Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

'பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பெரியோர்களே, தாய்மார் களே, எனது உயிரினும் மேலான டெக் அன்பர்களே...

 உங்களில் பலரை மகிழ்ச்சிப்படுத்தும் நற்செய்தி வந்தேவிட்டது. டேப்லெட் சாதன உலகில் நம்பர் ஒன் ஆக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் கொட்டத்தை அடக்கும் சர்ஃபேஸ் (Surface) டேப்லெட்டைக் கொண்டுவந்துவிட்டது மைக்ரோசாஃப்ட். ஆப்பிள் உயர் அதிகாரிகள் நடுக்கத்தில் இருப்பது உறுதி... என்றெல்லாம் எழுதத்தான் விரும்பினேன். ஆனால், எனது அனுபவம் வேறு. ஆப்பிள் கடை விரித்திருக்கும் மால் ஒன்றின் மறு பகுதியிலேயே அமைந்திருக்கும் மைக்ரோசாஃப்ட் கடைக்குள் நுழைந்ததும், ஆப்பிளைக் காப்பியடிக்க மைக்ரோசாஃப்ட் முயன்றிருப்பது நன்றாகத் தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒளியூட்டப்பட்ட கண்ணாடிச் சுவர்களில் இருந்து, ஊழியர்கள் அணிந்திருக்கும் சீருடை வரை அனைத்திலும் சற்றே ஆப்பிள் சாயல். பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும் சில சர்ஃபேஸ் டேப்லெட்டுகளைப் பார்த்த பின்னர், ஒன்றை வாங்கினேன். புதிதாக சர்ஃபேஸ் வாங்கும் பயனீட்டாளர்களுக்கு ஒரு மணி நேரப் பயிற்சி இலவசம் என்றார் பணத்தை வாங்கி ரசீது தயாரித்தவர். பயனீட்டாளர் தொழில்நுட்பச் சாதனம் (Consumer electronics) ஒன்றின் வெற்றி அதை எளிதாகப் பயன்படுத்த முடிகிற தன்மையில் இருக்கிறது. டேப்லெட்டைப் பயன்படுத்தப் பயிற்சி கொடுக்கிறோம் என்பதே சர்ஃபேஸின் குறைபாட்டைக் காட்டுவதுதான்.

அறிவிழி

வீட்டுக்கு எடுத்துச் சென்று இரண்டு நாட்கள் சர்ஃபேஸைப் பயன்படுத்திய அனுபவத்தை இப்படி வர்ணிக்கலாம்:

உங்களிடம் அதிவேகமாகச் செல்லும் ஃபெராரி கார் இருக்கிறது. ஆனால், அதை ஓட்டுவதற்கு இருப்பது கரடுமுரடான களிமண் சாலை. பிரமாண்டமான, அழகிய மாளிகை. ஆனால், இருப்பது வறட்சியான சஹாரா பாலைவனத்தின் நடுவில். பல்வேறு வகையான, மணமணக்கும் ருசிகர உணவு உங்கள் முன்னால் இருக்கிறது. ஆனால், உங்களுக்கோ பல் வலி!

இப்படித்தான் இருக்கிறது சர்ஃபேஸின் வடிவமைப்பும் பயன்பாடுகளும். பார்ப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் இலகுவான, அழகிய ஹார்டுவேர் வடிவமைப்பு. தொட்டுப் பயன்படுத்தவும் கீபோர்டு மூலம் பயன்படுத்தவும் இருக்கும் வசதி வியக்கவைக்கிறது. ஆனால், சாஃப்ட்வேரைப் பொறுத்தவரை சொதப்பிவைத்திருக்கிறது மைக்ரோ

அறிவிழி

சாஃப்ட். சர்ஃபேஸில் இயங்குவதற்காக விண்டோஸ் ஆர்டி என்ற இயங்குமென்பொருளைத் (Operating System) தயாரித்திருக்கிறது மைக்ரோசாஃப்ட்.கணினியாகவும் இல்லாமல் கன்ஸ்யூமர் சாதனமாகவும் இல்லாமல், ரெண்டும்கெட்டானாக வடிவமைக்கப்பட்டு வேதனை தருகிறது ஆர்.டி. சரி, ஏதாவது விளையாடலாம் என அப்ளிகேஷன்ஸ் பகுதிக் குச் சென்றால், நூற்றுக்கும் குறைவான மென்பொருள்களே சர்ஃபேஸில் இருக்கின்றன. ஆப்பிளின் ஐபோன்/ஐபேடில் இருக்கும் மென்பொருள்களின் எண்ணிக்கை ஆறு லட்சத் தையும் தாண்டிவிட்டது என்பதை இங்கே சொல்லியாக வேண்டும்.

இரண்டு நாட்கள் பயன்படுத்திய பின்னர் பொடி நடையாக நடந்து சர்ஃபேஸைத் திரும்பக் கொடுத்துவிட்டேன். ஆகையால், மைக்ரோசாஃப்ட் அவர்களே... அடுத்த முயற்சி யில் உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்!

உடலில் அணிந்துகொண்டு அரை நிமிடத்துக்கு ஒரு முறை படங்கள் எடுத்துச் சேமிக்க உதவும் கேமரா நன்றாக இருக்கிறது என சில ட்வீட்டுகள் வந்ததால், இந்த வாரமும் ஒரு கேமரா அறிமுகம். கேமராவின் பெயர் லைட்ரோ (Lytro). எடுக்க வேண்டிய காட்சியைப் பல கோணங்களில் பார்த்துவிட்டு, சரியான வெளிச்சம் இருக்கிறதா என்பதைஎல்லாம் தெளிவாக அலசிவிட்டு எடுக்கும் புகைப்படக் கலைஞர்களை அரசியல் மேடைகளில் இருந்து, கல்யாண மேடைகள் வரை பல இடங்களில் பார்த்திருக்கிறோம். பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் நல்லதொரு ஸ்பைஸி ஷாட்டுக்காகத் தலைகீழாக எல்லாம் குட்டிக்கரணம் அடிப்பதைப்

அறிவிழி

பார்த்திருக்கிறோம். ஆனால், இதெல்லாம் தேவை இல்லாததொரு நிலையைக் கொண்டுவந்துவிட்டது லைட்ரோ. பார்த்தால் பழைய கால பயாஸ்கோப்போல இருக்கும் இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி, நீங்கள் புகைப்படங்களை எடுத்துக்கொண்டே செல்லலாம். அவை எடுக்கப்பட்ட பின்னர், அவற்றை ஃபோகஸ் செய்வதில் இருந்து, வெளிச்ச அமைப்பைக் கொண்டுவருவது வரை கணினியில் செய்துகொள்ள முடியும். இதன் பயன்பாடுகளை அவர்களது வலை தளத்தில் பார்ப்பதே நன்று. வலைதள உரலி இதோ... www.lytro.com/

புகைப் பழக்கத்தைக் கைவிட ஆன்லைனில் என்ன உதவி கிடைக்கிறது? www.ucanquit2.org/ : அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் சிகரெட் அன்பர்களுக்காகக் கட்டப்பட்ட தளம் என்றாலும், எல்லாரும் பயன்படுத்திக்கொள்ள ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன இந்தத் தளத்தில். புகையை விட்டுவிட உதவும் 24X7 தொலைபேசி வசதிகூட இருக்கிறது.

 - விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism