Published:Updated:

நிருபர் எக்ஸின் டைரி குறிப்புகள்!

நிருபர் எக்ஸின் டைரி குறிப்புகள்!

நிருபர் எக்ஸின் டைரி குறிப்புகள்!

நிருபர் எக்ஸின் டைரி குறிப்புகள்!

Published:Updated:
நிருபர் எக்ஸின் டைரி குறிப்புகள்!

ரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான பிறகும் சற்றும் கிளாமர் குறையாத ஹீரோயின் அவர். ஸ்ரீரங்கத்தில் பிறந்து இந்திய சினிமாவின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர். ஒருநாள், சென்னை தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்தவரைச் சந்திக்கப் போயிருந்தார் நிருபர் எக்ஸ். அவர் மனதில் நடிகையைப் பற்றிய ஒரு கற்பனை இருந்தது. அந்தக் கற்பனையிலேயே விசிட்டிங் கார்டை ரிசப்ஷனில் கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் எக்ஸின் செல்போன் அலற... எடுத்தால் ஹீரோயினின் பி.ஆர்.ஓ. ''மேடம் 3-ம் நம்பர் சூட்ல இருக்காங்க... இப்போ போனா பார்க்கலாம்’ என்றார். எக்ஸ், அவசர அவசரமாகப் போனால், அந்தத் தளத்தில் 'அந்த நடிகையின் அறை இதுதானே?’ என்று கிராஸ்செக் செய்யக்கூட யாரும் இல்லை. துணிந்து கதவைத் தட்டினார். துரதிர்ஷ்டவசமாகக் கதவு அதுபாட்டுக்கும் திறந்துகொண்டு உள்ளே போனது. அங்கே, அந்த 'ஆன்ட்டி’ ஹீரோயின் ஜாக்கெட் பாவாடையோடு சேலை அணியாமல் படு ரிலாக்ஸ்டாக கட்டிலில் படுத்துக்கிடந்தார். எக்ஸைப் பார்த்ததும் டென்ஷனின் உச்சிக்குச் சென்று... காச், மூச்சென்று கத்த... எக்ஸும் தலை தெறிக்க வெளியில் ஓடிவந்தார். ஒருவழியாக பி.ஆர்.ஓ. வந்து சமாதானப்படுத்தி... ஹீரோயினும் சிரித்தபடியே பேட்டி கொடுத்தது தனிக் கதை!

நிருபர் எக்ஸின் டைரி குறிப்புகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெக்கத்திப் பக்க பேச்சாளர் அவர். மண் மணம் மணக்கப் பேசுவார். எக்ஸ் உடன் நல்ல பழக்கம். சும்மா

நிருபர் எக்ஸின் டைரி குறிப்புகள்!

வீட்டுக்குப்போன நிருபரிடம், ''ஒரு போட்டோவை என் இ-மெயில்லேர்ந்து எடுத்துத் தரணும். எனக்கு இந்த கம்ப்யூட்டர்ல அவ்வளவு விவரம் பத்தாது'' என்று அழைத்துப் போனார். பொதுவாக ஒரு போட்டோவை கம்ப்யூட்டரில் சேமிக்கும்போது, அதற்கு முன்பு எந்த ஃபோல்டரில் சேமித்தோமோ அதே இடத்துக்குத்தான் போய் நிற்கும். இந்த விவரம் அவருக்குத் தெரியவில்லை... பாவம். அவர் சொன்ன போட்டோவைச் சேமிக்க ரைட் கிளிக் செய்தால், அது போய் நின்ற ஃபோல்டர் முழுக்க... நிர்வாணப் படங்கள். எக்ஸுக்கு ஷாக். பேச்சாளருக்கு அதைவிட ஷாக். அந்த நேரம் பார்த்து நெற்றி நிறைய பட்டை வேறு போட்டிருந்தார். இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, ''தம்பி, நீங்க சின்னஞ்சிறுசுக. நாங்கல்லாம் வயசான கிழங்கட்டைங்க... இப்படிப் பார்த்துக்கிட்டாதான் உண்டு'' என்று நெளிந்து வளைந்து சிரித்தார்!

பொள்ளாச்சிப் பக்கம் ஒரு ஷூட்டிங். எக்ஸ் அங்கு ஆஜராகி இருந்தார். நடிப்புக்கு இலக்கண மானவரின் வாரிசுதான் ஹீரோ. தாடிக்காரர் இயக்குநர். இந்தப் படத்தின் ஹீரோயின் அப்போது பரபரப்பான நாயகியாக இருந்தார். நம்முடைய நிருபர் எக்ஸுக்கு இயக்குநர் நல்ல பழக்கம் என்பதால், நேரே அவர் தங்கி இருக்கும் அறைக்குச் சென்றார். அப்போது செல்போன் எல்லாம் வரவில்லை. ஹோட்டல் அறைக்குச் சென்றவர் கதவைத் தட்டலாம் என்று கை வைத்தால், அது தொட்டதுமே திறந்துகொண்டது. உள்ளே... அந்த மும்பைப் பைங்கிளியும் தாடி இயக்குநரும் எசகுபிசகாக இருந்தனர். அதிர்ந்துபோன எக்ஸ், அப்படியே ஓசைப்படாமல் திரும்பிவிட்டார். யாரோ வந்துபோன அரவம் உணர்ந்த இயக்குநர், எழுந்து வெளியே வர... அப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோல வணக்கம் போட்டு நலம் விசாரிக்க ஆரம்பித்தார் நிருபர் எக்ஸ்!

- ஆர்.சரண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism