Published:Updated:

சார் போஸ்டர்!

சார் போஸ்டர்!

சார் போஸ்டர்!

சார் போஸ்டர்!

Published:Updated:

''அண்ணே... புதுப் படம்ணே. லட்சக்கணக்குல செலவு பண்ணிப் பெட்டி வாங்கிருக்கோம். எங்க சினிமா போஸ்டரை ஒட்டுறதுக்கும் கொஞ்சம் இடம் கொடுங்கண்ணே'' என்று நாகர்கோவில் நகரில் உள்ள திரையரங்க முதலாளிகள் சலாம் போட்டு நகர, புன்னகையோடு நம்மை வரவேற்கிறார் போஸ்டர் ஜார்ஜ். நோ... நோ... கருங்கல் ஜார்ஜ். தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவராக இருக்கும் இவர் குமரி மாவட்டத்தையே போஸ்டர்களால் கலங்கடிப்பவர்.

சார் போஸ்டர்!

''இப்படி நான் பேரு வெச்சதுக்குப் பின்னாடி ஒரு கதையே இருக்கு. (கோடம்பாக்கத்துக்காரங்க பேனா எடுத்துக்குங்க!). அதுக்கு ஒரு 40 வருசம் பின்னாடி போகணும். அப்போ எங்க கருங்கல் பகுதியில் ரோடு குண்டும், குழியுமா இருக்குனு செப்பனிடச் சொல்லி ஜார்ஜ்னு என் பேரைப் போட்டு போஸ்டர் ஒட்டுனேன். (இப்பவும் அந்த ரோடு அப்படியேதான் சார் இருக்கு... இன்னொரு போஸ்டர்கூட ஒட்டலாம்!). அடுத்த நாள் பஸ்ல ஒருத்தர், 'அண்ணே, நீங்கதானே கருங்கல் பஸ் ரூட்டை நல்லாக்கச் சொல்லி போஸ்டர் ஒட்டுனீங்க... நல்லா இருந்துச்சு’னு சொன்னாரு. அப்பவே யோசிச்சு அடுத்த போஸ்டர்ல இருந்து கருங்கல் ஜார்ஜ்னு போட ஆரம்பிச்சுட்டேன். (ச்சே... என்ன ஒரு ஃபிளாஷ்பேக்டா சாமி!) கடைசியில் அந்த போஸ்டரே எனக்கான அடையாளமா ஆயிடுச்சு. மாசம் 5,000 ரூபாய்க்கு போஸ்டர் அடிப்பேன். ஒட்டுக் கூலி, சாப்பாட்டுச் செலவு, அது இதுனு எக்ஸ்ட்ரா 2,000 ரூபாய் வரைக்கும் செலவாகிடும். இதுவரை 1,500 விதமான போஸ்டர்களை ஒட்டி இருக்கேன். இதில் பிரச்னை, பாராட்டு, நன்றினு எல்லாமே கலந்துகட்டி வரும். மொத்தத்தில் நாம ஆல் ஏரியா கில்லி தம்பி! (விஜய் ரசிகர்கள் கோபப்படாதீங்ணா!)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சார் போஸ்டர்!

போஸ்டர் ரசனையா இருக்குறதைப் பார்த்துட்டு,  நிறையப் பேரு இதை எழுதுறதுக்கு ஏதாவது குழு அமைச்சு இருக்கீங்களானு கேட்குறாங்க. பன்னிங்கதான் கண்ணா கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாத்தான் வரும்னு சூப்பர் ஸ்டார் சொல்ற மாதிரி எனக்கு எப்பவுமே சோலோ பெர்ஃபார்மன்ஸ்தான் பிடிக்கும் தம்பி. தமிழ்நாட்டில் தமிழிலும் டெல்லியில் ஆங்கிலத்திலும் கேரளா வில் மலையாளத்திலும் போஸ்டர் ஒட்டுவேன்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரம். ஜெயலலிதாவைப் பார்க்கப் போயிருந்தப்ப, என்கூட இருந்தவரு 'இவருதான் கருங்கல் ஜார்ஜ்’னு இன்ட்ரோ கொடுத்தாரு. உடனே ஜெயலலிதா 'ஓ... நல்லாத் தெரியுமே... தென் மாவட்டங்களுக்குப் பிரசாரத்துக்குப் போறப்ப இவர் ஒட்டுற போஸ்டரை நிறையப் பார்த்துருக்கேன்’னு சொன்னாங்க. (அ.தி.மு.க-காரங்க குறிச்சு வெச்சுக்குங்க. அம்மா, போஸ்டரை ரசிக்குறாங்களாம்!) கருணாநிதிக்கும் என்னை நல்லாத் தெரியும். அதையெல்லாம் விடுங்க தம்பி... 2006 தேர்தல் சமயம் என்கிட்ட டிஸ்கஸ் பண்ணித்தான் கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளரையே நிறுத்துனாரு விஜயகாந்த்.

அதிகமா சென்சிட்டிவ் விஷயங்களை மையமாக வெச்சு போஸ்டர் ஒட்டுறதால இரவு நேரங்களில் என்னைக் கண்காணிக்கவே உளவுத் துறையில் இருந்து ஆள் போட்டிருக் காங்க. தம்பி இது 'டைம்பாஸ்’ல வரும்போது சொல்லுங்க, நன்றி சொல்லி போஸ்டர் ஒட்டணும்ல!'' என்றார்.

அது!

- என்.சுவாமிநாதன்                                

படங்கள்: ரா.ராம்குமார்

தலைப்பு : சார் போஸ்டர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism