Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

மெரிக்க வரலாற்றில் இருக்கும் கலர்ஃபுல் வைபவங்களில் ஒன்று, நவம்பர் மாத இறுதியில் வரும் தேங்க்ஸ்கிவ்விங் (Thanksgiving). 17-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு, ஐரோப்பியர் கள் 'புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலம்’ என்ற ஆர்வத்துடன் குடியேறத் தொடங்கியிருந்த காலம். வருடத்துக்கு ஒரு முறை விளைச்சலுக்காக நன்றி செலுத்தும் பாரம்பரியம்கொண்ட ஐரோப்பியர்கள், அமெரிக்காவிலும் அதை ஆரம்பித்தனர். அவர்களது வருகையை வான்கோழி சகிதம் விருந்தோம்பலுடன் செவ்விந்தியர்களைக் கொண்டாடச் செய்ததாக நம்பப்படுகிறது. சுதந்திர அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நவம்பர் மாதத்தின் கடைசி வியாழன் தேங்க்ஸ்கிவ்விங் என அறிவிக்க, அது நான்கு நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது.

அமெரிக்கச் சமூகத்தில், தேங்க்ஸ்கிவ்விங் என்றாலே, வான்கோழி என்பது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டம். கிட்டத்தட்ட 250 மில்லியன் களுக்கும் மேற்பட்ட வான்கோழிகளைத் தின்று தீர்க்க அமெரிக்கா இந்த வாரம் தயார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1789-ம் வருட தேங்க்ஸ்கிவ்விங்கின்போது, ஜாலி மூடில் இருந்த அதிபர் வாஷிங்டன் ஒரு வான்கோழியைத் தேர்ந்தெடுத்து, அதற்கு 'மன்னிப்பு’ (Pardon) என்பதன் மொழிபெயர்ப்பு; சரியாகச் சொல்வதென்றால், உயிர்ப் பிச்சை கொடுப்பதாகச் சொல்ல, அந்த வான்கோழி இறைச்சி ஆகாமல் தோட்டம் ஒன்றில் அதன் காலம் முடியும் வரை வளர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருட தேங்க்ஸ் கிவ்விங்கின் போதும் 'வான்கோழி மன்னிப்பு’ என்பது ஒரு விநோத பாரம்பரியமானது. இப்படி வாழ்க்கை அளிக்கப்பட்ட வான்கோழிகள் அந்தந்த வருடத்திய 'தேசிய வான்கோழி’களாகப் பெயரிடப்பட்டு, அமெரிக்க அரசுக்குச் சொந்தமான பண்ணை ஒன்றில் சுதந்திரமாக உலா வரும்.

அறிவிழி

சரி, 2012-ம் வருட தேசிய வான்கோழி ஆகும் வாய்ப்பு எதற்கு?

இப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா சமூக ஊடக வித்தகர். வெள்ளை மாளிகையின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தக் கட்டுரை எழுதப்படும் நாளில் இரண்டு வான்கோழிகளின் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. Cobbler மற்றும் Gobbler எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த இரண்டு வான்கோழிகளில் எதற்கு வாழ்வு கொடுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வாக்கெடுப்பு நடக்கிறது. இதென்ன கொடுமை?

அறிவிழி

அப்படியானால், குறைந்த லைக்ஸ் வாங்கும் வான்கோழியின் வாழ்க்கை என்னாகும் எனப் பதறவேண்டாம். 'இதெல்லாம் சும்மா வெளாட்டுக்கு; ரெண்டு வான்கோழியையுமே மன்னிச்சுருவாரு ஒபாமா’ என்கிறது வெள்ளை மாளிகையின் வலைதளம். வெள்ளை மாளிகையின் ஃபேஸ்புக் பக்கத்தின் உரலி www.facebook.com/WhiteHouse.

சென்ற வாரத்தில் மைக்ரோசாஃப்ட்டின் சர்ஃபேஸ் டேப்லெட் வாங்கிவிட்டு, திருப்தி இல்லாமல் திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்று சொன்ன ராசியோ என்னவோ தெரியவில்லை... தொடர்ந்து சர்ஃபேஸ் டேப்லெட்டைப் பற்றிய மறுவினைகள் வந்தபடியே இருக்கின்றன. சர்ஃபேஸைப் பற்றிய செய்திகளை மக்களுக்குத் தொடர்ந்து கொடுக்கும் பிராண்ட் அம்பாசிடராக ஓப்ராவைத் தேர்ந்தெடுத்தது மைக்ரோசாஃப்ட். 14 மில்லியன்களுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்திருக்கும் தனது ட்விட்டர் அக்கவுன்ட்டின் மூலம் ஓப்ராவும் சர்ஃபேஸ்பற்றிய தகவல்களை அவ்வப்போது ட்வீட்டுகளாகத் தெரிவித்தபடியேதான் இருந்தார். இதெல்லாம் நல்லதுதானே எனத் தோன்றுகிறதா? பிரச்னை என்னவென்றால், இந்த ட்வீட்டுகள் சர்ஃபேஸின் போட்டியான ஆப்பிள் ஐபாடில் இருந்து அனுப்பப்பட்டது என்பதுதான்.

அறிவிழி

'சர்ஃபேஸை நேசித்தே ஆக வேண்டும்; 12 சர்ஃபேஸ் டேப்லெட்டுகளை வரும் விடுமுறையின் போது பரிசாகக் கொடுக்க வாங்கியிருக்கிறேன்’ என்று அவர் எழுதிய ட்வீட்டுக்குக் கீழ் ட்விட்டர் ஃபார் ஐபேட் என்று இருப்பதைக் காட்டி, மீடியா மற்றும் வலையுலகம் பகடியபடி இருக் கிறது. ஓப்ராவின் ட்விட்டர் பக்க உரலி https://twitter.com/Oprah. இப்போது சென்றால், முதலில் கொடுக்கப்பட்ட ட்வீட் அழிக்கப்பட்டு, ஐபேட் பெயர் இல்லாமல் மீண்டும் அதே ட்வீட் எழுதப்பட்டு இருப்பது தெரியும். ஆனால், கிண்டலுக்கு உள்ளாகிய முதல் ட்வீட் பலராலும் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு இருப்பதை நீங்கள் கூகுள் சென்று கண்டுபிடித்துக்கொள்ளலாம்.

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism