Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

2013- ம் வருடத்தில் எழுதப்படும் இந்த முதல்  கட்டுரை யூடியூப் ஸ்பெஷல். யூடியூபில் வித்தியாசமான, பிரபல மாகி வரும் சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.    

• கேம்ஸ் விளையாடுவது, ஈபேயில் என்ன எல்லாம் இருக்கிறது என்பதைப் பார்ப்பது என அம்மாவின் ஐபேடைப் பயன்படுத்துவது, இந்த எட்டு வயதுச் சிறுவனுக்குப் பழக்கம். அம்மாவின் பெயர் பவுலா பாப்பன். பவுலா பல முறை தனது ஐபேடை எடுக்காதே என்று கேட்டுக் கொண்ட பின்னரும் அவன் விடவில்லை. ஐபேடைப் பயன்படுத்திவிட்டு வைத்த மகனிடம், '50,000 டாலர் மதிப்புகொண்ட மஸ்டேங் காரை ஈபேயில் வாங்கிவிட்டாயே’ என ஆரம்பிக்கிறார் பவுலா. அவர் கையில் இருக்கும் ஐபேடின் கேமராவை இயக்கியபடி இந்தப் பேச்சை ஆரம்பிக்க... சிறுவனின் ரியாக்ஷன் தெளிவாக வீடியோவில் பதிவாகிறது. 'ஐயோ... நமக்குள்ள எல்லாம் போய்விடுமே! நான் எவ்வளவு மோசம்’ என்றெல்லாம் புலம்பி அழும் மகனிடம் கடைசி யாக, 'சும்மா சொன்னேன்’ என்றதும் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிவிழி

சென்ற வாரத்தில் பவுலாவால் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ, இந்த வாரத்தில் வைரஸ் காய்ச்சலாகப் பரவி பிரபலமாகியபடி இருக்கிறது. யூடியூபில் எதுதான் பிரபலமாகும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்பதற்கு இந்த வீடியோ நல்லதோர் உதாரணம்.

வீடியோவின் உரலி: http://bit.ly/136DtSL

• G-Form என்ற நிறுவனம் XTREME என்ற பெயரில் செல்போன், டேப்லட்களுக்கான உறைகளைத் தயாரிக்கிறது. சென்ற வாரத்தில் தங்களது உறை இருப்பதிலேயே சிறந்தது என்பதை நிரூபிக்க எந்த அளவுக்கு மெனக்கெட்டு இருக்கிறார்கள் தெரியுமா? இவர்களது உறை அணிந்த ஐபாட் ஒன்றைத் தட்பவெப்பத்தை அளக்கும் பலூனில் கட்டி 1,00,000 அடி உயரத்துக்குக் கொண்டுசென்று அங்கிருந்து கீழே விழச் செய்திருக்கிறார்கள். 1,00,000 அடி உயரத்தில் இருந்து பூமி, கீழே விழும் வேகம்... என அசத்தல் வீடியோ. கீழே விழுந்த உறையும் அதற்குள் இருந்த ஐபாடும் பத்திரமாக இருப்பதைக் காட்டி அவர்கள் எடுத்திருக்கும் யூடியூப் வீடியோ http://bit.ly/Zj2Gu4

அறிவிழி

• மூன்றாவது உலகப் போர் வரும் என்றால், அதற்குக் காரணம் நாடுகளுக்கு இடையே தண்ணீருக்காக நடப்பதாகவே இருக்கும் என்று சமீபத்தில் படித்த நினைவு. மழை நீர் சேகரிப்பில் இருந்து பல்வேறு புதுமையாக்கல் நிகழ்வுகளுக்கு உலகம் எங்கும் முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகச் சேமிப்பதற்கான முயற்சிகளும் பரவலாக நடந்துவருகின்றன. பாத்திரம் கழுவிய தண்ணீரை வாழை மரங்களுக்குப் பயன்படுத்தும் லோ டெக் சுழற்சி முறையில் இருந்து, ஒவ்வொரு பயன்பாட்டின்போதும் குறைந்த அளவே தண்ணீரைப் பயன்படுத்தும் low-flush கழிவறைகள் எனப் பல்வேறு முயற்சிகள். பெரும்பாலான ஆண்களுக்குத் தண்ணீர் சரளமாகத் தேவைப்படும் ஓர் அனுதினச் சடங்கு முகச் சவரம். ஒவ்வொரு முறை முகத்தை மழித்ததும் ரேசர் பிளேடில் இருக்கும் முடித் துகள்களைத் தண்ணீரில் அலசியாக வேண்டும். திருப்தியாக முகச் சவரம் செய்து முடிக்க அதிக தண்ணீர் தேவைப் படும். இந்தப் பிரச்னையைத் தீர்ப்ப தற்காக க்ரெக் பாட்டின் என்பவர் கண்டுபிடித்திருக்கும் சாதனம் அட்டகாசம். தண்ணீர் குடிக்கப் பயன்படும் டம்ளர் போன்ற இந்தச் சாதனம், தண்ணீரை உள்ளுக்குள்ளாகவே பீய்ச்சி அடித்து, உங்களது ரேசரைச் சுத்தம் செய்துவிடுகிறது. தண்ணீர் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவதால் ஒவ்வொரு முகச் சவரத்துக்கும் ஒரு கப் தண்ணீர் மட்டுமே தேவை. கடல் தண்ணீரைக் குடிநீராக மாற்றும் பிரமாண்ட, கடுமையாகச் செலவு வைக்கும் தொழில்நுட்பங்களைவிட, இது போன்ற எளிதான புதுமையாக்கல் முயற்சி கள்தான் பரவலாக மாற்றங்களைக் கொண்டு வரும் எனத் திடமாக நம்புகிறேன். க்ரெகின் யூடியூப் உரலி http://bit.ly/X5eRqe

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism