Published:Updated:

முகம்

சுப.உதயகுமாரன் (மனித உரிமைச் செயற்பாட்டாளர்)பாரதி தம்பி

முகம்

சுப.உதயகுமாரன் (மனித உரிமைச் செயற்பாட்டாளர்)பாரதி தம்பி

Published:Updated:
##~##

சுப.உதயகுமாரன்... இந்தியத் தென்கோடி எல்லையின் இடிந்தகரை கிராமத்தை நோக்கி உலகத்தின் கண்களைத் திருப்பி யவர். சமரசம் அற்ற மக்கள் போராட்டத்தை மனம் தளராமல் நடத்திக்கொண்டு இருக்கும் தமிழன். அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். அவரது பெர்சனல் பக்கங்கள் இங்கே...  

• உதயகுமாரனின் அப்பா பரமார்த்த லிங்கம், ஒரு காலத்தில் தீவிர தி.மு.க-காரர். பெரியார், அண்ணாவின் கொள்கைகளுக்காகப் போராடி, காங்கிரஸ்காரர்களால் தாக்கப்பட்டு இருக்கிறார்; சிறை சென்றிருக்கிறார். நகர்மன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இப்போதும் தி.மு.க. உறுப்பினர்தான் என்றபோதிலும் அணு உலை எதிர்ப்பு நிலைப்பாட்டில் மகனின் போராட்டத்துக்குத் தந்தையின் ஆதரவு உண்டு. ஆனால், உதயகுமாரனின் ஆளுமை அப்பாவால் உருவானது அல்ல... அது அம்மாவிடம் இருந்து வந்தது. அம்மா பொன்மணி, தீவிர காங்கிரஸ் தொண்டர். காந்தியப் பற்றாளர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• முதுகலை ஆங்கிலம் படித்த உதயகுமாரன்... திருநெல்வேலி அகில இந்திய வானொலியில் சில காலம் அறிவிப்பாளராகப் பணிபுரிந்தார். அதன் பிறகு, 1981-ல் எத்தியோப்பியாவுக்கு வேலைக்குப் போனார். அந்த நாட்டு அரசுப் பள்ளிகளில் ஆறு ஆண்டு காலம் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

• 2

முகம்

001 முதல் இந்தியாவில் இருக்கும் உதயகுமாரன், நியூஜெர்ஸி மான்மத் பல்கலைக்கழகம், ஆஸ்திரியாவின் ஐரோப்பிய சமாதானப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியா முழுக்க உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வருகை தரும் பேராசிரியராக இருக்கிறார்.

• எத்தியோப்பியாவில் உடன் பணிபுரிந்த நண்பரின் மகளின் தோழி, மீராவுடன் காதல். 1992-ல் மிக எளிமையாக 'அய்யா வழி’ முறைப்படி நாகர்கோவிலில் திருமணம். 'அகிலத்திரட்டு’ என்ற வைகுண்டநாதரின் புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தை வாசிக்க... தாலி கட்டி டும்டும்டும்.

• தாடி இல்லாத உதயகுமாரனை யாரும் பார்த்திருக்க முடியாது. 1984-ல் தனது சகோதரிகளுக்கு உடல் நலம் சரியில்லாத கவலையில் சவரம் செய்யாமல்விட்டு... அந்த முகம் பிடித்துப்போய் இப்போதுவரை தொடர்கிறார். திருமணத்தின்போதுகூட தாடியை எடுக்கவில்லை.

• நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் படித்தபோது 'எறும்புகள்’ என்ற இலக்கிய விவாத மாணவர் அமைப்பை நடத்தியவர், 'உதயம்’ என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றையும் நடத்தி இருக்கிறார். சமூகப் பிரச்னைகள்குறித்து விவாதிக்க 'நியூ இந்தியா மூவ்மென்ட்’ என்ற அமைப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார். நாகர்கோவிலில் இருந்து வெளியான 'கைவிளக்கு’ என்ற சிறு பத்திரிகையில் கதைகளும் எழுதி இருக்கிறார். ஆனால், அதன் பிறகு கதைகள் எழுதியது இல்லை. ஆங்கிலத்தில் கட்டுரைகளும் கவிதைகளும் அவ்வப்போது எழுதுவது உண்டு.

• சைவ உணவுதான். பல்வேறு நாடுகளில் பணியாற்றிஉள்ளபோதும், ஒரே ஒரு முறைகூட அசைவம் உண்ணாதவர். ஆனால், இடிந்தகரை வந்த பிறகு மீன் சாப்பிடப் பழகி இருக்கிறார்.

• 'பலாத்காரம், திருட்டு, கொலை, கள்ளக் கடத்தல், போதை மருந்துக் கடத்தல்... இவை நீங்கலாக மற்ற எல்லாப் பிரிவுகளின் கீழும் என் மீது வழக்குப் போடப்பட்டுள்ளன’ என்று சிரிக்கிறார். இடிந்தகரைப் போராட்டம் தொடங்கியதில் இருந்து இப்போது வரை சுமார் இவர் மீது 350 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அனைத்திலும் இவர்தான் முதல் குற்றவாளி. இந்தப் பிரச்னைக்கு முன்பு உதயகுமாரன் மீது, சின்ன போக்குவரத்து விதி மீறல் வழக்குகூடக் கிடையாது.

• போராட்டம் நடக்கும் ஒன்றரை வருடத்தில் மூத்த மகன் சூர்யா பரமார்த்தன் 8-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்புக்கும் இளைய மகன் சத்யா பரமார்த்தன் 6-ம் வகுப்பில் இருந்து 7-ம் வகுப்புக்கும் சென்றுள்ளனர். அவர்களின் சமூக அறிவியல் ஆசிரியரோ, இடிந்தகரை மக்களுக்கு அரசியல் அறிவியல் போதித்துக்கொண்டு இருக்கிறார்.

• இடிந்தகரைப் போராட்டம் தொடங்கியபோது மேடையில் பேசிய உதயகுமாரன், ''இந்தப் போராட்டம் இன்னும் இரண்டு வருடங்களுக்கு நடக்கும்'' என்று சொன்னபோது யாரும் நம்பவில்லை. ஆனால், இப்போது ஒன்றரை வருடத்தை நெருங்கிவிட்டது. ''எப்படியும் அடுத்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் வரையிலும் இதே நிலை நீடிக்கும். அதன் பிறகே இந்தப் போராட்டம் ஒரு முடிவை எட்டும்'' என்று இப்போது சொல்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism