Published:Updated:

உலகக்கோப்பை ஹாக்கி: அர்ஜென்டினா, நியூசிலாந்து, நெதர்லாந்து வெற்றி!

Vikatan Correspondent
உலகக்கோப்பை ஹாக்கி: அர்ஜென்டினா, நியூசிலாந்து, நெதர்லாந்து வெற்றி!
உலகக்கோப்பை ஹாக்கி: அர்ஜென்டினா, நியூசிலாந்து, நெதர்லாந்து வெற்றி!
உலகக்கோப்பை ஹாக்கி: அர்ஜென்டினா, நியூசிலாந்து, நெதர்லாந்து வெற்றி!

ஹேக்: உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆடவருக்கான பிரிவில் அர்ஜென்டினா, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றுள்ளது.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடந்த இந்தப் போட்டியின், 31வது நிடத்தில் அர்ஜென்டினா வீரர் மேனுவேல் ப்ரூநெட் அணிக்கான வெற்றிக் கோலை பதிவு செய்தார்.

பதில் கோல் அடிக்க ஜெர்மனி வீரர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

மற்றொரு லீக் போட்டியில், நியூசிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தியது.

தென்கொரிய அணிக்கு எதிரான போட்டியில், நெதர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் போராடி வென்றது.

மகளிர் உலகக் கோப்பை ஹாக்கியில் ஜெர்மனி, சீனா வெற்றி

மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் லீக் ஆட்டங்களில் ஜெர்மனி மற்றும் சீனா அணிகள் வெற்றி பெற்றன. அர்ஜென்டினா மற்றும் அமெரிக்கா அணிகள் இடையிலான போட்டி சமனில் முடிந்தது.

மகளிருக்கான பி பிரிவு லீக் ஆட்டங்கள் நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்றன. அமெரிக்கா அணி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை நடத்தியது.

ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் அமெரிக்கா முதல் கோல் அடித்து, முன்னிலை பெற்றது. 32வது நிமிடத்தில் அர்ஜென்டினா பதில் கோல் அடித்து சமன் செய்தது.

இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. முடிவில் இரண்டுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது. சீனா அணி மூன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.