Published:Updated:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Published:Updated:

வெள்ளையர்களை வெளியேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்டு, 'வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் நடத்தியது காங்கிரஸ். ஆனால், இப்போது எல்லாக் கட்சிகளும் 'சில்லறை வணிகத்தில் வெள்ளைக்காரன் வரக் கூடாது’ என்று போராட, விடாப்பிடியாக வெள்ளைக்காரர்களுக்காகப் பிடிவாதம் பிடிக்கிறது காங்கிரஸ். வெள்ளைக்கார வெள்ளையனை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கும் காங்கிரஸ் அரசு, வெளியேறச் சொல்வது வெள்ளையன் போன்ற நம் உள்ளூர் வணிகர்களை. வாட் எ பிட்டி! வாட் எ பிட்டி!  

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

• நாலு நாளைக்கு முன்னாடி மெகா டி.வி-யில ஒரு பக்திப் பாட்டு பார்த்தேன். சின்ன வயசு சிம்பு ஐயப்பன் சிலைக்கு முன்னாடி, கறுப்பு வேஷ்டிக் கட்டிக்கிட்டு, சந்தனத்தைப் பூசிக்கிட்டு பக்தி மயமா அந்த ஆட்டம் ஆடுறாப்ல... இப்போ என்னடான்னா சைடுக்கு ஒரு ஜிகிடியைச் சேர்த்துக்கிட்டு இந்த ஆட்டம் போடுறாப்ல... என்னா வாழ்க்கைடா இது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• 'வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.’  இப்படித் தமிழக அரசின் அறிவிப்பை பேப்பரில் பார்த்தேன். விஜயகாந்த் அப்ளை பண்ணினா அண்ணா பதக்கம் தருவாங்களா?

• பொதுவாகத் தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் ஆயுள்காலத்தைவிட, ஹீரோயின்களுக்கு ரொம்பவே குறைவு. ரஜினியோடு முதல் படத்தில் ஜோடி சேர்ந்த ஸ்ரீவித்யா, 'அவர்கள்’ படத்தில் ஜோடி சேர்ந்த சுஜாதா எல்லாம் 'தளபதி’, 'மாவீரன்’, படங்களில் அம்மா வேடத்தில் நடித்தார்கள். அடுத்த

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

சில வருடங்களில் மீனாவோ, ஸ்ரேயாவோ, நயனோ ரஜினியின் அம்மா வேடத்தில் நடிப்பது நிச்சயம். விஜய்யோடு 'செந்தூரப் பாண்டி’ படத்தில் கபடி ஆடிய யுவராணியின் டூயட்டை டி.வி-யில் பார்க்கும்போது வயிற்றெரிச்சலாக இருக்கும். இப்போது சீரியல்களில் அம்மாவாக நடிக்கிறார் யுவராணி. அதேபோல, ஹீரோயினாக நடித்து மார்க்கெட் போனவர்கள் காமெடியன்களோடு ஜோடி சேர்வார்கள். நளினி, கனகா, விந்தியா, நிரோஷா என்று பெரிய லிஸ்ட் உண்டு. ஆனால், இதில் என்னை ரொம்பவும் ஆச்சர்யப்படுத்துபவர் ரம்யாகிருஷ்ணன்.

• பாண்டியன், சந்திரசேகர் வகையறாக்களோடு ஹீரோயினாக நடித்த ரம்யா பல நீ....ண்ட வருடங்களுக்குப் பிறகு, ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்தார். இன்னும் சொல்லப்போனால் வயதாக, ஆக அழகான ஒரே ஹீரோயின் ரம்யாகிருஷ்ணன்தான். இன்னொரு ஆச்சர்யம் 'ராஜா எங்க ராஜா’ படத்தில் கவுண்டமணி ஹீரோ. ஹீரோயின் ரம்யாகிருஷ்ணன். கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்த ரம்யாகிருஷ்ணன் பிறகு கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார். உண்மையிலேயே சரித்திரத்தைத் திருப்பிப் போட்டது நீதான் நீலாம்பரி!

• நானும் எவ்வளவோ கட்சிகளைப் பார்த்திருக்கேன்... கட்சியோட கொடிகளைப் பார்த்திருக்கேன். ஆனா, எடியூரப்பா மாதிரி ஒரு ஆளைப் பார்த்ததே இல்லை. எடியூரப்பா 'கர்நாடக ஜனதா கட்சி’ என்று ஒரு கட்சி ஆரம்பித்து ஒரு கொடியையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். கொடியின் நடுவில் யார் படம் இருக்கிறது தெரியுமா? எடியூரப்பாவின் படமேதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism