Published:Updated:

கேஸு மேல கேஸு வந்து...

கேஸு மேல கேஸு வந்து...

கேஸு மேல கேஸு வந்து...

கேஸு மேல கேஸு வந்து...

Published:Updated:

'தங்கள் தொகுதி எம்.பி., நாடாளுமன்றத்தில் இன்று நம்முடைய பிரச்னைகளுக்காக எதுவும் பேசி இருக்கிறாரா, பொதுப் பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்தி இருக்கிறாரா’ என்று மற்ற தொகுதி மக்கள் செய்தித்தாள்களையும் சேனல்களையும் மேய்ந்துகொண்டு இருக்கும்போது, ராமநாதபுரம் தொகுதி மக்கள் மட்டும், 'இன்னைக்கு நம்ம எம்.பி. எந்த  கேஸ்ல மாட்டி இருக்கார்னு தெரியலையே’ என்று புலம்புகிறார்கள். இத்தனைக்கும் மக்கள் பிரச்னைக்காகப் போராடியோ, அல்லது கட்சி அறிவித்த போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியோ ரித்தீஷ§க்குப் பழக்கம் இல்லை. எல்லாம் தனிப்பட்ட வழக்குகள்தான்.

கடந்த 25-ம் தேதி, சென்னையைச் சேர்ந்த ராஜ சேகர் என்பவர் 'நிலம் வாங்கித் தருவதாக 20 கோடி

கேஸு மேல கேஸு வந்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரூபாய் மோசடி செய்துவிட்டார்’ என்று ரித்தீஷ் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க, புழலில் அடைக்கப் பட்டு, இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார் ரித்தீஷ். ஆனால், இது ரித்தீஷ§க்கு முதல் வழக்கு அல்ல. அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த க. அன்பழகனை யார் காரில் ஏற்றிக்கொள்வது என்று சுப. தங்கவேலனுக்கும் ரித்தீஷ§க்கும் நடந்த சண்டை யில், இருவரின் ஆதரவாளர் களும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். (கடுப்பான அன்பழகன், இரண்டு பேர் காரிலும் ஏறாமல். கே.கே.எஸ்.எஸ்.ஆர். காரில் ஏறிச் சென்றது தனிக் கதை). அதில், தங்கவேலன் ஆதரவாளர்கள் இருவருக்கு மண்டை உடைந்தது. சுப.தங்கவேலன் ஜஸ்ட் மிஸ்டு. அதே நாள் மாலையில், அருப்புக்கோட்டை யிலும் இரு தரப்பினரும் அடித்துக்கொண்டார்கள். மதுரையிலும் அருப்புக் கோட்டையிலும் இரண்டு வழக்குகள் போடப்பட்டு, பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு,  சிரமப்பட்டு அலைந்து, ஒருவழியாக, ஹைகோர்ட்டில் ஜாமீன் வாங்கிய பிறகுதான் ரித்தீஷால் நிம்மதியாக வெளியில் நடமாட முடிந்தது.

சில மாதங்களுக்கு முன்பு, போகலூர் ஒன்றியச் செயலாளர் கதிரவனைக் கடத்திச் சித்ரவதை செய்த வழக்கில் சிக்கினார் ரித்தீஷ். அதில் கூலிப் படையாகச் செயல்பட்ட வரிச்சூர் செல்வம் தலைமையிலான ரவுடிகளை, திண்டுக்கல்லில் வைத்து ஒரு லாட்ஜில் கைதுசெய்த போலீஸ், அதில் ஒருவரை என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளியது. 2007-ல் காரைக்குடிப் பக்கம் உள்ள சிராவயல் ஜல்லிக்கட்டைப் பார்வையிடச் சென்றபோது, அங்கு ஏற்பட்ட கலாட்டா வில் ரித்தீஷ் மீது சிவகங்கை மாவட்ட போலீஸ் போட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவதைத் தடுத்த பாண்டியூர் பக்கக் கிராம மக்களைத் தாக்கியதாக ரித்தீஷ் மீதும் அவர் தந்தை மீதும் வழக்குப் போடப்பட்டது. அதற்குப் பின் ரித்தீஷ§ம் அவரது உறவினரும், ராமநாதபுரம் நகரச் செயலாளராக இருந்த ஆர்.ஜி. ரத்தினத்திடம் தகராறு செய்து அடித்துக் கொண்டார்கள். அதில் பெண் களைத் தாக்கியதாகப் போடப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திருவாடனைத் தொகுதியில் சோழந்தூர் என்ற ஊரில் தி.மு.க.-காரர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியதாக பி.சி.ஆர். வழக்கு போடப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார் ரித்தீஷ். 'இவர் இலங்கைக் குடியுரிமை உள்ளவர், தேர்தலில் போட்டியிட்டது செல்லாது’ என்று எதிர்த்துப் போட்டியிட்ட சத்தியமூர்த்தி (இப்போது இவர் தி.மு.க-வில் இணைந்து, ரித்தீஷ் கோஷ்டியில் இருக்கிறார் என்பது சரியான காமெடி!) போட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. இதை வாபஸ் வாங்க சத்தியமூர்த்தி மனு செய்தபோது, கோர்ட் கடுமையாகக் கண்டித்தது. இது மட்டும் இல்லாது தேர்தல் நேர வழக்கு களும் நிலுவையில் உள்ளன.

ரித்தீஷ் 'நாயகன்’ என்ற படத்தில் நடித்தார். பழைய 'நாயகன்’ கேள்வியைத்தான் அவரிடம் கேட்க வேண்டும். 'நீங்க நல்லவரா, கெட்டவரா?’

- முகவையூரான்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism