Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

மூக ஊடக சேவைகளைப் பயன்படுத்துவதில் இருக்கும் ஒரு ஆபத்து பிரைவஸி. மிக நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே தகவல்களைப் பகிர்ந்துகொண்டாலும், அவர்கள் எவ்வளவு எச்சரிக்கையாகத் தங்களது கணக்குகளைப் பாதுகாக்கிறார்கள் என்பது நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று. உதாரணத்துக்கு, விடுமுறையில் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்றைச் சில குறிப்பிட்ட நண்பர்களுடன் மட்டும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொள்கிறீர்கள். அவர்களில் ஒருவர் இன்ஸ்டாகிராம் நிறுவப்பட்ட செல்போனைத் தொலைத்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த செல்போனைத் தனது வசத்தில் வைத்திருக்கும் நபர், குறிப்பிட்ட புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை உங்களால் தவிர்க்கவே முடியாது.

 இந்தப் பிரச்னைக்குத் தீர்வு வந்துவிட்டது. தீர்வைக் கொண்டுவந்திருப்பது Snapchat அலை மென்பொருள். இதன் இயக்கம் சிம்பிள்... ஆனால், பிரில்லியன்ட்! இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நீங்கள் புகைப்படம் எடுத்து, அதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம். அனுப்பும்போது மூன்றில் இருந்து பத்து வரை எத்தனை நொடிகள் அந்தப் புகைப்படம் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட வேண்டும். தனக்கு வந்து சேரும் புகைப்படத் தைப் பார்க்க உங்கள் நண்பர் திரை யில் விரலை அழுத்தியபடியே இருக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த நேரம் முடிந்ததும், அந்தப் புகைப்படம் அழிந்துவிடும். இந்தக் குறுகிய காலகட்டத்துக்குள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிவிழி

ஒருவேளை புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுக்க உங்கள் நண்பர் முயற்சி செய்தால், உங்களுக்கு அதைத் தெரிவித்துவிடும் Snapchat. இன்றைய நாளில் காட்டுத்தீயாகப் பரவிப் பிரபலமாகிக்கொண்டு இருக்கும் அலை மென்பொருள் Snapchat தான். இதன் பிரபலத்தை உணர்ந்து, சென்ற வாரத்தில் Poke என்ற மென்பொருளை வெளியிட்டு இருக்கிறது ஃபேஸ்புக். இந்த மென்பொருளைப் பயன் படுத்தி புகைப்படம் மட்டுமல்லாமல், நிலைத் தகவல் மற்றும் வீடியோ ஆகியவற் றையும் அனுப்பிக்கொள்ளலாம். வெளி யிட்ட சில நாட்கள் ஆப்பிளின் மென்பொருள், கடையில் நம்பர் ஒன்னாக இருந்தாலும், அதற்குப் பின்னர் Poke பின் தங்கிவிட்டதாகவே தெரிகிறது.

துறுதுறுவெனக் குழந்தைகள் எவரேனும் இருந்து அவர்களுக்குப் பரிசாக ஏதேனும் கொடுக்க வேண்டும் என நினைத்தால், வீடியோ கேம் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதைவிட, நல்லதோர் ஆலோசனை என்னிடம் இருக்கிறது.

அவர்களுக்கு ரேஸ்பரிபை எனப்படும் கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுங்கள். ரேஸ்பரிபையை வாங்கித் திறந்து பார்த்தால், அதைக் கணினி என்று சொல்லிவிட முடியாது. கார் வாங்க வேண்டுமானால், உங்களுக்கு இன்ஜின் மட்டும் கொடுத்தால் எப்படி இருக்குமோ, கிட்டத்தட்ட அதுபோலத்தான் இந்த அனுபவமும் இருக்கும். பெட்டியில் இருந்து எடுத்து கணினியை அப்படியே பயன்படுத்தும் நோக்கம் இருப்பவர்களுக்கானது அல்ல ரேஸ்பரிபை. மாறாக, ஒரு கணினியின் பல்வேறு பாகங் கள் செயல்படும் விதத்தை பிராக்டிகலாகத் தெரிந்துகொண்டு அவற்றை ஒருங்கிணைத்து இயக்கவைப்பதன் மூலம் அனுபவம் பெறுவதே இதன் முக்கிய நோக்கம்.

கிரெடிட் கார்டு அளவுக்கே இருக்கும் இந்தக் கணினியை வாங்கி உங்கள் டி.வி-யை மானிட்டராகப் பயன்படுத்தலாம். பென் ட்ரைவில் இயங்கு மென்பொருளைப் பதிந்துகொள்ளலாம். கீ போர்ட், மௌஸ் இரண்டையும் இணைத்துவிட்டால், கணினி ரெடி.

அறிவிழி

இப்படிச் சொல்வதால், ரேஸ்பரிபை சும்மா விளையாட்டுக்குத்தான் பயன்படும் என்று எளிதாக எண்ணிவிட வேண்டாம். இந்த கணினியைப் பயன்படுத்தி இணைய இணைப்பு முதல் பல்வேறு வேலைகளுக்குப் பயன்படுத்த முடியும்.

ரேஸ்பரிபையின் அதிமுக்கியக் கவர்ச்சி அதன் விலை. 25, 35 டாலர்களில் இரண்டு மாடல்களை விற்கிறது ரேஸ்பரிபை. இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள அவர்களது வலைப்பக்கத்துக்குச் செல்லுங்கள். http://www.raspberrypi.org/faqs

தொழில்நுட்பம் நமது வாழ்வில் ஈடறக் கலந்திருப்பதால், மனிதத் தொடர்புகள்அருகிக்கொண்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் அவ்வப்போது எனக்கு எழும். 2012-ம் வருடத்தில் தனிப்பட்ட வாழ்விலோ, பணியிலோ எத்தனை முறை நேரடியாக மற்றவர்களைப் பார்த்து, அவர்கள் முகத்தைப் பார்த்துப் பேசிக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டீர்கள்; முடிவுகளை எடுத்தீர்கள் என்பதையும், எத்தனை முறை போனிலோ, இ மெயிலிலோ, ஸ்கைப்பிலோ, இன்ன பிற தொழில்நுட்பங்களை வைத்துச் செய்தீர்கள் என்பதையும் நினைத்துப்பாருங்கள். நாம் சென்றுகொண்டு இருக்கும் இந்தப் பாதை சரியானதுதானா? நமக்கு அடுத்த தலைமுறை என்ன செய்யப்போகிறது என்ற கவலை எழுகிறதா? இதற்குத் தீர்வு ஒன்றைக் கொடுக்கிறார் ஜப்பானில் இருக்கும் பொறியாளர் ஒருவர். அது என்ன என்பதை அடுத்த வாரத்தில் பார்க்கலாம்.

- விழிப்போம்...