Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

"இந்தத் தொடரில் டெக் சாதனங் களை, அதுவும் ஆப்பிள் நிறுவனம் போன்றவை தயாரிக்கும் விலை உயர்வான சாதனங்களைப் பற்றியே எழுதுகிறாய். இது சாமானிய வாசக னுக்கு ஆயாசத்தை அல்லவா தருகிறது!’ என்று ஃபேஸ்புக்கில் பிங்கினார் அறிவிழி வாசகர். என்னுடைய நோக்கம் மேற்படி சாதனங்களை அறிமுகப்படுத்துவது அல்ல. மாறாக, இந்தச் சாதனங்களின் இயக்கத்தையும் பயன்பாட்டையும் விவரிக்கையில் அது புதுமையாக்கல் சிந்தனை களைக் கொண்டுவர இயலும் என்பதால்தான்.

 'கங்ணம் ஸ்டைல்’ பாடல் தொடர்ந்து சாதனைகளை அடைந்தபடி இருக்கிறது. யூ டியூப் வரலாற்றில் இதுவரை அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்டது கங்ணம் வீடியோதான் என்கிறது கூகுள். அது இருக்கட்டும்; நீங்கள் மானசீகமாக கங்ணம் ஸ்டைலில் ஆடிப் பார்த்திருக் கிறீர்களா? நீங்களே ஆடுவது போன்ற வீடியோ ஒன்றை எளிதாக உருவாக்க முடியும். செல்ல வேண்டிய உரலி  www.jibjab.com/holidays/christmas/gangnam_style

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிவிழி

உங்கள் முகம் கொண்டு தயாரிக்கப்பட்ட வீடியோவின் உரலியை @antonprakash-க்கு ட்வீட்டுங்கள். சிறந்த வீடியோவை சில வாரங்களில் பகிர்ந்துகொள்கிறேன் :)

இந்த வாரத்தில் முக்கியமாகப் பகிர்ந்துகொள்ள விரும்புவது Twine.

சிகரெட் டப்பா அளவுக்கு இருக்கிறது ட்வைன். இதை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ வைத்துவிட்டால், அது இருக்கும் இடத்தின் பல்வேறு தன்மைகளை அளந்து, அதில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் விளைவுகளை புரொகிராம் செய்துகொள்ள முடியும்.

விளக்கமாகச் சொல்கிறேன்...

நாம் இருக்கும் இடத்தில் தட்பவெப்பம், நீர்ப்பதம், வெளிச்சம், சத்தம் எனப் பல தன்மைகள் இருப்பது தெரிந்ததுதான். இந்தத் தன்மைகளைத் தொடர்ந்து கிரகித் துக்கொண்டு, அதன் அடிப்படையில்தான் நாம் இயங்கிக்கொண்டு இருக்கிறோம். உதாரணத்துக்கு, வெயில் பளீரென அடிப் பது தெரிந்தால், வீட்டை விட்டுப் புறப்படும் போது குளிர் கண்ணாடி எடுத்துக்கொள் வோம். மழை பெய்யப்போவது தெரிந்தால், உலரப் போட்டிருக்கும் துணிமணிகளை எடுத்துவருவோம். மறந்துபோய் ஒரு வேளை அபார்ட்மென்ட் கதவை மூட மறந்துவிட்டோமோ என நினைத்தால், பக்கத்து அபார்ட்மென்ட் மாமியைத் தொலைபேசி யில் அழைத்து, கதவு திறந்திருக்கிறதா என்பதைப் பார்க்கச் சொல்வோம்.

ட்வைன் இப்படிப்பட்ட பல்வேறு தன்மைகளைத் தொடர்ந்து அளவிடும் சாதனம். வீட்டிலோ, அலுவலகத்திலோ இருக்கும் வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பில் ட்வைனை இணைத்துவிட்டால் போதும்... உடனடியாக, மேலே நான் குறிப்பிட்ட தன்மைகளை அளவிடத் தொடங்கிவிடும்.

'அதெல்லாம் சரி... ட்வைன் கொடுக்கும் அளவுகள் டெக்னிக்கல் ஆசாமிகளுக்குத்தானே உபயோகமாகும்?’ என்ற எண்ணம் வருகிறதா?

ட்வைனின் அற்புதமான டிசைன் அதன் வெளித் தோற்றத்தில் மட்டும் அல்ல... அதை இணையத்தில் இணைத்ததும் உங்கள் தேவைக்கு ஏற்ப தன்மை/விளைவு களை நிரலிடுவதிலும் இருக்கிறது. ட்வைன் பயன்படுத்துபவர்கள் என்னென்ன செய்தி ருக்கிறார்கள் என்பதைப் படித்துப் பார்த் தேன்.

அறிவிழி

வீட்டுக்குள் குளிர் அதிகமாகி 65 டிகிரி செல்சியஸுக்கும் குறைவானால், தனது அலைபேசிக்கு 'ஹீட்டர் ஆன் பண்ணுடா மடையா’ என்று தானே குறுஞ்செய்தி அனுப்பக் கட்டளை கொடுக்கிறார் ஒருவர். வாஷர் துணிகளைத் துவைத்து முடித்ததும் பலமான குலுங்கலுடன் நிற்கும். அந்த அதிர்வை அளந்து துணிகளைக் காயப்போடுவதற்கான ரிமைண்டர் அனுப்பவைக்கிறார் மற்றொருவர். கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களை ஷெல்ஃபுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, குழந்தைகளிடம் அதைத் திறக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு, ஒருவேளை அவர்கள் திறந்தால், உள்வரும் வெளிச்சத்தை அளந்து அலர்ட் செய்ய புரொகிராம் செய்திருக்கிறார்கள் ஒரு நியூயார்க் தம்பதி.

கல்லூரி முடித்து வேலை தேடுவதற் காக விண்ணப்பித்திருக்கும் பல ரெஸ்யூம் களைச் சென்ற வாரத்தில் மேய்ந்துகொண்டு இருந்தேன். உங்களது ரெஸ்யூமில் குறிப்பிடக் கூடாத சில:

'அடுத்த மார்க் ஸக்கர்பெர்க்காகப் போகிறேன்’ என்று எழுதுவது அபத்தம். அந்த ஆர்வமும் லட்சியமும் இருக்க வேண்டியது முக்கியம். ஆனால், அதை அப்படியே எழுதுவதைப் படிக்கும்போது டூ மச் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

விண்ணப்பிக்கும் வேலைக்குச் சம்பந்தமே இல்லாத அனுபவங்களை விலாவாரியாக எழுதுவது உங்களை வேலைக்கு அழைக்க விரும்புபவருக்கு எரிச்சலை உண்டாக்க லாம்.

அறிவிழி

சில்லறைத்தனமானவற்றை சாதனைகளாகக் காட்டிக்கொள்வது வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கத்தான் உதவும். நான் பார்த்தவற்றில் ஒன்று, '48 மணி நேரமாகத் தூங்காமலே புத்தகம் படித்துச் சாதனை புரிந்தேன்.’

உங்களது அரசியல் சார்பு போன்ற கருத்துக்களை ரெஸ்யூமில் எழுதுவது கண்டிப்பாக நல்லதல்ல.

ரெஸ்யூமில் கொடுக்கப்பட்டு இருக்கும் இமெயில் முகவரி உங்களது பெயரைக் கொண்டிருக்கட்டும். நான் பார்த்த ஒரு இமெயில் முகவரிdrunken-idiot@ என்று முதல் பக்கத்தில் தலைப்புப் பகுதியில் இருந்தது. மற்ற பக்கங்களைப் படிக்கவே இல்லை.

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism