Published:Updated:

பேயோன் பக்கம்

பேயோன் பக்கம்

பேயோன் பக்கம்

பேயோன் பக்கம்

Published:Updated:

சும்மா ஒரு வர்ணனை

##~##

ரக் கடற்கரை மணலில் கால்கள் புதைந்து நின்றிருந்தான் ரவி. அவனை நோக்கி வரிசையாக வந்து கால்களைத் தொட்டும் தொடாமலும் சென்ற அலைகளுக்கு அப்பால் அவன் கண்கள் நிலைகுத்திஇருந்தன. கோடை மாலையின் கூட்டம் அவனைச் சுற்றிலும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தது. அவன் எதையும் பார்க்காமல் நிரந்தரமான கடலைப் பார்த்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரவியிடமிருந்து ஒரு பெருமூச்சு எழுந்தது. ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாகச் சலனம் காட்டினான். கைகளைக் கால்சராய்ப் பைகளிலிருந்து விடுவித்து முன்னும் பின்னும் வீசித் திரும்பி நடக்கத் தொடங்கினான். அலைகளைப் பார்த்தபோது வெறுமையாகக் கிடந்த அவன் மனம், இப்போது நடந்ததை அலசத் தொடங்கியது.

கடந்தது கடந்ததுதான். இனி அது குறித்து யோசித்துப் பயனில்லை. நடந்ததைப் பற்றி வருத்தப்படுவது மனதிற்குத் துன்பத்தைத்தான் தரும். எல்லா நிகழ்வுகளையும் ஒரு தண்டவாளமாகக் கருதித் தாண்டிச் செல்வதே புத்திசாலித்தனம். அதற்குத் தேவையான மன உறுதியைத் திரட்டிக்கொள்ள வேண்டும். சொந்தங்கள் என்று அவன் கருதிய அனைவரும் இன்று அவனை எட்டியிருந்து பார்த்து நகைப்பதை நினைத்தபோது, அவனுக்கும் இதழோரம் புன்னகை அரும்பியது. அவனிடம் குழைந்தபோதெல்லாம் இதைத்தானே அவர்கள் விரும்பினார்கள்?

பேயோன் பக்கம்

இது ரவி முன்பே எதிர்பார்த்ததுதான். ஆனால், இவ்வளவு சீக்கிரம் நிகழும் என்று அவன் நினைக்கவில்லை. இத்தனை பேரும் ஒரே சமயத்தில் தன்னைக் கைவிடுவார்கள் என்று அவன் எண்ணவில்லை. எங்கே தவறு செய்தோம் என யோசித்தான் ரவி. தவறு செய்தது தான் மட்டுமல்ல என்பது மட்டும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. எனினும் தன்னை மீறிய விஷயங்களுக்கு, தான் மட்டும் எப்படிப் பொறுப்பாக்கப்பட்டோம் என எவ்வளவு யோசித்தும் அவனுக்குப் பிடிபடவில்லை. உலகம் இப்படித்தான் இயங்குகிறதுபோலும் என்று சமாதானப்படுத்திக்கொண்டான் ரவி.

பேயோன் பக்கம்

தாம் கடுக்க நின்றதைக் கால்கள் நினைவுபடுத்தின. கடலுக்கு முது கைக் காட்டி மணலில் அமர்ந்தான் ரவி. பல்கலைக்கழகக் கட்டடங்கள் கம்பீரமாக நின்றிருந்தன. மணலுக்குள் கைகளை நுழைத்து அளையத் தொடங்கினான். தானும் இந்த எண்ணற்ற மணல் துகள்களில் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்தான். ஆனால், ஏற்கெனவே நாம் அப்படித்தானே இருக்கிறோம் என்று தோன்றியது ரவிக்கு. மணலுக்குப் பாறையே மேல். துகள்களோடு துகள்களாய்க் கிடப்பதைவிட பெருத்துத் தனியாகக் கிடக்கலாம்.

பாறையாக இருப்பதில் பிரச்னை என்னவென்றால் கண்டவனும் கிறுக்குவான். காதலர்கள், கட்சித் தொண்டர்கள், விடலைகள், எல்லாவனும் பாறையைக் கண்டால் செய்கிற முதல் வேலை, சுண்ணாம்பால் தன் கொடியை நாட்டுவது. சில பேர் பெயின்ட்டைக் கொண்டுவந்து மழைக்கு அழியாத வண்ணம் எழுதிவிடுவார்கள். பாறைகளுக்குக் கண் இருந்தால் ஒன்றையன்று படித்து வேதனைப்படும். மணல் துகளாகவே இருந்துவிடலாமோ? முன்பே குழம்பிக்கிடந்த ரவியின் மனம் மேலும் குழம்பியது.

மேலே விழுந்த மண் ரவியின் கவனத்தைக் கலைத்தது. ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகள் அவனைக் கடந்து சென்றார்கள். தொலைவில் கிளி ஜோசியப் பெண்மணி தன்னை நோக்கி வருவதை ரவி பார்த்தான். வேண்டாம் என்றால் ஒப்புக்கொண்டு நகரும் ரகம் இல்லை அவள். அதற்குள் இடத்தைக் காலிசெய்ய ரவி எழுந்தான். பிறகு, வீட்டுக்குப் போய்விட்டான்.

பேயோன் பக்கம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism