Published:Updated:

சேலத்து 'பச்சை மண்'!

பாட்டுப் பாட வா!

சேலத்து 'பச்சை மண்'!

ரோடு 'வி’ டி.வி-யில் லைவ் புரொகிராம்களில் பாடல்கள் பாடி அசத்துகிறார் ஷிஜா. அழகான தமிழில் செய்திகள் வாசிக்கிறார். இடையிடையே டண்டணக்கா டான்ஸும் உண்டு. விதவிதமான காஸ்ட்யூம்களில் கலக்குபவரின் ஓரே கவலை... தனது மொத்தச் சம்பளமும் புது டிரெஸ் வாங்குவதற்கே போய்விடுகிறது என்பதுதான். சம்பளத்தைச் சேர்த்துக் கேளுங்க மேடம்!

தீபா சொன்ன ரகசியம்!

சேலத்து 'பச்சை மண்'!

தீபா... அளவான உயரம். அழகான சிரிப்பு. தெளிவான தமிழ். சேலம் பாலிமர் சேனலின் தொகுப்பாளினி. இவர் முகம் காட்டிய புரொகிராம்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியதால், 'ஆயிரம் புரொகிராம் கொடுத்த அபூர்வ சிந்தாமணி...’ என்று சேனல் வட்டாரத்தில் கலாய்க்கிறார்கள்.

''நான் ஒரு கிளாஸிக்கல் டான்ஸர். பாலிமர் சேனல்ல வேலை பார்க்கிற ஒருத்தர், என்னோட டான்ஸைப் பார்த்துட்டு, சேனலில் முகம் காட்டக் கூப்பிட்டார். வந்துட்டேன். அவ்வளவுதான். ஆரம்பத்துல கேமரா பார்க்கப் பயம். இப்போ... பின்றோம்ல. எங்கே வெளியில் போனாலும், 10 பேராவது ஹாய் சொல்றாங்க. ஜாலியா இருக்கு...'' என்று மைக் பிடிக்காமலேயே பேசியவரிடம், ''அது சரி, நீங்க எந்த காலேஜ்?'' என்று கேட்டோம். சோப்பு விளம்பரம்போல, ''காலேஜா... நானா..? எனக்குக் கல்யாணமாகி, மூணு குழந்தைங்க இருக்காங்க'' என்று ஆச்சர்யப்படுத்தினார். இதுவரை சேலத்து ரசிகர்களிடம்கூடச் சொல்லாத ரகசியமாம் இது!

சேலத்து 'பச்சை மண்'!

சேலத்து 'பச்சை மண்'!

சென்னை ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் தம்பதியர், ஒருகட்டத்தில் பெருநகர வாழ்வை வெறுத்து, கிராமத்துக்குத் திரும்பி விவசாயம் பார்க்கின்றனர். அதில் வெற்றி பெற்று உலகையே தங்கள் பக்கம் திரும்பிப்பார்க்கச் செய்கிறார்கள். 'கரன்ஸி உலகத்தைவிட்டு வெளியே வாருங்கள்...’ என்று தனது 'பச்சை மண்’ குறும்படம் மூலம் அழைக்கிறார் சேலம் ஜெயா டி.வி. நிருபர் விஜய் ஆனந்த். இதில் நடித்திருப்பதும் இவரே!

''என்னோட மனசுக்குள்ள இருக்குற ஏக்கங்களை அப்பப்போ குறும்படங்களாகப் பதிவு செய்வேன். அப்படி என் மனசுக்குள் ரொம்ப நாளா உறுத்திட்டு இருந்த விஷயம்... விவசாயம். நான் சின்னப் பையனா இருந்தப்ப எங்க கிராமத்துல எல்லோரும் விவசாயம் பார்த்தாங்க. ஆனா, இப்ப எங்க கிராமத்துல விவசாயமே கிடையாது. என்னதான் கம்ப்யூட்டர்லயே வாழ்க்கையை ஓட்டிட்டாலும் விவசாயம் பார்த்தால்தானே, அரிசி, பருப்பு விளையும். அந்த ஏக்கத்தில் உருவானதுதான், பச்சை மண்!'' என்கிறார் இவர்.

அடுத்த கட்டுரைக்கு