நல்லாவே சமைக்கிறாங்க மேயரம்மா!
##~## |
''ஆறாம் கிளாஸ் படிக்கும்போதே அம்மாகிட்ட சமையல் கத்துக்கிட்டேன். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் தினமும் சாயங்காலம் நான்தான் சமைப்பேன்.

மோஷிகா பிறந்த சமயம்... மேயர் ஆனேன். வாழ்க்கையே தலைகீழா மாறிப்போச்சு. இப்ப எல்லாம் சமையல்கட்டுப் பக்கம் வரவே நேரம் இல்லை. ஆனா, சண்டே ஸ்பெஷல் சமையல் மட்டும் இப்பவும் நான்தான். மோஷிகாவுக்கு சப்பாத்தியும் பிரட் மலாய் கோஃப்தா கறியும் ரொம்பப் பிடிக்கும். அது செய்றதும் ரொம்பவே சுலபம்.
வெந்த உருளைக் கிழங்குடன் பனீர், பிரட், கார்ன் ஃப்ளவர், நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லித் தழை, உப்பு கலந்து நல்லா பிசைஞ்சுக்கோங்க.

கொதிக்கும் எண்ணெயில் இதைப் போட்டுப் பொன்னிறமா வறுக்கணும். இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், தக்காளி, வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைச்சு, நல்லாக் கொதிக்கவைங்க. இதில் எண்ணெயில் பொறிச்ச மலாய் உருண்டைகளைப் போட்டு மூணு நிமிஷம் வேகவிடுங்க. கொத்துமல்லித் தழை தூவி இறக்கினா, சூடான பிரட் மலாய் கோஃப்தா கறி ரெடி!''
கொஞ்சம் ருசி பார்த்தோம். நல்லாவே சமைக்கிறாங்க மேயரம்மா!
- கே.ராஜா திருவேங்கடம்
படங்கள்: எம்.விஜயகுமார்
