Published:Updated:

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

Published:Updated:

மொட்ட மாடி, லேடீஸ் ஹாஸ்டல் ஜன்னல், எட்டு மணி பஸ், காலேஜ் கேன்டீன்னு பொண்ணுங்களுக்குக் கொக்கி போடுற காலமெல்லாம் மோகன், முரளி, சார்லி, சின்னி ஜெயந்த் காலத்துலேயே வழக்கொழிஞ்சுபோச்சு. இப்போ எல்லாம் பசங்க உட்கார்ந்த இடத்துலே இருந்தே பில்கேட்ஸ் மகளையே ஃப்ரெண்ட் ஆக்கிடுறாங்க. காரணம், ஃபேஸ்புக் தான். இதுல இருக்கிற மிகமிக முக்கியமான வசதி என்னன்னா, நாம ட்ரை பண்ற ஃபிகர், எவ்வளவு கோபம் வந்தாலும் நம்ம மூஞ்சியில காறித் துப்ப முடியாது, செருப்பால அடிக்க முடியாது, அண்ணன், ஏரியா பசங்களைக் கூட்டிட்டு வந்து பெண்டை நிமிர்த்த முடியாது. அதனால, எப்படி ஃபேஸ்புக்ல ஃபிகர்களை கரெக்ட் செய்றதுங்கிற டிப்ஸைக் கவனமாகப் படிங்க!

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!
ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல்ல உங்க பேரு... அது கும்பக்கரை தங்கையாவோ, போடிநாயக்கனூர் கணேசனோ எதுவா இருந்தாலும் சரி. அதை ஃபேஸ்புக் உலகத்துக்கு ஏத்த மாதிரி மாத்தணும்... எடுத்துக்காட்டாக உங்க பேரு முனியசாமியா இருந்தா, Muni Rocker, Muni Terror, Muni Majestic மாத் திடணும்!

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

அடுத்து புரொஃபைல் பிக்சர்! தயவு செஞ்சு 20 ரூபா கண்ணாடியை வாங்கி மாட்டிக் கிட்டு, சைனா மொபைல்ல உங் களை நீங்களே படம் எடுத்து, அதை புரொஃபைல் பிக்சரா வைக் கிறதை நிறுத்துங்க. உங்க படம் வைக்குறதா இருந்தா லாங் ஷாட்ல தெரியுற மாதிரி வைங்க. அதுவும் சகிக்கலையா? விராத் கோலி, சித் தார்த், மகேஷ்பாபு, விவேக் ஓபராய் போன்றவர்களின் படங்களை வெச்சா பொண்ணுங்க இம்ப்ரஸ் ஆக வாய்ப்பு அதிகம்! (அவங்க மட்டும் த்ரிஷா, தமன்னானு நம்மளை ஏமாத்துறாங்கல்ல...)

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

அப்புறம் உங்களைப் பத்தின விவரங்கள்... வொர்க்கிங் அட் வெட்டி ஆபிசர், எஸ்.ஐ-ஆ இருக் கேன் இது மாதிரி எல்லாம் மொக்க போடாம, எவ்வளவு வருஷம் ஆனா லும் வொர்க்ஸ் அட் ஸ்டூடன்ட்னு போடுங்க. அப்போதான் கல்லூரிக் கன்னிகள் தரிசனம் கிடைக்கும். நீங்க படிச்சது உசிலைமணி செந்தட்டி அய்யா மேல்நிலைப்பள்ளியா இருந்துச்சுனா, அதை அப்படியே எழுதித் தொலைச்சிடாதீங்க. ஸ்டைலா யு.எஸ்.ஏ. ஹையர் செகண்டரி ஸ்கூல்னு போடுங்க!

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

பொண்ணுங்களைத் தாக்கி எழு துற கவிதைகளை எல்லாம் மறந்து கூட என்கரேஜ் பண்ணிடாதீங்க. 'சே... லைக் பட்டன் இருக்குற மாதிரி, அன்லைக் பட்டன் இல்லையா’னு கமென்ட் போடணும்!

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

ஃபேஸ்புக் அக்கவுன்ட் தொடங் கியதுமே, சர்ச் பகுதியில் ஏயில் ஆரம்பித்து இசட் வரைக்கும் டைப் செய்து, அதில் எந்தப் பெண் பெயர் சிக்கினாலும் ரெக்வெஸ்ட் கொடுக்கா தீர்கள். சீக்கிரமே உங்கள் அக்கவுன்ட்டை பிளாக் செய்து அனுப்பிவிடுவார்கள். இதைத் தடுக்க நல்ல யோசனை, சசிக்குமார் ஃபார்முலாதான். நண்பனின் கேர்ள் ஃப்ரெண்டும், நம் கேர்ள் ஃப்ரெண்டே. உங்கள் நண்பரின்

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

நண்பரை ஃப்ரெண்ட் பிடித்து, அவரது ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் உள்ள கேர்ள்ஸுக்கு ரெக்வெஸ்ட் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும் முன்பு, அவரைப்பற்றி (அபௌட்) என்ற பகுதியில் கிளிக் செய்து, அது பெண்தானா? என்று உறுதி செய்து கொள்ளுங்கள். பெண் என்று உறுதியானதும், ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்த கையோடு, அவருடைய விருப்பங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும். அவர் விஜய் அல்லது சிம்புவின் ரசிகையாக இருந்தால், எக்காரணம்கொண்டும் அவர்களை விமர்சனம் செய்யாதீர்கள். முடிந்தால், ' 'திருப்பாச்சி’யில் விஜயின் நடிப்பு அருமை’,  'குத்து’ போல் ஒரு சினிமா இனிமேல் தமிழ்த் திரையுலகில் வருவது கஷ்டம்’ என்பதுபோல் ஸ்டேட்டஸ் போடுங்கள். அவர்கள் உங்களை அக்செப்ட் பண்ணியதும், என்ன ஸ்டேட்டஸ் போட்டாலும் படித்தே பார்க்காமல் லைக் கொடுத்துவிடுங்கள். பிறகு மெதுவாகப் படித்துப் பார்த்துவிட்டு, அவரைக் கவர்வதுபோல் ஒரு கமென்ட்டும் தட்டிவிடுங்கள்!

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

யாருக்காச்சும் ரெக்வெஸ்ட் குடுத்தா ப்ளாக் பண்ணிடுறாங்களா? இல்ல... பல வருஷமா பெண்டிங்லயே வெச்சிருக்காங்களா? கொஞ்ச நாளைக்கு அந்த மொகரையைத் திரும்பிப் பார்க்காதீங்க. முதல்ல அவங்க ஃப்ரெண்டா இருக்கிற சப்ப பிகருக்கு ரெக்வெஸ்ட் குடுத்து கரெக்ட் பண்ணுங்க! சப்ப பீஸ் எல்லாம் த்ரிஷா போட்டோதான் வெச்சு இருக்கும். நிறைய த்ரிஷாவை கரெக்ட் செஞ்சிட்டு, எனக்கும் இவ்வளவு பெண் விசிறிகள் இருக்காங்கனு காமிக்கணும். அப்புறம் அந்த பெரிய்ய ஃபிகரை ட்ரை பண்ணணும்!

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

இப்போ கரன்ட் பிரச்னை யாரைப் பாதிக்குதோ இல்லையோ, ஃபேஸ்புக் கடலைவாசிகளை வெகுவாகப் பாதிக் குது. அதனால உடனடியா உங்க வீட்ல வெட்டியா இருக்கிற கிரைண்டர், மிக்சி எல்லாம் வித்துட்டு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி 24 மணி நேரமும், நான் இங்கதான் இருக்கேன்னு காமிச்சுக்கணும்... அப்ப தான் பொண் ணுங்க, தானே முன்வந்து ஹாய் சொல்லுவாங்க!

அப்புறம் என்ன பாஸ், கையைக் கொடுங்க, கரெக்ட் பண்ணுங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism