Published:Updated:

நம்பிக்கை வார்க்கும் நல்ல புத்தகம்!

நம்பிக்கை வார்க்கும் நல்ல புத்தகம்!

பிரீமியம் ஸ்டோரி
நம்பிக்கை வார்க்கும் நல்ல புத்தகம்!
##~##

ட்டிஸப் பாதிப்பு கொண்ட குழந்தைகளைப் பார்த்தால், அவர்களுக்காகப் பரிதாபப்பட்டு 'உச்’ கொட்டிவிட்டுப் போவது நம் வழக்கம். ஆனால், நீங்கள் டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாசன் எழுதி இருக்கும் 'ஆட்டிஸம் அறிவோம்’ புத்தகத்தைப் படித்தவராக இருந்தால், அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி, 'நாளைக்கு என்ன சாதனை பண்ணப்போறீங்க?’ என ஆசையாய் கேட்பீர்கள். அந்த அளவுக்கு ஆட்டிஸக் குழந்தைகளின் வாழ்வியலை நமக்குப் புரியவைக்கிறது இந்தப் புத்தகம். 

ஓர் ஆட்டிஸக் குழந்தையின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கான புத்தகம்தான் டாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசன் அவர்களின் 'ஆட்டிஸம் அறிவோம்’.

நன்றாக ஓடி விளையாடிய குழந்தை, திடீரென சுற்றுப்புறத்தில் இருந்து ஒதுங்கித் தனக்குத்தானே ஓர் உலகத்தை உருவாக்கிக்கொண்டு, அதில் சஞ்சரிக்க ஆரம்பிப்பதும், பேசத் தெரிந்தால் தனக்குத்தானே பேசிச் சிரித்துக்கொள்வதும் ஆட்டிஸத்தின் வெளிப்பாடுகள். இதனால், குழந்தையின் சமூகரீதியான உறவுகள்தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

நம்பிக்கை வார்க்கும் நல்ல புத்தகம்!

குழந்தையின் இந்தக் குறைபாட்டை, மூன்று வயதில்தான் பெற்றோர்களால் அறிய முடிகிறது. ''ஆட்டிஸக் குழந்தைகள் 'நான்’, 'எனக்கு’ என்று தங்களைத் தாங்களே உணராத தெய்வப்பிறவிகள்.

ஏன் இந்த மாதிரியான குழந்தைகள் பிறக்கிறார்கள், அவர்களைக் கையாளுவது எப்படி, என்ன வகையான சிகிச்சைகள் கொடுக்கலாம், அவர்களின் அறிவுத் திறனை உயர்த்துவது எப்படி எனப் பலவிதமான கோணங்களில் ஆட்டிஸத்தை ஆராய்ந்து தெளிவுபடுத்தி இருக்கிறார் டாக்டர் ஸ்ரீனிவாஸன்.

ஆட்டிஸக் குழந்தைகளுக்கான பிடிவாதம், முரட்டுத்தனம், சில வினோதப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக் களைவது குறித்தும் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டு இருக்கிறது.

பெரும்பாலான ஆட்டிஸக் குழந்தைகளின் மன இறுக்கம், முரட்டுத்தனம், கோபம், பிடிவாதம் போன்ற சில குணங்களை இசையால் சீர்படுத்த முடியும் வாய்ப்புகள் குறித்தும் நம்பிக்கை வார்த்திருக்கிறார் நூல் ஆசிரியர் ஸ்ரீனிவாசன்.

ஆட்டிஸம் பற்றித் தெரியாத விஷயங்களைச் சொல்வதோடு, தக்க வழிகாட்டியாகவும், நம்பிக்கை வார்க்கும் நல்ல மருத்துவனாகவும் விளங்குகிறது 'ஆட்டிஸம் அறிவோம்...’ என்ற இந்த நூல்.

''குழந்தைகள் அழகானவர்கள். ஆட்டிஸக் குழந்தைகள் பேரழகானவர்கள்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு