Election bannerElection banner
Published:Updated:

''இதைவிட மோசமாகப் படைத்திருந்தாலும் ஜெயிப்பேன்!''

''இதைவிட மோசமாகப் படைத்திருந்தாலும் ஜெயிப்பேன்!''

"நான் அவர் இல்லை!"

''இதைவிட மோசமாகப் படைத்திருந்தாலும் ஜெயிப்பேன்!''

நேரில் பார்த்தபோது நம்மாலும் நம்ப முடியவில்லை. ''நெஜமா நம்புங்க சார்... நான் அவர் இல்லை!'' என்று  மீசையை முறுக்கிச் சிரிக்கிறார், தர்மபுரியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வராஜ். அச்சு அசலாக வீரப்பன் தோற்றம். ''20 வருஷமா ஆட்டோ ஓட்டறேன். பொதுமக்கள் பலமுறை என்னைச் சந்தேகமாப் பார்த்தது கஷ்டமா இருந்தாலும் பழகிடுச்சு. வீரப்பன் தேடுதல் உச்சத்துல இருந்தப்ப... போலீஸ்ல எல்லாம் கூப்பிட்டுப் பேசினாங்க'' என்று சிரிக்கிறார் செல்வராஜ்.

இந்த உருவ ஒற்றுமையால் சன் டி.வி-யில் 'மீண்டும் மீண்டும் சிரிப்பு’ நிகழ்ச்சியில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் வீரப்பன் வேடத்தில் ஒருமுறை நடித்து  இருக்கிறார். ''ஒருவேளை போலீஸ் உங்களைச் சந்தேக கேஸில் உள்ளே போட்டு இருந்தால்..?'' என்று கேட்டால்,

''நம்ம எல்லோருமே அம்மா வயித்துக்குள்ள சிறை யில் இருந்து வந்தவங்கதானே... அப்புறம் எதுக்கு சார் பயம்?'' என்று தத்துவம் பேசுகிறார்!

மு.தமிழரசு

சாமி கண்ணைக் குத்திடும்!

''இதைவிட மோசமாகப் படைத்திருந்தாலும் ஜெயிப்பேன்!''

ருவம் இல்லா வழிபாடு தெரியும். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருதேரி கிராமத்தில் இருக்கும் 'அரியக்கா பரியக்கா’ கோயிலில் சிலை இருக்கிறது. ஆனால், அதைப் பார்க்கக் கூடாது என்பது ஐதீகமாம். மீறிப் பார்த்தால், சாமி கண்ணைக் குத்திவிடுமாம்!

##~##

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடக்கும். கோயிலின் சிலை இங்கே இருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் கோயில் மடத்தில் இருக்கிறது. விழாவுக்கு அங்கே இருந்து ஓலைப் பெட்டியில் வைத்து சாமியைக் கோயிலுக்குக் கொண்டுவருகிறார்கள். தென்பெண்ணை ஆற்றில் சிலையை நீராட்டிவிட்டு, உப தெய்வங்களுக்கு மத்தியில் நடுநாயகமாக வைக்கிறார்கள். சிலையைக் கொண்டுவருவது, நீராட்டுவது, பூஜை செய்வது என அனைத்தையும் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டுதான் செய்கிறார்கள். தெரியாமல்கூட சிலை கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று மக்களும் தள்ளியே நின்று கொள்கிறார்கள். விழாவின் இரவில் ஆயிரக்கணக்கில் ஆடு, கோழிகள் பலியிடப்படுகின்றன. ஆனால், மறுநாள் காலையில் அந்தப் பகுதியில் உயிர் பலியிட்டதற்கான சுவடே தெரியாதாம்!

- எஸ்.ராஜாசெல்லம்
படம்: க.தனசேகரன்

"இதைவிட மோசமாகப் படைத்திருந்தாலும் ஜெயிப்பேன்!"

''இதைவிட மோசமாகப் படைத்திருந்தாலும் ஜெயிப்பேன்!''

ஜெயிப்பதற்கு நம்பிக்கையும், உழைப்பும் மட்டும் இருந்தால் போதும். கடவுள் இதைவிட மோசமாக என்னைப் படைத்து இருந்தாலும், நான் ஜெயித்து இருப்பேன்!''  - விஜயகுமாரிடம் பேசும் போதே நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

மாற்றுத் திறனாளியான விஜயகுமார் கடந்த நான்கு ஆண்டுகளாக 'மிஸ்டர். சேலம்’ போட்டியில் சாம்பியன்! சொந்த ஊர் சேலம் மாவட்டம், வனவாசி. ''எனது கால்கள் இளம்பிள்ளைவாதத் தால் பாதிக்கப்பட்டதால், அதற்கான ஷூ போட்டால்தான் என்னால் நகர முடியும். 'மற்றவர்கள்போல் என்னால் நடக்க முடியாது’ என்ற உண்மை உறைத்தது. உறைந்துபோனேன். ஆனால், எல்லாம் கொஞ்ச காலம் தான்.

கால்களில்தானே பிரச்னை... கைகளும், உடலும், மனமும் உறுதியாக இருக்கிறதே என்று விடாப்பிடியாக உடற்பயிற்சிகளைச் செய்தேன். இப்போது நான் ஆணழகன்!'' என்கிற விஜயகுமார் தையற்கடையில் வேலை செய்து, தனது பெற்றோரையும் பராமரிக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிப் பிரிவு ஆணழகன் போட்டியில் தொடர்ந்து முதல் பரிசைப் பெற்று வரும் விஜயகுமாரின் லட்சியம்... மிஸ்டர் தமிழ்நாடு!

ப.பிரகாஷ்
படம்: க.தனசேகரன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு