Published:Updated:

ஆஃப் த ரெக்கார்டு

ஆஃப் த ரெக்கார்டு

ஆஃப் த ரெக்கார்டு

ஆஃப் த ரெக்கார்டு

Published:Updated:
ஆஃப் த ரெக்கார்டு

வளைகுடா ஷூட்டிங் முடிந்து வெகுநாள் ஆனாலும் இன்னும் போதைப் பொருள் காமெடி நடிகருக்கு முழு பேமென்ட்டும் கைக்கு வரலையாம். 'பேமென்ட் வந்தால்தான் டப்பிங் பேசுவேன்’ என்று காமெடி அடம் பிடிக்க, கண் கலங்கிக் கை பிசைகிறதாம் வளைகுடா படக்குழு!

ஆஃப் த ரெக்கார்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சண்டையும் பிரிவும் ச்சும்மானாச்சும்தான்னு நினைச்சுக்குவோம். ப்ளீஸ் பசங்களுக்காகவாவது கம் வித் மீ!’ என ரிவர்ஸ் கியர் போட்டு, வாரிசுகள் மூலம் தூது அனுப்பி இருக்கிறாராம் நக்கல் அப்பா. நல்ல விஷயம்!

ஆஃப் த ரெக்கார்டு
ஆஃப் த ரெக்கார்டு

தாகீர்தினா சொல்லும் இரண்டெழுத்து இசை அமைப்பாளர், தன்னிடம் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டுவரும் கவிஞர்களிடம், ''நீங்களே தயாரிப்பாளரைக் கூட்டிட்டு வாங்களேன். படத்துல எல்லாப் பாட்டும் நீங்களே எழுதலாம்'' என்று பிட்டைப் போட, அலறி அடித்து ஓடுகிறார்களாம் கவிஞர்கள்!

ஆஃப் த ரெக்கார்டு

லட்டு தின்ன ஆசைப்படும் ஸ்டார் நடிகர், தான் சிறைப் பறவையாய் இருந்ததைக் கதையாக்கி ஒரு படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம். 'உத்தமன்’ என்று டைட்டிலும் ரெடி. ஜோடியாய் நடிக்க காதல் நாயகியை அணுக, 'என்னைப் பார்த்தா அவ்வளவு இளக்காரமாத் தெரியுதா?’ என்று கேட்டாராம் நாயகி!

ஆஃப் த ரெக்கார்டு

காதலுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் தவித்த அந்த இரண்டெழுத்து நடிகரின் வருத்தம் அது இல்லையாம். அந்த அக்கட தேசத்துக்கிளி, 'டே... நீ என் தம்பி மாதிரிடா!’ என சொன்னதைத்தான் பையனால் தாங்கிக்கொள்ள முடியவில்லையாம்!

ஆஃப் த ரெக்கார்டு

'எப்படி மச்சான் இப்படி?’ என ஃபிகர் மடிப்பதை கோர்ஸாக நடத்தச் சொல்லி நட்பு வட்டமே டார்ச்சர் பண்ணுவதாக அலப்பறைவிட்டுத் திரியும் அந்த மூன்றெழுத்து நடிகரைப் பார்த்து காண்டாகி இருக்கிறார் மற்றொரு மூன்றெழுத்து. 'மச்சான்... எக்குத்தப்பா சிக்கி கேரியரை ஸ்பாயில் பண்ணிக்காதே!’ என போதையிலும் தெளிவாக அட்வைஸ் செய்திருக்கிறார் விசா நடிகர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism