Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

பேரழிவுக்காக எல்லாம் காத்துக்கொண்டு இருக்கத் தேவை இல்லை; இப்போதே கடலில் தீவுகள் கட்டி அரசாங்கங்களின் பிடியில் இருந்து விடுபடலாம்’ என்று சீரியஸ் முயற்சி ஒன்று நடந்துகொண்டு இருக்கிறது. இதில் முக்கியமான இடத்தை வகிப்பது Sea-steading Institute என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் முக்கிய ஆதரவாளராக இருப்பது பேபால் நிறுவனத்தை நிறுவிய பீட்டர் தியல் என்பதால், சமீப காலத்தில் இதற்கு டெக் மீடியா வில் அதிகக் கவனம் கொடுக்கப்படுகிறது.

 நாடுகளில் கடல் எல்லைக்குச் சற்றே தொலை வில் சுயேச்சை அதிகாரம்கொண்ட மிதக்கும் நகரங்களைக் கட்ட உதவு வதுதான் இந்த நிறுவனத்தின் நோக்கம். இப்படிக் கட்டப்படும் மிதக்கும் நகரங்களுக்கு, அவற்றுக்கு அருகில் இருக்கும் நாடுகளின் சட்டங் கள் பொருந்தாது. ஆரம்ப நாட்களில் கப்பல்கள் மாற்றி அமைக்கப்பட்டு மிதவை நகரங்களாகச் செயல்படும் என்கிறது இந்த நிறுவனத்தின் வலை தளம். ( www.seasteading.org/  )

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Blueseed என்ற புதிய நிறுவனம் கரைகளுக்கு அருகே... ஆனால், நாடுகளின் சட்டம் இயங்கும் எல்லைக்கு அப்பால் கப்பல்களை நிறுத்தி, அவற்றில் தொழில்முனைவோருக்கு வாழும் மற்றும் வேலை பார்க்கும் வசதிகளைக் கொடுக்க எத்தனிக்கிறது. அவர்களது முதல் கப்பல் சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு அருகே நிறுத்தப்பட்டு அதில் இருந்து தேவைப்பட்டபடி சிறிய படகுகளில் சான்ஃபிரான்சிஸ்கோ நகரத்துக்கு வந்து செல்லும்படி வசதிகள் செய்து கொடுக்கப்படும். அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான விசா வாங்க வேண்டிய அவசியம் இல்லை; அமெரிக்க அரசுக்கு வரி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை போன்று பல 'இல்லைகள்’. தொழில் முனைவதில் ஆர்வம் இருந்தால், இந்த மிதக்கும் வசிப்பு பணியிடத்துக்கு விண்ணப்பித்துப் பாருங்கள். விவரங்கள் அறிய செல்ல வேண்டிய உரலி http://blueseed.co.

அறிவிழி

மீபத்திய விமானப் பயணத்தின்போது விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் எனது கைப் பையில் இருக்கும் அனைத்தையும் வெளியே எடுக்கச் சொன்னார்கள். செல்போன், டேப்ளட், கிண்டில், ப்ளூடூத் ஹெட்செட், உதிரி பேட்டரிகள், கேமரா, கையளவு கேம்கார்டர் என மின்னணுக் காயலான் கடையே இருந்தது. நாம் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, நம்மைச் சுற்றி

அறிவிழி

இருக்கும் மின் காந்த மாசின் (Electro Magnetic Pollution) அளவும் அதிகரித்தபடியே இருக்கிறது. இந்தச் சாதனங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சைக் குறைக்க முயலும் தொழில்நுட்பங்களால் அதிகமான கேடுதான் என்கிறது உலக சுகாதார அமைப்பின் வலைதளம். இந்தப் பிரிவில் இருக்கும் தொழில்நுட்பங்கள் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை கூகுள் துணையுடன் ஒரு வார இறுதியில் அலசினேன். Organism எனப்படும் உயிர் இருக்கும் ஜீவிகள் அனைத்துக்குமே அவற்றைச் சுற்றி உயிர்ப்புலம் (Biofield) என்பது இருக்கிறது. இந்த உயிர்ப்புலத்தின் அதிர்வெண் ணுக்கு (frequency) நிகராக அதிர்வலைகளை உண்டாக்கி, அதன் மூலம் உடலுக்கு மின்காந்த மாசின் பாதிப்பைக் குறைப்பதாகச் சொல்லப்படும் q-link சாதனத்தை ஆர்டர் செய்திருக்கிறேன். அமேசான் டாட் காமின் பயனீட்டாளர்கள் பலர் சொல்வதைப் பார்த்தால், மொபைல் சாதனங்களின் பயனீடு அதிகரித்தபடி இருக்கும் இந்தக் காலத்துக்குத் தேவையான ஒன்றுதான் அது. q-link அல்லது அது போன்றவற்றைப் பயன்படுத்தி இருந்தால், உங்கள் அனுபவத்தை @antonprakash-க்கு ட்வீட் செய்யுங்கள்.

தங்களுடைய முகத்தைப் பயன்படுத்தி கங்ணம் ஸ்டைல் வீடியோ தயாரித்து அனுப்பிய அனைவருக்கும் நன்றி. விரைவில் வெற்றி பெற்ற வீடியோவைப் பகிர்கிறேன்.

- விழிப்போம்...