Published:Updated:

அறிவிழி

அறிவிழி

அறிவிழி

அறிவிழி

Published:Updated:
##~##

இன்னும் நான்கு வருடங்கள்’ -  இதுவரை ட்விட்டரில் அதிகமான அளவில் பகிரப்பட்ட (ட்விட்டர் மொழியில் ரீ ட்வீட்டப்பட்ட) வாசகம் இதுதான். அமெரிக்க அதிபர் ஒபாமா, போட்டியாளர் ராம்னியைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் அனுப்பியதுதான் இந்த ட்வீட்டு. தேர்தல் அன்று காலையில் ஓட்டு போட்ட பின்னர் ட்விட்டர் அலுவகத்தில் சிலரைச் சந்திக்கச் சென்றேன். அவர்களது இன்ஜினீயரிங் குழுவினர் ரொம்பவே பரபரப்பாக இருந்தனர். ட்விட்டர் வரலாற்றிலேயே அதிகமாகப் பயன்பாடு நிகழ்ந்தது நவம்பர் 6-ல்தான் என்பது பின்னர் தெரியவந்தது. ட்விட்டர் எழுதியிருக்கும் இந்த வலைப்பதிவு தேர்தல் நாளன்று ட்விட்டர் எவ்விதம் பயன்பட்டது என்பதைத் தெளிவாக விளக்குகிறது   http://blog.twitter.com/2012/11/election-night-2012.html?m=1

அறிவிழி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபேஸ்புக்கிலும் ஒபாமா சாதனைதான். வெற்றிக்குப் பின்னர் தழுவியபடி இருக்கும் ஒபாமா தம்பதியரது புகைப்படம்தான், ஃபேஸ்புக் வரலாற்றில் அதிகமாகப் பகிரப்பட்டது (ஃபேஸ்புக் மொழியில், டேக் செய்யப்பட்டது). ஆனால், அத்தனை இருந்தும் இணைய உலகத்தைப் பொறுத்தவரை, ஒபாமா வெற்றியால் ரகளையாகப் பிரபலமான நபர் இதுவரை அடையாளம் தெரியாத ஒரு பெண்மணி. சிகாகோவில் ஒபாமா வெற்றியுரை அளித்த மேடையில் அவருக்கு பின்னால் தலையில் அமெரிக்கக் கொடியை சூடியபடி நின்றவர் இணையப் பயனீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ட்விட்டர்

அறிவிழி

முதல் பல்வேறு வகையான தளங்களில் கொடிப் பெண்ணைப் பற்றி கமென்ட்டுகளும் விவாதங்களும். இவர் யார் என்பது நான் இந்த வரியை எழுதும் நேரம் வரை தெரியவில்லை. நீங்கள் படிக்கும்போது தெரிந்திருக்கலாம்.

ஆப்பிளின் ஐ பாட் மினி சென்ற வார வெள்ளிக் கிழமை விற்பனைக்கு வந்தது. அருகில் இருக்கும் ஆப்பிள் கடை திறந்த சில மணி நேரங்களில் சென்றேன். பொதுவாக, ஆப்பிள் சாதனங்கள் வெளிவரும்போது, மிக நீண்ட வரிசையில் தீவிர ஆப்பிள் பயனீட்டாளர்கள் நின்றபடி இருப்பார்கள். அப்படி எதுவும் ஐ பாட் மினிக்கு இருந்ததாகத் தெரியவில்லை. கையடக்கமாக, அழகாக இருக்கும் ஒரு ஐ பாட் மினியை நானும் வாங்கினேன். நான் முழுக்கப் பயன்படுத்திய பின்னர் அதன் செயல்பாடுகளில் திருப்தி இல்லாமல் மாலையிலேயே திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

முக்கியக் காரணங்கள்

 பெரிய சைஸ் ஐ பாடின் திரை தெளிவுடன் ஒப்பிடும்போது, மினி ரொம்பவும் டல்லடிக்கிறது.

 தங்களது பழைய கி5 சிப்பைப் பயன்படுத்தியிருப்பதால், இயக்கமும் ரொம்பவே ஸ்லோ.

 விலை அதிகம். அதுவும் குறிப்பாக, கூகுளின் Nexus 7, அமேசானின் Kindle Fire வகையறாக்களுடன் ஒப்பிடும்போது.

அறிவிழி

மற்ற நிறுவனங்கள் பொறாமை கொள்ளும் இடத்தில் ஆப்பிள் இருப்பது உண்மை என்றாலும், அவர்களது நிலைமை விநோதமானது. தன்னுடன் போட்டி போட்டுத் தன்னையே மிஞ்சும் அளவுக்கு புதுமையாக்கம் செய்யவில்லை என்றால், ஆப்பிளின் கிடுகிடு வளர்ச்சி மட்டுப்பட்டுவிடும் என்பதே உண்மை.

இதைப்பற்றி ஃபேஸ்புக்கில் நான் இட்டிருந்த நிலைத்தகவல் பலரது பின்னூட்டங்களை ஈர்த்ததில் வியப்பு இல்லை. குறிப்பாக, ஹாங்காங்கில் இருக்கும் கே.எஸ்.ராம் 'ஆப்பிள் சாதனங்கள் ஒரு வகையில் கடவுள் நம்பிக்கைபோல. நாத்திகர்கள் எப்போதுமே ஒப்புக்கொள்வது இல்லை... வயதாகும் வரை... மன்னிச்சுக்க வாத்தியாரே... ஐ போனுக்கு அப்பால எதும் கெலிக்க முடியாது.’ என்று எழுதியிருந்த பின்னூட்டம், ஆப்பிள்

அறிவிழி

நிறுவனத்துக்கு என இருக்கும் வெறித்தனமான ரசிகர் படையின் லாயல்டிக்கு ஒரு உதாரணம். ஆப்பிளுக்கு இது ஒரு மிகப் பெரிய பலம்.

தற்போதைக்கு நான் மாறியிருக்கும் உஜாலா சாம்சங்கின் Note II அலைபேசிச் சாதனம். சாதாரண அலைபேசியின் அளவைவிடப் பெரியதாகவும் ஆனால், டேப்லட்டைவிடச் சிறியதாகவும் இருக்கும் இந்த வகை சாதனங்களை Phablet என்கிறார்கள். சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு நடமாடுவது சற்றே சிரமமாக இருந்தாலும், திரையளவு, வேகம் ஆகியவற்றை ஒப்பிடுகையில் Phablet வகையறா விரும்பப் படும் என்றே தோன்றுகிறது.

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism