. தி.ருடனுக்குத் தேள் கொட்டியது. ஆனால், திருடனைச் சிறையில் போட சட்டத்தில் வழியில்லை. திருடனும் தான் திருந்துவதாகச் சொல்லவில்லை! விறுவிறுப்பாக ஜூ.வி பாணியில் கட்டுரையைத் தொடங்கிவிட்டேன். இப்படியே தொடர முடிகிறதாவெனப் பார்க்கலாம்..
என்ன நடந்தது?

கூகுள் தனது தேடல் இயந்திரத் தொழில் நுட்பத்தைத் தனது வலைதளமான www.google.com-ல் இருந்து செயல்படுத்துவதும், மைக்ரோசாஃப்ட் தனது தேடல் இயந் திரத்தை www.bing.com ல் இருந்து செயல்படுத்துவதும் உங்களுக்குத் தெரிந்ததே!

10 ஆண்டுகளுக்கு முன்னால், தேடல் இயந்திரம் என்பது ஒரு குழப்பமான ஏரியா. Lycos, AltaCists, AskJeeves, Yahoo என்றெல்லாம் பல வகையான தளங்கள் உண்டு. கூகுள் நிறுவப்பட்ட பின், இதில் மிகப் பெரிய மாற்றம். கூகுள் கிடுகிடு எனத் தேடலுக்கான சந்தைப் பங்கை (Market Share) சில வருடங்களில் ஆக்கிர மித்துத் தேடல் இயந்திரங்களின் அரச னாகக் கொடி நாட்டியது. கூகுளின் இந்த இமாலய வெற்றியைப் பொறுக்க முடியா மல், பல வருடங்களுக்குப் பின்னர், மைக்ரோசாஃப்ட் தனது பிங் தேடல் இயந்திரத்தை வெளியிட்டது. 'எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற ரீதியில் யாஹூவுடன் தகவல் பகிர்ந்தளிக்கும் ஒப்பந்தம் செய்து கொண்டது.

பல வகையான முயற்சிகள் எடுத்துப் பார்த்தாலும், கூகுளை இரண்டு ஆண்டுகளுக்குப்பின்னரும் பிங்கினால் நெருங்கக்கூட முடிய வில்லை. உலகின் கணினி பயனீட்டாளர்களில் 90 சதவிகிதம் விண்டோஸ் பயனீட்டாளர்களாக இருந்தாலும், தேடல் இயந்திரச் சந்தைப் பங்கில் 10 சதவிகிதத்தைக் கூட பிங்கால் பெற முடியவில்லை என்பது பரிதாபமான உண்மை. மைக்ரோசாஃப்ட் பிங்கை பல்வேறு வகைகளில் தொடர்ந்து மார்க்கெட்டிங் செய்யத் தவறவில்லை.

இதற்கிடையில் கூகுளில் பணியாற்றும் சில பொறியாளர்கள் பிங் செயல்படும் முறையில் குறிப்பிட்ட மாற்றம் இருப்பதைப் பார்த்தனர். சில தேடல் வார்த்தைகளுக்கு முதலில் சரிவரப் பதில் பக்கங்களைக் காட்டாத பிங், சில நாட்களில் கூகுள் போலவே துல்லியமாகக் காட்ட ஆரம்பித்தது.

உதாரணத்துக்கு, 'Madurai Tourism’ என்ற வார்த்தை பதத்தைக் கூகுளிலும், பிங்கிலும் தேடினால், கூகுள் கொடுக்கும் உரலிகள் பொறுத்தமானதாகவும், பிங் கொடுப்பவை அத்தனை பொறுத்தமானதாக இல்லாமலும் இருக்கும். சில நாட்களுக்குப் பின்னர் இதே வார்த்தையைக் கொடுத்தால், பிங் கொடுக்கும் உரலிகள், கூகுளைப் போலவே இருக்கும்.

இது சந்தேகத்துக்குரியதாக இருப்பதால், கூகுள் இந்த பிங் திருடனுக்குப் படுசாமர்த்தியமான தேள் ஒன்றை வைத்தது. எப்படி?

தனது தேடல் இயந்திர மென்பொருளை லேசாக மாற்றி, அர்த்தமற்ற பல சொற்களுக்குக் குறிப்பிட்ட சில உரலிகள் பதில் பக்கத்தில் வரும்படி வடிவமைத்து, கிட்டத்தட்ட 20 பேர்களிடம் மட்டும் ரகசியமாக இந்த அர்த்தமற்ற சொற்களைத் தங்களது வீடுகளில் இருக்கும் விண்டோஸ் கணினிகளில் இருந்து முதலில் பிங் தளத்திலும், அதன் பின்னர் கூகுளிலும் கொடுக்கும்படி திட்டம் தீட்டப்பட்டது. டிசம்பர் மாதக் கடைசியில் செய்யப்பட்ட இந்த முயற்சியைச் செய்தவர்களுக்கு பிங் முதலில் கொடுக்கப்பட்ட பதங்களைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், சில நாட்களில் கூகுள் கொடுக்கும் தளங்களைக் காட்ட ஆரம்பித்ததை ஆதாரபூர்வமாகப் புரிந்துகொண்டு மைக்ரோசாஃப்டின் மானத்தை வெளிப்படையாக வாங்கத் திட்டமிட்டனர்.

hiybbprqag என்பது மேற்படி தேள் ஆபரேஷனில் பயன்படுத்தப்பட்ட பதங்களில் ஒன்று. பொதுவாக, எந்தத் தேடல் இயந்திரத் திலும் இப்படி அர்த்தமற்ற வார்த்தைப் பதத்தைக் கொடுத்தால், அது பதில் எதுவும் கொடுக்காது. ஆனால், கூகுள் செய்த சிறப்பு மாற்றங்களின்படி http://www.hiybbprqag.com என்ற தளத்தை பதில் பக்கத்தில் வர, முதலில் எந்தப் பதிலையும் காட்டாத பிங், கூகுளைப் போலவே இந்த உரலியைக் காட்டியது. மேற்கண்ட வலைதளத்துக்குச் சென்றால், அது உங்களை கூகுளின் வேலைவாய்ப்புப் பக்கத் துக்குக் கொண்டுசெல்லும்.

இது எப்படிச் சாத்தியமானது?

ப்ரவுசர் plug-in மென்பொருள் மூலமாக! விண்டோஸின் மென்பொருள் பதியப்பட்ட கணினிகளில் இருக்கும் 'இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’ ப்ரவுசர் plug-in கூகுளில் பயனீட்டாளர்கள் தேடும் பதங்களையும், அதற்கு கூகுள் கொடுக்கும் பதில் களையும், ஈயடிச்சான் காப்பி செய்து மாட்டிக்கொண்டது!

ஆனால், சட்டரீதியாக கூகுளால் மைக்ரோசாஃப்டை இந்த சம்பவத்தை வைத்து கோர்ட்டுக்கு இழுக்க முடியாது. காரணம், மைக்ரோசாஃப்ட் நேரடியாக கூகுள் தளத்தில் இருந்து, இந்தப் பதில் களைத் திருடவில்லை. மாறாக, தனது ப்ரவுசர் பயனீட்டாளர்களின் கணினி களைப் பயன்படுத்தி இதை நடத்தி இருக்கிறது. 'எங்களது பல வருடக் கடின உழைப்பை இப்படித் திருடுவதற்கு வெட்கமாக இல்லை?’ என்று வார்த்தை அம்புகளால் காயப்படுத்திவிட்டு அமைதி யாகிவிட்டது கூகுள். மைக்ரோசாஃப்டை புரோட்டாவுக்கான மைதா மாவாகப் பிசைந்து எடுத்தபடி இருக்கிறது டெக் உலகைக் கவனித்து, விமர்சிக்கும் மீடியா பதிவுலகம். 'Google Bing Sting’ என்று கூகுளிலோ, பிங்கிலோ கொடுத்துப் பாருங்கள் தெரியும்!

LOG OFF