
குறுஞ்செய்தித் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்த மாதத்துடன் 20 வருடங்கள் ஆகின்றன. முதல் குறுஞ்செய்தி பின்லாந்து நாட்டில் வோடஃபோன் நிறுவனத்தின் நெட்வொர்க் கணினி ஒன்றில் இருந்து பேஜர் ஒன்றுக்கு அனுப்பப்பட்டது. செய்தி... 'Merry Christmas’. குறுஞ்செய்தித் தொழில்நுட்பத்தின் பிதாமகர் என அழைக்கப்படும் மேட்டி மேக் கேனெனின் பி.பி.சி. பேட்டியைப் பார்த்தேன். ''இந்தத் தொழில்நுட்பத்துக்கு எல்லாம் காப்புரிமை கிடைக்கும் என்று தோன்றவில்லை. எனவே, விண்ணப்பிக்கவே இல்லை. என்னை Father of SMS என்று அழைப்பது சரியல்ல. ஏனென்றால், நாங்கள் செய்தது டீம் வொர்க்'' என்றார் சற்றே கூச்சத்துடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மொபைல், குறுஞ்செய்தி என்பதெல்லாம் வந்துவிட்ட பின்னரும், இமெயில் தொடந்து முக்கியமான தகவல் தொடர்பு ஊடகமாக இருந்துவருகிறது. பல நூறு பில்லியன்களுக்கும்
##~## |
'அதென்னப்பா, ஜி.பி?’ என்று கேட்கும் 'non டெக்கர்’களுக்கு ஜி.பி. என்றால் Gigabyte. கோப்புகளின் அளவீட்டு அலகு. குத்துமதிப்பாக, 400 தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கு 1 ஜி.பி. அளவு இடம் தேவைப்படும்.
Pinterest.com பயன்படுத்தியிருக்கிறீர்களா? இருந்தால், இந்தத் தளத்தின் அழகான வடிவ மைப்பின் மீது ஈர்ப்பு வருவது இயல்பு. தனிப்பட்ட பயனீட்டாளர்கள் மட்டும் இன்றி நிறுவனங்களும் றிவீஸீtமீக்ஷீமீst -ஐ தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திவருகின்றன. உதாரணத்துக்கு http://pinterest.com/nordstrom/ யைப் பாருங்கள். அவர்கள் விற்கும் பொருட்களின் அழகிய புகைப்படங்கள் வரிசை வாரியாகப் பின் செய்யப்பட்டு இருக்க, அவற்றை ரசிக்கும் வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களும் அழகுணர்வுடன் கொடுக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கலாம். பென்சில்வேனியாவில் இருக்கும் செய்தித்தாள் நிறுவனம் ஒன்று ரொம்பவே அழகுணர்ச்சியுடன் Pinterest-ஐப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. கைது செய்வதற்காகத் தேடப்படும் கிரிமினல் குற்றச்சாட்டு கொண்டவர்களது புகைப்படங்களைக் காவல்துறை மீடியாவுக்குக் கொடுப்பது பல நாடுகளில் பழக்கத்தில் இருப்பதுதான். ஆனால், கொடுக்கப்படும் படங்கள் அனைத்தையும் வெளியிட செய்தித்தாளில் இடம் இருப்பது இல்லை; அதோடு, ஒரு நாளில் மட்டுமே வெளியாகும் படத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். The Mercury என்ற பெயரில் வெளியாகும் இந்தச் செய்தித்தாள் Pinterest தளத்தில் Wanted By Police என்ற பெயரில் அவர்களது ஊரின் காவல்துறை கொடுக்கும் படங்கள் அனைத்தையும் வெளியிடுகிறது. இதன் மூலம் கைதாகும் சதவிகிதம் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாகியிருக்கிறதாம். தாங்கள் தேடப்படுவதே தெரியாமல் இருந்தவர்கள், தங்களது படங்களைப் பார்த்து அதிர்ச்சியாகி, காவல் துறையை அணுகி விவரங்களைக் கேட்டுக்கொண்டதும் நடந்திருக் கிறது. மேற்படி பக்கத்தின் உரலி http://pinterest.com/themercury/wanted-by-police/
இரண்டு வாரங்களுக்கு முன், சிரியா நாட்டின் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 'தீவிரவாதிகளின் செயல் இது; இன்டர்நெட் இணைப்பு கொடுக்கும் கேபிள்கள் வெட்டப்பட்டு நாசமாக்கப்பட்டன. அதைச் சரி செய்ய இரண்டு நாட்கள் தேவைப்பட்டன. அந்த இரண்டு நாட்களும் இணைப்பு இல்லாமல் போய்விட்டது’ என்று விளக்கம் தந்தது சிரிய அரசாங்கம். அவர்களது நாட்டில் இப்படி நடந்தது என்றால், நம் நாட்டிலும் நடக்கலாமே எனப் பல நாடுகளிலும் பதற்றமும் விவாதங்களும் நடந்ததை மீடியாவில் பார்க்க முடிந்தது.

சிரிய அரசாங்கம் சொன்னதெல்லாம் சும்மா கப்சா என்கிறார்கள் உலகளாவிய இன்டர்நெட் இணைப்புப் பிரிவில் பணிபுரியும் நிபுணர்கள். சிரியாவுக்குள் இன்டர்நெட் இணைப்பு நான்கு வழியாகச் செல்கிறது. இதைத் தீவிரவாதிகள் பிய்த்து எறிந்து நான்கு நிமிடங்களுக்குள் இணைப்பைத் துண்டிப்பது என்பது முடியாத காரியம். இன்டர்நெட் இணைப்பு ஒரு நாட்டுக்குள் கொண்டுவருவது சில நிறுவனங்களிடம் மட்டுமே இருந்தால், அந்த நிறுவனத்தால் அந்த நாட்டின் இணைப்பைக் கட்டுப்படுத்த முடியும். பல நாடுகளில் இந்த நிறுவனம் வேறு எதுவும் அல்ல... சாட்சாத் அரசாங்கமேதான்! எந்த நாடுகளில் அரசாங்கத்தால் இன்டர்நெட் எளிதாகக் கட்டுப்படுத்தப்படும் என்பதை விளக்கும் தெளிவான வரைபடத்தை அருகில் பாருங்கள்... அதன் லிங்க் http://bit.ly/RrQwwj
அமெரிக்கா, கனடா, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அரசாங்கத்தால் இணையத்தைக் கட்டுப்படுத்துவது கடினம். இந்தியா 'மீடியம் ரிஸ்க்’ பிரிவில் வருகிறது. அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் அரசாங்கத்தின் கையில் இந்த அதீத அதிகாரம் இருக்கிறது. அரசாங்கம் இணையத்தைத் துண்டித்துவிட்டால், உலகத்துடன் தொடர்புகொள்வது எப்படி? அடுத்த வாரம் சொல்கிறேன்...
- விழிப்போம்...