Published:Updated:

லவ் பண்ணுங்க சார்

லவ் பண்ணுங்க சார்

லவ் பண்ணுங்க சார்

லவ் பண்ணுங்க சார்

Published:Updated:
லவ் பண்ணுங்க சார்

வ்வர்ஸ் அதிகமாக உலாத்துற இடம்னு பார்த்தீங்கனா பீச், காபி ஷாப், ஐஸ்கிரீம் பார்லர், பீட்சா ஹட், கே.எஃப்.சி., பூங்காக்கள். இதில் முக்கியமான நாலு இடங்களில் இருக்கிறவங்ககிட்டே காதலர்களோட பிஹேவியர்ஸ் என்னன்னு கேட்டதுக்கு, அவங்க சொன்ன பாய்ன்ட்ஸ் அப்படியே கீழே...

கார்த்திக் (நண்பர்கள் மொபைல் ஷாப்): ''வழக்கமா நம்மகிட்ட ரீ-சார்ஜ் பண்றவங்க எங்கேயாச்சும் இருந்துக்கிட்டு, கால் பண்ணி ஈ.ஸி, ரீ-சார்ஜ் பண்ணச் சொல்வாங்க. அதுல லவ்வர்ஸ் கஸ்டமர்ஸ்தான் அதிகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லவ் பண்ணுங்க சார்

ஒரு நாள் நைட் ரெண்டு மணிக்கு ஒரு பொண்ணு கால் பண்ணி 50 ரூபாய்க்கு ஈ.ஸி. பண்ணிவிடுங்கனு ஒரே அழுகை. நானும் ஈ.ஸி. பண்ணிட்டேன். ஆனா, எனக்கு நைட்டெல்லாம் தூக்கமே இல்ல. காலையில அந்தப் பொண்ணு பணம் கொடுக்க வந்துச்சு. 'ஏம்மா, நைட்டு அப்படி அழுதே?’னு ஆதங்கமா கேட்டேன். ''இல்லைங்கண்ணா... என் புஜ்ஜுகுட்டி (லவ்வர்) கூட நைட்டெல்லாம் சண்டை. திடீர்னு பேலன்ஸ் தீர்ந்துபோச்சு. அதான் அப்படி அழுதேன்’னு சொல்லுச்சு பாருங்க,  நொந்துட்டேன்!''

விக்னேஷ் (பார்ட்டன் காபி ஷாப்): ''மெனு கார்டைக் கொடுத்ததும், என்னன்னே தெரியாத ஏதாவது ஒரு இங்கிலீஷ் காபியை ஆர்டர் பண்ணுவாங்க. பெரும்பாலும் பசங்கதான் பில் கொடுப்பாங்க. ரெண்டு மணி நேரத்துக்குக் குறைஞ்சு யாராவது கிளம்பிட்டாங்கன்னா, அவங்க லவ்வரே இல்லை. புதுசா லவ் பண்றவங்க குறைஞ்சது அஞ்சு மணி நேரமாவது உக்காந்து மொக்கை போடுவாங்க. ரொம்ப நாளா லவ் பண்றவங்க (கையையும் காலையும் அடக்கமா வெச்சிக்கிட்டு இருப்பாங்க. ஈஸியா அடையாளம் கண்டுக்கலாம்) மூணு மணி நேரமும் கடலைதான்!''

ஸ்டீவ்வென்ஸ் (பூஸ்டர் ஜுஸ் ஷாப்): ''ஒரு தடவை காலேஜை கட் அடிச்சிட்டு லவ்வர்ஸ் ஜோடியா வந்தாங்க.ஆப்பீள் ஜுஸ் ஆர்டர் பண்ணி அந்தப் பையன் ஸ்பூன்ல அந்தப் பொண்ணுக்கு ஊட்டிவிடுறான். நாங்களும் மூணு மணி நேரம் மூச்சுத் திணறத் திணற வேடிக்கை பாக்குறோம். கடைசி சொட்டு வரைக்கும் ஊட்டிவிட்டான். இந்தப் பொறுமையை அவன் படிக்கிறதில காட்டி இருக்க லாம்!''

லவ் பண்ணுங்க சார்

பிரவீன் (மெரினா பீச் சுண்டல் வியாபாரம்): ''பீச்சுக்கு லவ்வர்ஸ் மட்டும் வர்றது இல்லை. அவங்களுக்குச் சரிசமமா அங்கிளும் ஆன்ட்டியும் வர்றாங்க. (இந்த எடத்துலதான் நீங்க யோசிக்கணும்) ஆன்ட்டிங்களுக்கு சுண்டல்தான் ரொம்பப் புடிக்கும். யங் லவ்வர்ஸ் சுண்டல் வாங்க மாட்டாங்க (டீசன்டானவங்களாமாம்!). வாட்டர் பாக்கெட் வாங்கி ஒருத்தர் மேல ஒருத்தர் அடிச்சுப்பாங்க. அப்புறம், இன்னும் சொல்ல முடியாத நெறைய விளையாட்டு இருக்கு சார்!''

அதான் எங்களுக்கும் தெரியுமே!

- திலீபன், படங்கள்: ஆர்.முத்துகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism