Published:Updated:

கோட்டை மேட்டுக் குழந்தை!

கோட்டை மேட்டுக் குழந்தை!

##~##
கோ
வை டவுன் ஹால், கோட்டைமேட்டின் செல்லக் குழந்தை... சிரா!

யார் வீட்டில் நல்லது, கெட்டது என்றாலும் அழைக்காமலே வந்து அத்தனை வேலை களையும் செய்வார் சிரா என்கிற சீராஜுதீன். நிக்காஹ் முதல் மௌத் வரை. எதற்கும் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்ப்பது இல்லை. எதிர்பார்க்கவும் தெரியாது. காசு கொடுத்தால் வாங்க மாட்டார்.

சிராவிடம் பேசினேன். சிரித்துச் சிரித்துத் தலையாட்டுகிறாரே தவிர, வேறு எந்த ரியாக்ஷனும் இல்லை.

கோட்டை மேட்டுக் குழந்தை!

''இந்தத் தெருவுலதான் சிரா பொறந்து வளர்ந்தான். ஆனா, சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லை. நாங்கதான் இவனுக்கு எல்லாமே. சிராவுக்கு மனநிலை சரியில்லைன்னு பலர் நினைக்கிறாங்க. அவனுக்கு எல்லா விவரமும் தெரியும். ஆனா, பேச்சு வராது. குழந்தை மனசு. நாள் முழுசும் கல்யாண வீட்டுல வேலை செஞ்சாலும், அந்த வீட்டுக்காரங்க சாப்பிடக் கூப்பிட்டாதான் போவான். கூப்பிடலைன்னா... கோபப்படவும் மாட்டான்.

யாராவது இறந்துட்டா, தமுக்கு அடிச்சுத் தகவல் சொல்றது, சந்தாக்கு கொண்டுபோவது (இறந்தவர்களை எடுத்துச் செல்லும் சவப்பெட்டி) எல்லாம் இவன்தான். அதுக்காக காசு கொடுத்தாலும் வாங்க மாட்டான். சின்னக் குழந்தைங்க ஸ்கூலுக்கு நடந்து போறதைப் பார்த்தா சிராவுக்கு மனசு தாங்காது. ரெண்டு, மூணு குழந்தைகளைத் தோள்ல தூக்கி வெச்சிக்கிட்டு ஸ்கூல்ல இறக்கிவிடுவான்...'' என்று சிராவைப் பற்றிச் சிலாகிக்கிறார்கள் தெரு வாசிகள். வெகு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் சிராவின் மனம்!  

- பி.செந்தில்நாயகம், படம்: வி.ராஜேஷ்

அடுத்த கட்டுரைக்கு