Published:Updated:

ரெட் லைட் விவகாரம்!

ரெட் லைட் விவகாரம்!

ரெட் லைட் விவகாரம்!

ரெட் லைட் விவகாரம்!

Published:Updated:
ரெட் லைட் விவகாரம்!
ரெட் லைட் விவகாரம்!

ரோட்டில் போனால் சிவப்பு விளக்கு சைரன் கார்களின் தொல்லை தாங்க முடியவில்லை. வேகாத வெயிலில் நாம் டிராஃபிக்கில் காத்துக்கிடக்க... சைரனை ஒலிக்கவிட்டு 'ஒய்ங்... ஒய்ங்’ என்று போகிறார்கள். உண்மையில் யார், யாரெல்லாம் சைரன் வைத்த கார்களில் போகலாம்? அரசு அறிவிப்பின்படி மொத்தம் 19 விதமான பதவிகளில் உள்ளவர்கள்தான் சிவப்பு விளக்கைப் பயன்படுத்தலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1.கவர்னர் 2.முதலமைச்சர் 3.துணை முதலமைச்சர் 4.உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி 5.உயர்நீதிமன்ற நீதிபதிகள் 6பாநாயகர் 7.கேபினட் அமைச்சர்கள் 9.சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் 10.மாநில அமைச்சர்கள் 11.அட்வகேட் ஜெனரல் 12. தலைமைச் செயலாளர் 13. போலீஸ் டி.ஜி.பி. 14.சட்டமன்ற மேல்சபைத் தலைவர் 15.மாநிலத் தேர்தல் ஆணையர் 16.நீதித் துறையின் லோக் ஆயுக்தா 17.தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்ட ஆலோசனைக் குழு தலைவர் 18.ஆற்காடு நவாப் முஹம்மது அப்துல் அலி 19.வி.ஐ.பி-களின் பாதுகாப்பு மற்றும் பைலட் வாகனங்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட போலீஸ் எஸ்.பி-கள், மாவட்ட நீதிபதிகள்,பெருநகர மாஜிஸ்திரேட், உயர்நீதிமன்றப் பதிவாளர், டி.ஐ.ஜி-கள், தென் மண்டலச் சட்டம்  ஒழுங்கு ஐ.ஜி.,  தலைமைச் செயலக அனைத்து அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் ஆணையர்கள் தணிக்கைத் துறை அக்கவுன்டென்ட் ஜெனரல், போக்குவரத்து ஆணையர், துறை தலைவர்கள், கருவூல அதிகாரிகள் ஆகியோர் மஞ்சள் விளக்கைப் பயன்படுத்த முடியும்.

மக்கள் பணிகளுடன் நேரடித் தொடர்பு உள்ளவர்களின் பணி, போக்குவரத்து நெரிசலால் தாமதமாகக் கூடாது என்பதுதான் சைரன் கார்களின் அடிப்படை. ஆனால்,  மதுரை ஆதீனம் வகையறாவும் சைரன் காரில்தான் போய்வருகிறார்கள் என்பது விசித்திரமானதுதான்!

- எம்.பரக்கத் அலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism