Published:Updated:

படி தாண்டி வர என்ன வழி?

படி தாண்டி வர என்ன வழி?

படி தாண்டி வர என்ன வழி?

படி தாண்டி வர என்ன வழி?

Published:Updated:

'பஸ்ஸில் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களைப் பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்க வேண்

படி தாண்டி வர என்ன வழி?

டும்’ என்று சொல்லி இருக்கிறது உயர் நீதிமன்றம். சரி, இந்தப் பிரச்னையை அவ்வளவு எளிதாகத் தீர்க்க முடியுமா? வெறுமனே ஜாலிக்காக மட்டும்தான் மாணவர்கள் ஃபுட்போர்டில் தொங்குகிறார்களா? ''அப்படி மட்டும் சொல்லிவிட முடி யாது'' என்கிறார் சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஏ.பி.அன்பழகன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நடப்பு ஆண்டின் விவரப்படி தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பாஸ் 27 லட்சத்து 2,000. தமிழ்நாட்டில் உள்ள மொத்த அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை 22,000. அதில் டவுன் பஸ்களின் எண்ணிக்கை 10,000. ஆக, சராசரியாகப் பார்த்தால் ஒரு டவுன் பஸ்ஸில் 270 மாணவர்கள் செல்ல வேண்டும். நடைமுறையில் இது சாத்தியமா? ஸ்கூல், காலேஜ் தொடங்கும் நேரம், ஆபீஸ் தொடங்கும் நேரம் என எல்லா பிஸியான நேரங் களும் ஒரே சமயத்தில் வரும்போது கூட்டம் பிதுங்கத்தான் செய்யும்.

அதிலும் டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை, பஸ் மெயின்டெனன்ஸ் இல்லாதது போன்ற காரணங்களால் நம்மிடம் உள்ள பேருந்துகளில் தினமும் 500 முதல் 900 பேருந்துகள் வரை இயக்க முடிவது இல்லை. சரி, இதற்கு என்னதான் தீர்வு?

கேரளாவில் தனியார் பேருந்து களிலும் மாணவர்களுக்கான இலவச பாஸ் செல்லுபடியாகும். அதை நாம் இங்கு நடைமுறைப்படுத்தினால் 10,000 அரசு டவுன் பஸ்களில் பயணிக்கும் மாணவர்கள், கூடுதலாக ஆயிரக்கணக்கில் ஓடும் (சென்னையைத் தவிர்த்த) தனியார் பஸ்களிலும் பயணம் செய்யலாம். கியூபாவில் மாணவர் பேருந்து என்று இயக்குகிறார்கள். நம் ஊரில் 'லேடீஸ் ஸ்பெஷல்’ பஸ்களே ஆரம்பித்து சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. மாணவர்களுக்கு என்று தனியாக பஸ்கள் விட்டால், இந்தப் பிரச்னை ஓரளவுக்குக் குறையும்.

சரி, இதை எல்லாம் செய்யப் போதுமான நிதி, போக்குவரத்துத் துறையிடம் இருக்கிறதா? கடந்த ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2012 வரையிலான  போக்குவரத்துத் துறையின் வருமானம் மொத்தம் 5,993 கோடியே 91 லட்சம். ஒரு சாதாரண பஸ்ஸை 15 லட்ச ரூபாயில் வாங்கி விடலாம். ஆனால் ஏ.சி. பஸ் வாங்கித்தான் விடுவோம்னு அரசாங்கம் அடம் பிடிச்சா ஒண்ணும் செய்ய முடியாது'' என்கிறார்.

அட, கொஞ்சம் கீழே இறங்கித் தான் வர்றது, ஏன் ஆபீசர்ஸ் அங்கேயே தொங்கிக்கிட்டு இருக் கீங்க?

- சத்யா சுரேஷ்

படங்கள்: வீ.நாகமணி, பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism