Published:Updated:

அடுத்த இலக்கு மன்மோகன்தான்!

அடுத்த இலக்கு மன்மோகன்தான்!

அடுத்த இலக்கு மன்மோகன்தான்!

அடுத்த இலக்கு மன்மோகன்தான்!

Published:Updated:

'2011 நம்ம கையில... சந்திப்போம்டா தோழா நாம சட்டசபையில’னு 'தமிழ் பட’த்தில் சிவா செய்த அலப்பறையைப் போல் '2024 நம்ம கையில... சந்திப்போம்டா தோழா நம்ம பார்லிமென்ட்ல’னு அலப்பறை செய்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நாகூர்மீரான் பீர் முகம்மது. நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஸ்டுடியோ வைத்திருக்கும் இவரைத் தேர்தல் மன்னன் என்றே அழைக்கிறார்கள் பகுதிவாசிகள்.

அடுத்த இலக்கு மன்மோகன்தான்!

நாகூர்மீரானுக்கு போன் செய்ததும், ''மார்னிங் பிஸி ஷெட்யூல் தம்பி. என்னோட கட்சி  நிர்வாகிகளைச் சந்திக்கிறேன். ஈவ்னிங் மாற்றுக் கட்சியினர் 400 பேரு என் கட்சியில் இணையுறாங்க.(?) நீங்க நைட் ஒன்பது மணிக்கு வந்துடுறீங்களா?''னு(10 மணிக்கு கடை பூட்டிருவானே? - இது மைண்ட் வாய்ஸ்) இவர் கேப் விடாமல் பேசியது உண்மையா? பொய்யா? என்று குழப்பம் தீராமலே ஒருவழியாகச் சந்தித்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இதுவரைக்கும் 46 தடவை தேர்தலில் நின்னுருக்கேன். எப்பவோ தொடங்கி இருக்கணும். சரி விடுங்க, ஒருவழியா கோடானு கோடி தொண்டர்களின் ஆசைக்குக் கட்டுப்பட்டு கடந்த 12-ம் தேதி, 'அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம்’னு கட்சியைத் தொடங்கிட்டேன். கடந்த 1991-ல் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவை எதிர்த்துக் களத்தில் இறங்கினேன். எனக்குத் தொகுதியில் இருந்த ஏகபோக ஆதரவைப் பார்த்துட்டு சசிகலா உறவினர்கள் எனக்கு நிறைய நெருக்கடி கொடுத்தாங்க. கண் மூடித் திறந்த மாதிரி இருக்கு தம்பி. விறுவிறுன்னு அரசியல்ல உச்சாணிக் கொம்புக்கு வந்துட்டேன்.(??)இப்போ திராவிடக் கட்சிகளுக்கு இணையா என் கட்சியிலேயும் உறுப்பினர்கள் இருக்காங்க.

நேற்று கட்சி ஆரம்பிச்சுட்டு இன்னிக்கு முதல்வர் பதவிக்கு ஆசைப்படுற சின்ன புத்தி எனக்குக் கிடையாது. நான் ரொம்ப சாதாரணமான ஆளு. முதல்வர் நாற்காலி எல்லாம் எனக்குத் தேவையில்லை. என் ரேஞ்ச்சுக்கு பிரதமர் பதவியே போதும். (இதுதான் உங்கச் சின்னச் சின்ன ஆசையா... ஐயா?) நான் பிரதமர் ஆனதும் ஊழல் தடுப்புக்குனு தனி அமைச்சரை நியமிப்பேன். என் கட்சியில்கூட இப்போ ஊழல் புகுந்துடுச்சு. போன வாரம் கட்சிக் கணக்கு வழக்குகளைப் பார்த்தப்ப, பிரசாரப் பீரங்கிகளை ரிப்பேர் செஞ்ச செலவுன்னு கணக்கு எழுதி இருக்காங்க. அதனாலதான் ஊழலுக்கு எதிராகப் போர்ப் பரணியைத் தொடங்கிட்டேன். காங்கேயத்தில் ஜெயலலிதா, ஆந்திராவில் நரசிம்மராவ், கேரளாவில் முன்னாள் முதல்வர் கருணாகரன்னு பல பிரபலங்களையும் எதிர்த்துப் போட்டி போட்டு இருக்கேன். வெளி மாநிலங்களில் போட்டி போட்டாலும் எனக்குத் தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. நரசிம்மராவை எதிர்த்து நின்னப்ப, 'நரசிம்மராவுக்கு சிரிக்கவே தெரியாது, நான் நல்லா சிரிப்பேன்’னு சிரிச்சுக் காட்டியே, 3,000 ஓட்டு வாங்கி இருந்தேன்.

எங்க கட்சி நிர்வாகிகள் வரும் பார்லிமென்ட் எலெக்ஷன்ல நான் மன்மோகன்சிங்கை எதிர்த்துப் போட்டி போடணும்னு தீர்மானம் நிறைவேற்றி இருக்காங்க. என்னோட அடுத்த குறி மன்மோகன்சிங்கை ஜெயிக்கிறதுதான்'' என்றவர் 'மன்மோகன், பீ கேர்ஃபுல்’ என்ற எச்சரிக்கையோடு விடைகொடுத்தார்.

இதுக்குத்தான் மன்மோகன்சிங் தேர்தலையே சந்திக்கிறதில்லை போல!

- என்.சுவாமிநாதன்

படம்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism