லிலியா ஸ்டெபனோவா... அமெரிக்காவின் ரப்பர் பெண்!

நம்பர் ஒன் அக்ரோபாட் வீராங்கனை. பிறந்தது மால்டோவா நாட்டில் என்றாலும், அமெரிக்கக் குடியுரிமை வாங்கி லாஸ் வேகாஸ் நகரில் வசித்து வருகிறார். பெற்றோர் கள் அக்ரோபாட் வீரர்கள் என்பதால், ஐந்து வயதிலிருந்தே உடலை வில்லாய் வளைத்துப் பழகிவிட்டார் லிலியா. 2006-ல் 'அமெரிக்காஸ் காட் டேலன்ட்’ நிகழ்ச்சியில் முதல் இடம் பிடித்து, கவனம் ஈர்த்தார். அப்போது லிலியாவுக்கு வயது 19 தான். அந்த ஷோவை நடத்திய அமெரிக்காவின் முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் சார்லஸ் பார்க்ளே, 'இவ்வளவு செக்ஸியான, ரப்பர் போன்ற நெகிழ்வான உடலமைப்பைக்கொண்ட பெண்ணைப் பார்த்ததே இல்லை’ என வியந்து, அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அவரின் அட்வைஸ்படி ஆர்ச்சரி கற்றுக்கொண்ட லிலியா ஆச்சர்யமூட்டும் உடல் வளைவு சாகசத்தைக் கடந்த சில வருடங்களாக செய்து வருகிறார். உடலை வில்லாக வளைத்துக்கொண்டு கால்களாலேயே நாணில் அம்பு பூட்டி சில அடி தூரங்களில் இருக்கும் இலக்கில் குறிபார்த்து எய்து சாகசம் புரிகிறார். 'பொதுவாக அக்ரோபாட் செய்பவர்களுக்குத் தசைகள் இறுகி உடலில் கவர்ச்சி மிஸ் ஆகி இருக்கும். லிலியாவின் இடுப்பு மற்றும் மூட்டு எலும்புகள் நம்மைப்போல அல்ல. சிறு வயதிலிருந்தே ஏரோபிக்ஸ் செய்து வருவதால் அவர் உடல் சொன்னபடி கேட்கிறது. இவரைப்பார்த்து நீங்களும் செய்ய ஆசைப்பட்டால், கடுமையான உடல் உபாதைகளைத்தான் சந்திப்பீர்கள்’ என எச்சரிக்கிறார் அவரின் பிசியோதெரபிஸ்ட்டான வில்லியம்ஸ். 'நான் உடல் அமைப்பில் கவர்ச்சியாக இருப்பது உண்மைதான். இதற்காக உணவுக் கட்டுப்பாடு எதுவும் என்னிடம் இல்லை. நான் அசைவ உணவுப் பிரியை. அதனால், பூசினாற்போன்ற உடல்வாகு அமைந்துவிட்டது. எத்தனை முறை எனக்கு நானே உணவுக் கட்டுப்பாடு போட்டுக் கொண்டாலும், கடைசியில் என் நாக்கு ஜெயித்துவிடுகிறது’ எனச் சிரிக்கிறார்.

நோ டயட் பாப்பா!

- ஆர்.சரண்