Published:Updated:

சரிகமபதநி டைரி 2012

வீயெஸ்விபடங்கள் : சொ.பாலசுப்பிரமணியம், உத்ரா

சரிகமபதநி டைரி 2012

வீயெஸ்விபடங்கள் : சொ.பாலசுப்பிரமணியம், உத்ரா

Published:Updated:
##~##

ம்பர்கள் மெல்வதற்கு அவல் கொடுக்கும் வகையில், சென்ற வருட டைரியில் விட்ட இடத்தில் இருந்து தொடங்குவோம்...

'குழல் ஊதும் சபாவை 'இது குப்பை சபா’ என்று கமென்ட் அடித்த இரட்டையருக்கு, அடுத்த சீஸனில் இந்த சபா தேதி கொடுக்குமா என்பது பெரிய கேள்விக்குறி’ - இது, 2011 டைரியின் கடைசிப் பத்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன் ஸ்டேடஸ் அப்டேட்

'குப்பை’ என்று வர்ணிக்கப்பட்ட சபாவின் செயலருக்குச் சுத்தமான மனசு. அற்பமான ஒரு விஷயத்துக்காக ரசிகர்களை வஞ்சிக்க அவர் விரும்பவில்லை. கடந்த ஜூன், ஜூலை மாதத்திலேயே இரட்டையரைத் தொடர்புகொண்டு டிசம்பரில் தேதி கொடுக்க முன்வந்திருக்கிறார் அவர்.

''ஸாரி சார்... எங்களுக்கு எந்தத் தேதியும் சௌகரியப்படாது'' என்று முகத்தில் அடித்தது மாதிரி சொல்லிவிட்டாராம், இரட்டையரில் ஒருவர்.

சரிகமபதநி டைரி 2012

நிற்க, டிசம்பர் பொறந்தாச்சு. முதல் தேதி கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸில் முதல் போணி. நாரதகான சபா அரங்கில் நீதிபதி வி.ராமசுப்ரமணியன் துவக்கிவைத்து, சிக்கில் குருசரணுக்கு 'இசைப் பேரொளி’ விருதும், டாக்டர் ஜோத்ஸ்னா ஜகன்னாதனுக்கு 'நடன மாமணி’ விருதும் வழங்கினார். பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து பறந்து வந்த ஓசி பட்டம் அல்ல இது. மருத்துவம் படித்துப் பெற்ற நிஜமான டாக்டர் பட்டம். மருத்துவம் படிக்கவும் நடனம் கற்கவும் நைரோபியில் இருந்து சென்னைக்குப் புலம் பெயர்ந்தவர் ஜோத்ஸ்னா. இப்போது இரண்டிலும் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார்.

வழக்கமாக, விருது பெறுபவர்களுக்கு கார்த்திக்கில்

சரிகமபதநி டைரி 2012

25,000 கொடுப்பார்கள். இந்த முறை சிக்கிலுக்கும் லேடி டாக்டருக்கும் கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் வரவு. பி.ஓபுல் ரெட்டி மற்றும் பி.ஞானாம்பாள் அறக்கட்டளை சார்பாக பி.விஜயகுமார் ரெட்டியும் திருமதி ப்ரீதா ரெட்டியும் விருது பெறுபவர்களுக்கு வழங்கும் தொகை இது. இன்னும் நிறைய சபாக்களில் ரெட்டி தம்பதியின் இந்தக் கைங்கர்யம் உண்டு. அப்படிக் கொடுக்கும் சபாக்களில் எல்லாம் துவக்க விழா மேடையில் ப்ரீதா ரெட்டியைக் காணலாம். கார்த்திக்கிலும் கண்டோம். கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் சபாக்களுக்கு, ப்ரீதாவை மேடை ஏற்றி, சால்வை அணிவித்து, நாலு வார்த்தை பேசச் சொல்வது ஒருவிதப் பதில் மரியாதை.

அதே முதல் தேதி இரண்டாவது போணி, பாரத் கலாசாரில். டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் துவக்கிவைத்தார். மற்ற சபாக்களைப் போல் அல்லாமல் பாரத் கலாசாரின் துவக்க விழாக்கள் கல்யாண வீடு மாதிரி ரொம்பவும் ஹோம்லியாக இருக்கும். நிர்வாகிகளில் ஒருவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, இன்னொருவர் மைக்கைப் பிடுங்கி எதையோ சொல்லிவிட்டுப் போவார். புரோட்டோகால் எல்லாம் இங்கே பார்ப்பது கிடையாது.

இங்கு விருது கொடுத்த பலரில், நாடகமேடை யில் பல வருடங்கள் சர்வீஸ் போட்டிருக்கும் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் டி.டி.சுந்தரராஜனுக்கு 'நாடக கலா பாரதி’ விருது கொடுத்ததும், தவில் வித்வான் டி.ஆர்.கோவிந்தராஜனுக்கும், பரத நாட்டியப் பிரிவில் உமா ஸ்ரீராமுக்கும் சிறப்பு விருது கொடுத்ததும், நாட்டிய நிகழ்ச்சிகளுக்குப் பல வருடங்களாகப் பாடிவரும் ஹரிபிரசாத், வயலின் வாசித்துவரும் சிகாமணி, மிருதங்கம் நெல்லை டி.கண்ணன், பின்பாட்டு-நட்டுவாங்கம் - நடன வடிவம் பொறுப்பேற்கும் சுவாமிமலை சுரேஷ் ஆகியோருக்கு 'நாட்டிய சங்கீத கலாபாரதி’ விருது கொடுத்ததும் நிஜமாலுமே மெச்சத்தக்கவை.

த்தனை முறை கேட்டாலும் திகட்டாத சாருகேசி ராக வர்ணத்துடன் (லால்குடி ஜெயராமன் இயற்றியது) கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸில் கச்சேரியைக் கலகலப்பாக ஆரம்பித்தார் நித்யஸ்ரீ மகாதேவன். அடுத்து, தர்பாரில் 'மின்சாரக் கண்ணா’ குரலில் ஸ்வரங்களை மேலும் கீழுமாக இவர் பின்னிப் பெடல் எடுத்ததை எந்த அரசர் கேட்க நேரிட்டிருந்தாலும், பொற்காசுகளை வாரி வழங்கி இருப்பார்.

துளியும் பிசிறு இல்லாத தெளிவான குரலில் கீரவாணியை மந்த்ர ஸ்தாயியில் ஆரம்பித்து, படிப்படியாக அதற்கு மெருகூட்டி, கலவரப்படாமல் மேலே எட்டிப் பிடித்து, பல்வேறு சங்கதிகளுடன் சிலம்பாட்டம் ஆடிவிட்டு, மறுபடியும் கீழே இறங்கி வந்து நிறுத்தினார் நித்யஸ்ரீ. இவருடைய இந்த ஆலாபனைக்கு எத்தனை 'லைக்’ வேண்டுமானாலும் போடலாம். யாரும் அரெஸ்ட் செய்துவிட மாட்டார்கள்.

மிருதங்கம் பி.சதீஷ்குமாரும் ஆலந் தூர் ராஜகணேஷ§ம் (கஞ்சிரா) 20 நிமிடங்கள் சத்தமாக 'தனி’ வாசித்தார்கள். அமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால்..?

- டைரி புரளும்