Published:Updated:

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

தோழியிடம் காதல் சொல்லலாமா?

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

தோழியிடம் காதல் சொல்லலாமா?

Published:Updated:

கி.அன்பழகன், மதுரை-4.

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''நான் நான்கு வருடங்களாக ஒரு பெண்ணுடன் பழகிவருகிறேன். திடீர்என்று எனக்குள் காதல் பரவசம். ஆனால், அவள் என்னுடன் நட்போடுதான் பழகுகிறாள். நட்பு கெடாமல், விரிசல் விழாமல் என் காதலைத் தெரி விப்பது எப்படி? நான் முதலில் தெரிவிக் கலாமா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான்கு வருடங்கள் நன்றாகப் பழகி வருவதாகச் சொல்கிறீர்கள். அப்படியென்றால், உங்கள் தோழி யின் மனநிலை, அவர் எப்படிப்பட்ட வர் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். உங்கள் மீது அவருக் கும் காதல் உண்டாகி இருக்க லாம். அதையே  சின்ன செய்கை மூலம் அவர் வெளிப்படுத்தி இருக்கலாம். நீங்கள் உற்றுக் கவனித்து இருந்தால், அது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சரி, அதை விடுங்கள். சரியோ, தப்போ ஒரு ஆண் முதலில் காதலைத் தெரிவிப்பதைத்தான் ஒரு பெண் விரும்புவாள். அதனால், முதலில் உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள். அது தவறு இல்லை. நட்பு கெட்டுப்போய்விடுமே என்று நீங்கள் பயப்படுவதிலும் அர்த்தம் இருக்கிறது. அந்த அக்கறையை, நீங்கள் எந்த அளவு அவர் மீது காதல்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உங்கள் தோழிக்கு உணரவையுங்கள். ஒருவேளை அவர் உங்களைக் காதலிக்காவிட்டா லும், கடைசி வரை நண்பனாக உங்களை ஏற்றுக்கொள்வார். விருப்பத்தைத் தெரிவிக்கும்போதுதான் இந்தக்குழப்பத்துக்குப் பதில் கிடைக்கும்.  காதலோ... நட்போ... வாழ்த்துகள்!''

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

எஸ்.மீனாட்சி, புதுச்சேரி-2

''நான் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவள். உயர் சாதிப் பையனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு ஒரு மகனும்  மகளும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த வகுப்பின்படி சாதிச் சான்றிதழ் பெறலாம்?''

''அப்பா வழியிலோ அல்லது அம்மா வழியிலோ... நீங்கள் விரும்பும் சாதிச் சான்றிதழைப் பெறலாம். இதற்கென்று எந்த சட்டமும் இல்லை. கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்கள் அப்பா அல்லது அம்மாவின் குடும்பம் சார்ந்து எந்தப் பிரிவிலும் சாதிச் சான்றிதழ் பெறலாம் என்று ஜி.ஓ-வில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கலப்புத் திருமணம் செய்தவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள திருமணப் பதிவாளரிடம் தங்கள் திருமணத்தைப் பதிவுசெய்து இருப்பீர்கள். சாதிச் சான்றிதழ் குறித்து விசாரணை மேற்கொள்ளும்போது இந்தப் பதிவு உதவும். மேலும், கலப்புத் திருமணம் செய்துகொண்டதற்கான சலுகை, அந்தத் தம்பதிக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் கிடைக்கும்!''

ஆர்.நரேன், சென்னை-32.

''பான் கார்டு தொலைந்தால் மீண்டும் பெறுவது எப்படி?''

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''தொலைந்து போன உங்கள் பான் கார்டினை வேறு யாரும்  தவறாகப் பயன்படுத்த முடியாது. அதுகுறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் ஊரில் அமைந்திருக்கும்   பான் கார்டு வழங்கும் அலுவல கத்தில் பான் கரெக்ஷன் விண்ணப்பம் பெற்றுக்கொள் ளுங்கள். அதை நிரப்பி அத்து டன் நீங்கள் பணிபுரிவதற்கான அல்லது படித்துக்கொண்டு இருப்பதற்கான அடையாள அட்டை, இருப்பிட முகவரிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலையும் உங்கள் புகைப்படத்தையும் விண்ணப்பத்துடன் இணைத்து அதே அலுவலகத்தில் சமர்ப்பியுங்கள். கட்டணமாக 100 ரூபாய் செலுத்தினால், 45 நாட்களுக்குள் புது பான் கார்டு பெற்றுக் கொள்ளலாம். பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பத்தில் உங்கள் பெயர், பிறந்த நாள், முகவரி, மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும். தொலைந்துபோன பான் கார்டில் தவறாக இருந்தால், அதை இதன் மூலம்  திருத்திக்கொள்ளலாம். உங்கள் ஊரில் இந்த அலுவலகம் அமைந்திருக்கும் முகவரி அறிந்துகொள்ள www.tin-nsdl.com என்ற தளம் தட்டுங்கள்!''

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

ம.ரவி, சென்னை-44

''இந்திய அரசாங்கம் வழங்கும் 'ஆதார் அடையாள அட்டை’யை எப்படிப் பெறுவது?''

''மத்திய அரசு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கும் அடையாள அட்டை, ஆதார். பெயர், முகவரி, சுய விவரக் குறிப்புகள், கைரேகை போன்ற நுட்பமான குறிப்புகளால் பதிவுசெய்யப்படுவதால் ஆதார் அட்டை எல்லாவிதமான பயன்பாடுகளுக்கும் செல்லத்தக்க வகையில் இருக்கும். ஆதார் அட்டை பெற  தலைமை அஞ்சல் அலுவலகங்களில் 10 ரூபாய் கொடுத்து விண்ணப்பம் பெற வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, சிக்கல் இல்லாத முகவரிச் சான்றிதழ் இணைக்க வேண்டும். உதாரணத்துக்கு ரேஷன் கார்டில் சரியான முகவரி இருக்காது. வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் நகல் போன்ற ஏதேனும் ஒன்றின் நகலை இணைப்பது நல்லது. ஆதார் அட்டை 30 நாட்களில் கிடைத்துவிடும். வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு பொதுவாக அடையாள அட்டை இருக்காது. அவர்களால் சுயதொழில் தொடங்க முடியாது. ஆனால், ஆதார் அடையாள அட்டை இருந்தால், சுய தொழில் தொடங்க முடியும்.''

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism