Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

டெக் உலகத்தை தமிழ்நாடு என உருவகம் செய்துகொண் டால், கிட்டத்தட்ட இடைத் தேர்தல் நடக்கும்களேபரம் போல இருக்கிறது இந்த வாரம். பரபரப்பாக மோதிக் கொள்ளும் முக்கிய வேட்பாளர்கள் கூகுளும் ஃபேஸ் புக்கும்.

 ஆப்பிள் சாதனங்களில் தங்களது மென்பொருளைப் பயன்படுத்துபவர்கள், அதன் மூலமே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அலைபேசி சேவையை வெளியிட்டது ஃபேஸ்புக். இந்த சேவையால் உடனடியாகப் பாதிக்கப்படப்போவது ஸ்கைப். உங்களது ஃபேஸ்புக் நண்பர்களை ஸ்கைப் மூலமாக அழைத்துப் பேச முடியும் என்பதை, சென்ற பல மாதங்களாகவே பெருமையுடன் விளம்பரப்படுத்தியபடி இருந்தது ஸ்கைப்பின் உரிமையாளரான மைக்ரோசாஃப்ட் நிறுவனம். நேரடியாகவே மென்பொருளைப் பயன்படுத்தி பேசிக்கொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டதால், பயனீட்டாளர்கள் ஃபேஸ்புக் நட்புகளுடன் பேச ஸ்கைப்பைப் பயன்படுத்துவது வெகுவாகக் குறைந்துவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூகுளிடம் இருக்கும் Hangout சேவைக்கும் விடப்பட்ட சவால்தான் ஃபேஸ்புக்கின் புதிய அலைபேசும் சேவை. கூகுளின் Hangout சேவை யைப் பயன்படுத்தி பேச மட்டும் அல்ல, நேரடி வீடியோவாகவும் நீங்கள் மற்றவர்களைத் தொடர்புகொள்ள முடியும். அதனால், ஃபேஸ்புக்கின் அறிவிப்பைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை கூகுள். Hangout பற்றிய விவர உரலி... www.google.com/+/learnmore/hangouts/

அறிவிழி


 

சில நாட்களில் ஃபேஸ்புக் மற்றுமோர் அறிவிப்பை வெளியிட்டது. Graph Search என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த சேவையின் அடிப்படை சிம்பிள். ஃபேஸ்புக்கின் பயனீட்டாளரான நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை ஃபேஸ்புக்கில் பதிவுசெய்துவிட்டு, தொடர்ந்து அதில் இயங்க ஆரம்பிக்கிறீர்கள். நிலைத்தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறீர்கள்; புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றுகிறீர்கள்; எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை 'Check-in’ செய்வதன் மூலம் தெரிவிக்கிறீர்கள்; நண்பர்கள் கொடுக்கும் தகவல்களுக்கான பின்னூட்டங்களை எழுதுகிறீர்கள்; நேரம் அதிகம் இல்லையெனில் 'லைக்’ பொத்தானையாவது அழுத்திவைக்கிறீர்கள். இப்படிப்பட்ட ஒவ்வொரு செயலும் ஃபேஸ்புக்கால் சேமிக்கப்படு கிறது. உங்களைப் பற்றி சேமிக்கப்பட்டபடி இருக்கும் தகவல் தொகுப்புக்கு ஃபேஸ்புக் மொழியில் Graph என்று

அறிவிழி

பெயர். உங்களைப் போலவே உங்களது நண்பர்களும் இங்ஙனமே அவர்களது தகவல் களை ஃபேஸ்புக்கில் கொடுத்து, அவர்களது Graph-ஐ உருவாக்கிக்கொள்கிறார்கள். நட்புகளை உள்ளடக்கிய இந்த இணைப்புலகில் இது நாள் வரை தேடி எதையும் கண்டுபிடிக்க முடியாத நிலையே இருந்து வந்தது. உதாரணத்துக்கு, 2,000 பேர் இருக்கும் நட்புலகில் யாருக்கு நாய் வளர்ப்பின் மீது ஆர்வம் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஒவ்வொருவரது பக்கத்துக்கும் சென்று படித்துத் தெரிந்துகொண்டால் மட்டுமே இது சாத்தியம். அந்தக் குறையை நீக்கிவிட்டோம் என்ற அறிவிப்புடன் இந்தச் சேவையை வெளியிட்டிருக்கிறது ஃபேஸ்புக். அவர்களது உள்ளான நீண்ட கால நோக்கம், உங்களை இந்தச் சேவையைப் பயன்படுத்தச் செய்துவிட்டு, அதன் பின்னர், விளம்பர வருவாயைத் தேடிக்கொள்வதுதான். மேற்கண்ட உதாரணத்தைப் பார்த்தால், நாய்களை வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ள ஃபாதர் வினோத் என்ன உணவு வகைகளை ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதைப் பகிர்ந்துகொண்டால், அதை உங்களுக்குத் தேடல் பதிலா கக் காட்டும்போது மேற்படி உணவு வகைகளைத் தயாரிக் கும் நிறுவனத்தின் ஸ்பான்சர் ஷிப் வருவாயைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கூகுளையே கடித்துவிட்டதே ஃபேஸ்புக் என்று ஆச்சர்யக் குரல்களைக் கேட்க முடிகிறது. இரண்டு நாட்களுக்கு முன் மீடியா நிகழ்வு ஒன்றில் பேசிய கூகுளின் சி.இ.ஒ. லேரி பேஜ், 'ஃபேஸ்புக் சமூக ஊடகப் பிரிவில் பலமாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் வெளியிடும் சேவைகள் சொதப்பலாக இருக்கிறது!’ என்று சொன்னபோது அவரிடம் மெல்லிய பதற்றம் வெளிப்பட்டதை உணர முடிந்தது. Graph Search எல்லோருக்கும் உடனடியாகக் கிடைத்துவிடாது. இதைப் பற்றித் தெரிந்து கொள்ள, பயன்படுத்த, விண்ணப்பிக்க விரும் பினால், இந்த உரலிக்குச் செல்லுங்கள்: www.facebook.com/about/graphsearch
 

அறிவிழி

ஒருபக்கம் இந்த சீரியஸ் விவாதம் நடந்துகொண்டு இருந்த அதே வாரத்தில், கூகுளை வைத்து காமெடி ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார் வலைப்பதிவர் ஒருவர். காரில் பொருத்தப்பட்டு இருக்கும் கேமராக்கள் மூலமாகப் படங்களை எடுத்து, அதைத் தங்களது Maps சேவைக்கு கூகுள் பயன்படுத்துவது தெரிந்ததுதான். போஸ்வானா நாட்டில் எடுக்கப்பட்ட படம் ஒன்றில் கழுதை ஒன்று அடிபட்டுக் கிடப்பதைப் போன்ற படம் வெளியாக, 'கழுதையைக் கொன்றதா கூகுள்?’ என்றெல்லாம் 'நடந்தது என்ன?’ ஸ்டைல் திகில் பதிவுகள் வெளியாக, கூகுள் Maps பிரிவு நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறது. அந்தக் கழுதை படுத்துக்கிடந்ததாகவும், கூகுளின் கேமரா கார் தாண்டிப் போனதும் அது எழுந்து சென்றுவிட்டதாகவும் புகைப்படங்களுடன் காட்டுகிறது இந்தப் பதிவு. 'இதில் டச்சப் வேலை ஏதாவது இருக்குமோ’ என்று சீரியஸாக கழுதையை வைத்து conspiracy theory கண்டறியப் பார்க்கிறது இன்னொரு கோஷ்டி.

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism