
ஆட்ட இயக்குநர் தெலுங்கில் கலகக்காரன் படம் எடுத்ததில் 40 கோடி பட்ஜெட் என்று சொல்லித் தயாரிப்பாளரிடம் சுருட்டிவிட்டாராம். இதைத் தெரிந்துகொண்ட தயாரிப்பாளர் தரப்பு, இயக்குநரைச் செமத்தியாகக் கவனித்ததோடு 20 கோடிக்கு வெத்துப் பேப்பரில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டார்களாம். இந்தக் கடனைக் கட்டவே இப்போது மூன்றாம் பாகத்தை முடுக்கிவிட்டுள்ளாராம் ஆட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'அசைவச் சாப்பாடு’ படத்தில் ஓல்ட் மைக் நாயகனை வில்லனாகப் போட முதலில் முடிவு செய்த டைரக்டர், மைக் நாயகனை அழைத்துள்ளார். ஆனால் நாயகன் படு வீக்காக இருக்க, 'இவரு வில்லனுக்குச் சரிப்பட்டு வரமாட்டார்’ என்று செந்தூர நாயகனை செலக்ட் செய்தாராம்!


பஞ்ச் நடிகர் கையால் ஆரம்ப காலங்களில் சோப் போட்ட சங்கம நாயகி யாருக்கும் தெரியாமல் கப்சிப் கண்ணாலம் கட்டிக் குடித்தனம் நடத்துகிறாராம். முன்னாள் நட்புக்காக நிதியுதவி செய்து வருகிறாராம் பஞ்ச்சர்!

தங்கள் ஆயுதப் படத்துக்கு இடைஞ்சல் செய்த டுபாக்கூர் ஆயுதப் படத்துக்குப் பதிலுக்குப் பதில் இடைஞ்சல் தரவேண்டும் என்றுதான் அந்தப் படம் ரிலீஸ் நேரம் பார்த்து கோர்ட் படத்தை இறக்கியுள்ளாராம் டைரக்டர். இப்போது தியேட்டர் கிடைக்காமல் திண்டாடுகிறார்களாம் டுபாக்கூர் ஆயுதக்காரர்கள்!

இளமை துள்ளிய நாயகி பஞ்சராகி கோலிவுட்டில் தஞ்சம் ஆகி உள்ளார். அறிமுகப்படுத்திய மூன்றெழுத்து ஹீரோவின் தந்தையான இயக்குநர் பழைய பாசத்தில் 'நட்பாகப் பேசலாம், வா’ என்று அழைத்தாராம். 'பட்டபாடு போதாதா, ஐயயோ’ எனத் தெறித்து ஓடினாராம் இளமை நாயகி!

இரண்டெழுத்து இயக்குநர் இலை சேனலுக்கு ஒரு தொடரை இயக்கி நடித்திருக்கிறார். 10 எபிசோடுகளைப் படமாக்கி சேனலில் போட்டுப் பார்த்த இலை சேனல் நிர்வாகம். 'இது சரிப்பட்டு வராது'' என நிறுத்தச் சொல்லிவிட்டதாம். இயக்குநர் வாயில் துண்டை வைத்துப் புலம்புகிறாராம்!