்திருக்கிறேன். 'இன்னும் சில வாரங்களில் சென்னையில் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி எடுக்கும். சென்னை வாசிகளாலேயே அதைச் சமாளிக்க முடியாது. நீங்கள் எப்படித்தான் சமாளிக்கப் போகிறீர்களோ!’ என்று என் சக ஊழியர்கள் ஏகமாக பில்ட் - அப் கொடுக்கிறார்கள். இந்தக் கோடை காலத்தை எதிர்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?''

கிருஷ்ணமூர்த்தி, டயட்டீஷியன்.

''பதற வேண்டாம் ரேவதி. மலைப் பிரதேசத்தில் இருந்த வரை உங்களுக்குக் கிட்டத்தட்ட வியர்வை என்றாலே என்னவென்று தெரியாமல் இருந்திருப்பீர்கள். அதனால், வியர்வை மூலம் உடலின் கழிவுகள் வெளியேறாமலேயே இருந்திருக்கலாம். அதோடு ஒப்பிடுகையில், நாம் பெரிதாக எந்த வேலையும் செய்யாமலேயே, சென்னை வெயிலில் உடலின் கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறிவிடும் என்பது நல்ல விஷயம்தான். சென்னை வெயிலுக்கு உங்கள் உடல் பழகும் வரை சில முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளுங்கள். வெயில் உக்கிரமாக இருக்கும் பகல் பொழுதுகளில் முடிந்த வரை வெளியில் நடமாடாதீர்கள். தவிர்க்க முடியாத சமயங்களில், குடை நிழலில் பதுங்கிக்கொள்ளுங்கள். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், உங்களால் முடிந்த வரை அதிக அளவு நீர் அருந்துங்கள். நீர்ச் சத்து அதிகம் உள்ள காய்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். பாட்டில் குளிர்பானங்களை முற்றாகத் தவிர்த்துவிடுங்கள். காரமான உணவுகள் வெயிலுக்கு முதல் எதிரி. அதனால், கூடுமானவரை மோர்க் குழம்பு, கஞ்சி வகைகளை உணவாக்கிக்கொள்ளுங்கள். கொளுத்தும் வெயிலிலும் ஊட்டி குளுமையை அனுபவிக்கலாம்!''

பெயர் வேண்டாமே... ப்ளீஸ்!

''ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் முடித்து மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து கணவருடன் தனிக் குடித்தனம் இருக்கும் பெண் நான். இப்போது நான்கு மாதம் கர்ப்பம். இத்தனை மாதங்களுக்குப் பிறகும் என் கணவர் என்னிடம் எந்த அந்நியோன்யமும் இல்லாமல்தான் நடந்துகொள்கிறார். மனசுவிட்டு எந்தவொரு விஷயத்தையும் என்னிடம் பேசுவது இல்லை. என் மாமியார் வீட்டில் என்ன நடக்கிறது என்பதுகூட எனக்குத் தெரியாது. இதனால் வீட்டின் விசேஷங்களில் கலந்துகொள்வது இல்லை என்று மாமியார் வீட்டில் எனக்குக் கெட்ட பெயர். ஏன் என் கணவர் என்னிடம் அந்நியமாக நடந்துகொள்கிறார்? இந்த இடைவெளியைப் போக்க நான் என்ன செய்ய வேண்டும்?''

ராஜ்மோகன், உளவியல் நிபுணர்.

''நீங்கள் இருவரும் மனம்விட்டுப் பேசுவது மட்டுமே பிரச்னைக்கான ஒரே தீர்வு. அடிப்படையில் அனைவருக்குள்ளும் அன்பு நிறைந்திருக்கும். ஆனால், அதை எதிராளி உணர்ந்துகொள்ளும் வகையில் வெளிப்படுத்தத் தெரியாமல் இருப்பார்கள். பெரும்பாலும் வளரும் சூழ்நிலையைப் பொறுத்தே அவர்களின் இயல்பும் குணமும் அமைந்திருக்கும். அடிக்கடி சின்னதாகப் பாராட்டுவது, தினசரி நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வது, 'உனக்கென நான் இருக்கிறேன்’ என்று தனது இணைக்கு உணர்த்திக்கொண்டே இருப்பது போன்ற பழக்கங்களின் நன்மைகள் குறித்து உங்கள் கணவரிடம் மறைமுகமாக எடுத்துச் சொல்லுங்கள். புகுந்த வீட்டுச் செய்திகளை கணவர் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லாமல், நீங்களே மாமியார்-மாமனாருடன் அடிக்கடி பேசுங்கள். எவ்வளவுதான் வேலை இருந்தாலும், தினமும் சிறிது நேரம் உங்கள் கணவருடன் நேரம் செலவிடுங்கள். அவருடைய குடும்பத்தினரை உங்கள் குடும்பமாக நீங்கள் நினைப்பதை அவருக்கு உணர்த்துங்கள். பயப்பட வேண்டாம் பெண்ணே. பயம், பதற்றம் உங்கள் குழந்தைக்கு நல்லது அல்ல. அந்தக் குழந்தையின் வருகைகூட உங்கள் கணவரின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்!''

எம்.சாந்தி, சென்னை-11.

''நான் மார்க்கெட்டிங் துறைப் பணியில் இருக்கிறேன். மாதத்தில் சில முறைகளேனும் ரயிலில் தனியாக இரவுப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். அப்போது சமயங்களில் உடன் பயணிக்கும் நபர் எவரேனும் ஆபாச செய்கை, சமிக்ஞை போன்றவற்றோடு சமயங்களில் முகம் சுளிக்கவைக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். சத்தம் போடலாம் என்று எழுந்தால், போர்வையைச் சுருட்டிக்கொண்டு தூங்கிவிடுகிறார்கள். அது மாதிரியான சமயங்களில் நான் யாரிடம் புகார் அளிப்பது? என் புகார் மீது என்ன நடவடிக்கை இருக்கும்? புகாருக்கு ஆதாரம் கேட்டால் என்ன செய்வது?''

ஆறுமுகம், டி.ஐ.ஜி. ரயில்வே போலீஸ்.

''ஈவ் டீசிங் புகார்களை ரயில்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸாரிடம் தெரிவிக்கலாம். பயணச் சீட்டு பரிசோதகரின் கவனத்துக்கும் கொண்டுசெல்லலாம். கண்டிப்பான நடவடிக்கை இருக்கும். அந்த மாதிரி சமயங்களில் ஆதாரங்களுக்காகக் காத்திருக்க மாட்டார்கள். சூழ் நிலையின் தீவிரம் கருதி நடவடிக்கைஇருக் கும். ரயிலில் நிகழும் பெண்களுக்கு எதிரான செய்கைகள்பற்றி புகார் அளிக்கவே சிறப்புக் கட்டுப்பாட்டுப் பிரிவு ஒன்று பிரத்யேகமாகப் பெண் காவலர்களால் இயக்கப்படுகிறது. அந்த அறையை 9962500500 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். கட்டணம் இல்லாத டோல் ஃப்ரீ எண் அது. பயணிக்கும் ரயில், சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்தால், உடனடியாக அந்தப் பெட்டிக்கு காவலர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள். பெண்கள் கூச்சத்தைத் தவிர்த்து புகார் செய்ய முன் வர வேண்டும். பாதுகாப்பு கருதி, புகார் தாரரின் பெயரைக்கூட வெளியிட மாட்டோம்!''