Election bannerElection banner
Published:Updated:

''சாமிக்கே தாவணிதான் பிடிக்கும்!''

''சாமிக்கே தாவணிதான் பிடிக்கும்!''

##~##
''நா
ன் கவிதா... டவுன் ஹால் பக்கம் சேட்ஜி நடத்தும் ஹோட்டல்களில் கிடைக்கும் மினி சப்பாத்தி, சிக்கன் கொத்துக் கறின்னா... உயிரு. இவ க்ரேஸி... ஷாரூக் கான்னா, உயிரை விட்ருவா. பவித்ராவுக்கு...  சிக்கன் விங்ஸ், சிக்கன் ரோல்ஸ் வாங்கிக் கொடுத்து ப்ரபோஸ் பண்ணா 'ஓ.கே’ சொன்னாலும் சொல்லிருவா. ஸ்வாதி... ஒரு ஷாப்பிங் ராட்சஸி. எங்க எல்லாரோட டேஸ்ட்டும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாதது. ஆனா, எங்க எல்லாருக்கும் பிடிச்ச ஒரே விஷயம்... தாவணி!
''சாமிக்கே தாவணிதான் பிடிக்கும்!''

மாசத்துல ஒருநாள் எங்களுக்குத் தாவணித் திருநாள்... இன்னிக்குத்தான் அந்தப் பெருநாள்!''- செல்போன் கேமராக்களில் ஒருவரை ஒருவர் க்ளிக்கிக்கொண்டே ஓப்பனிங் பில்ட்- அப் கொடுத்தார் கவிதா. ஸ்பாட்: கோவை தாவரவியல் பூங்கா.

கிர்ர்ர் க்ரீன், மெர்சல் மெரூன், பாந்த மான பச்சை என நடமாடும் ரங்கோலி களாக உலா வந்திருந்தனர் அந்தத் தோழி கள். நம்மைக் கவனிக்காத வரை 'வாப்பா, ஏ புள்ள!’ - லோக்கல் லந்து பாஸ் பண்ணிக் கொண்டு இருந்தவர்கள், நமது நிழல் தெரிந்ததும் 'ஹே நோ... சீட்டிங் கேர்ள்’, 'ஜஸ்ட் லுக் திஸ் சைடு யா’ என்று பீட்டர் தேவதைகள் ஆனார்கள்.

''நாங்க நாலு பேரும் வேற வேற காலேஜ். ஃபேஸ்புக், ஆர்குட்னு ஃப்ரெண்ட்ஸ் ஆனவங்களை அடிக்கடி சந்திக்கவைப்பது இந்தத் தாவணி!'' என்கிறார் ஸ்வாதி. தலைமுடியைக் கட்டாமல் ஃப்ரீ ஹேர் விட்டிருக்கும் பவித்ரா... கேரள மைனா. கொச்சினில் இருந்து விஸ்காம் படிக்க வந்திருக்கிறார். ''ஜீன், டீஸ்னு எப்பவும் மாடர்னாப் போட்டு சலிச்சுப்போச்சு. ஆனா, தாவணி மட்டும் எனக்குச் சலிக்கவே சலிக்காது. தாவணி போடுற ஒவ்வொரு நாளும் நாலஞ்சு தேவதைங்க எனக்குள்ள லல்லல்லா பாடுவாங்க!'' என்று கலர் கனவுகளில் கரைகிறார் ஸ்வாதி.

''சாமிக்கே தாவணிதான் பிடிக்கும்!''

அப்படியே ஹீரோயின்களில் தாவணி யாருக்கு பெஸ்ட் என்று பேச்சு திரும்பியது. ''தாவணி ஹீரோயின்களில் என் ஆல்டைம் ஃபேவரைட் ஸ்ரீதேவி. இப்போ த்ரிஷா ஓ.கே!'' என்று கிரேஸி முன்மொழிய... அதை வழிமொழிவார் யாரும் இல்லை.  

'' 'சிவாஜி’யில் க்ரீன் கலர் தாவணியில் ஸ்ரேயா செம செக்ஸிப்பா!'' என்ற ஸ்வாதியின் மெல்லிய குரலுக்கு ஆதரவு. ஏகப்பட்ட சுற்று வாதப்பிரதி வாதங்களுக்குப் பிறகும் 'யார் பெஸ்ட்’ என்பதில் சமரசம் ஏற்படவில்லை. ''ஓ.கே ஏன் யார் யாரையோ சொல்ல ணும். நாமளும் இபோ தாவணித் தேவதைகள்தான். நம்மளை விடவா சினிமா ஹீரோயின்கள் அழகு?'' என்று கவிதா சொல்ல.... செம ரெஸ்பான்ஸ்!

''பொதுவா, எல்லாப் பெண் தெய்வங்களும் தாவணிதான் போட்டிருக்கும். சாமிக்கே தாவணி பிடிக்குது. பொண்ணுங்களுக்குப் பிடிக்காதா?'' என்று கொங்கு தமிழில் கவிதா முத்தாய்ப்பு வைக்க... ''ஓஹோ..!'' சொல்லி ஆர்ப்பரிக்கிறது தாவணிப் படை!

- ஷக்தி,   பிருந்தா
படங்கள்: விஜய்,  கலை

''சாமிக்கே தாவணிதான் பிடிக்கும்!''
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு