##~##

ன் அறைக்குள் தடாலடியாக நுழைந்து செந்தில் என்று அறிமுகம் செய்துகொண்டவன், மெஸ்ஸில் அமர்ந்திருப் பதை பாரியின் தேர்ந்த கண் கள் கவனித்தன. தன்னைக் காட்டி அடுத்தவனிடம் அவன் பேசியதை அலட்சியம் செய்து வெளியே நடந்தான்.

 பாரிக்குப் பிறப்புச் சான்றிதழ் கிடையாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அம்மா? அப்பா? பிறந்த இடம்? பிறந்த தேதி? எதுவும் அறியான்.

ஐந்தாறு நாள் குழந்தையாய், கோவை மருத்துவமனை அருகில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டவன். அங்கிருந்து கேரளா வழியாக சென்னைக்குப் பயணம். மாநகரில் வெவ்வேறு அம்மாக்களின் தோள்களிலும், மடிகளிலும் அரைமயக்க நிலையிலேயே போக்குவரத்து சிக்னல்களிலும், கோயில் வாயில்களிலும் பிச்சை எடுக்கப் பயன்பட்டவன். 'குமாரு’, 'குட்டி’, 'வெளுத்தவன்’ என்று வெவ்வேறு உத்தேசப் பெயர்களுடன் கைமாறியவன்.

யட்சன்

ஏழு வயதில், சக பிச்சைத் தோழனுடன் தப்பித்து, ஏதோ பஸ் பிடித்து, இறங்கிய இடம் புதுச்சேரி. அங்கே, நேரு வீதியில் பிரிட்டிஷ் பெயர்கொண்ட லாட்ஜில் ரூம்பாய் வேலை. அங்குதான் பாரி என்ற பெயர் நிரந்தரமானது. 40 சுருக்கமான அறைகளில் தங்கிய வாடிக்கையாளர்கள் அனைவரும் அவனையே கோரினர். பகல்களில் ஸ்பெஷல் காபி, மாலைகளில் சில்லிட்ட பீர், இரவுகளில் நிரோத் என்று வாங்கி வர... களைப்பு இல்லாமல் ஓடிக் கொண்டு இருப்பான். மூடு இருந்தால், மேனேஜர் இரவுக் காட்சி சினிமாவுக்கு அழைத்துப் போவார். அப்படித்தான் சூப்பர் ஸ்டாரின் உபாசகன் ஆனான்.

மற்றபடி, நிராகரிக்கப்பட்ட, பல ரகசியக் கறைகளைக்கொண்ட மெத்தை மீது வாசலை ஒட்டிப் படுப்பான். போலீஸ் ரெய்டு வந்தால், அறைக் கதவுகளைத் தட்டி எச்சரிக்க ஓடுவான்.

வந்து போகும் அக்காக்கள் விடிகாலைகளில் ஐந்தும், பத்துமாக டிப்ஸ் கொடுத்துவிட்டுப் போவார்கள்.

சாவித்திரி அக்கா மட்டும் ஜிப் வைத்த அரை டிராயர்கள், கை வைக்காத கலர் பனியன்கள் என்று வாங்கித் தருவாள். வாடிக்கை இல்லாத நாட்களில், கூப்பிட்டு மடியில் படுக்கவைத்துக்கொள்வாள். மீசை துளிர்விட்ட வயதில், அவன் பனியனுக்குள் அவள் கைவிட்டபோது, 'வேணாங்க்கா’ என்று விலகினான். அவளைத் தவிர்க்க ஆரம்பித்தான்.

பதின்மூன்றாவது வயதில், அவளால் வாழ்க்கையில் திடீர் திருப்பம். தனபால் அறிமுகமானார்.

'பெரிசா வரவேண்டியவன். இங்கியே இருந்தா, மாமா வேலை பார்த்தே வீணாப் போயிடுவான். இவனுக்கு ஏதாவது வழி காட்டுய்யா...' என்று சாவித்திரி அக்கா கொஞ்சலாகச் சொன்னாள்.

'என்கூட மதுரைக்கு வந்துருடா...' என்றார். சந்தோஷமாகத் தலையசைத்தான் பாரி.

துரை.

புதிய மனிதர்கள். புதிய சட்டங்கள்.

தனபாலுக்கு வெளிப்படையாக மரக்கடை வியாபாரம். மறைவில், அவரிடம் ஒரு குழுவே வேலை பார்த்தது. அதில் ஒருவனிடம் பாரியை ஒப்படைத்தார்.

'மலையப்பா, இவனைத் தயார் பண்ணுடா...'

யட்சன்

தண்டால் எடுக்கவும், கர்லா சுற்றவும், மற்ற உடற்பயிற்சிகள் செய்யவும் பாரிக்குப் பிடித்து இருந்தது. குறைவில்லாமல் சாப்பாடு. 16 வயதில், நான்கு அங்குல சிறுகத்தி ஒன்றைக் கொடுத்தான் மலையப்பன். வரிவரியாகச் சுருண்டிருந்த அதன் திருகாணி முனையை எப்படிச் செருகி, எப்படி இழுத்தால் எதிரியின் குடல் வெளியே வரும் என்று கற்பித் தான்.

முழுப் பூசணியில் எக்ஸ் குறிகள் போட்டு, புள்ளி பிசகா மல் குத்தியெடுத்துக் காட்டியதும், பாரி களம் இறக்கப்பட்டான்.

கடைசிக் காட்சி முடிந்து மக்கள் வீடு திரும்பும் நேரம்... மாநகராட்சி விளக்குகள் மாய்ந்துபோன தெருவில், ஒரு பழவண்டியின் பின்னால் இருளில் ஒளிந்திருந்தார்கள்.

காலடிச் சத்தம் கேட்டதும் மலையப்பன், பாரியின் தோளில் தட்டினான்.

'அந்த பச்சை சட்டை... முகத்தைக் காட்டிராத...' என்றான்.

பாரி பதுங்கி ஓடினான். செயல்பட்டான். அந்த ஆள் நடந்ததை உணர்ந்து, இடுப்பில் கையை அழுத்தி, விரல் இடுக் குகள் வழியே கசியும் ரத்தம் கவனித்து, அலறும் முன், ஓடி வந்துவிட்டான்.

அந்தக் கணம் பாரி விநோதமான ஓர் உணர்வை அனுபவித்தான். பெருமையா..? பரிதவிப்பா..? போதைக் கிளர்ச்சியா? புரியவில்லை. அதற்கப்புறம், இரண்டு வருடங்களில் நான்கே சம்பவங்கள். பாரியை யாரும் நினைவில் பதிவுசெய்துகொள்ளவில்லை.

திடீரென்று தனபால் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு, இரண்டு நாட்கள் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளில் வாழ்ந்து மறைந்தார். குழு சிதறியது.

பாரி தனியனானான். ஓரிடத்தில் தங்காமல், கையிருப்புக்குத் தக்கபடி வெவ்வேறு லாட்ஜ்களிலும் ஹோட்டல்களிலும் வாழ்ந்தான். எந்தக் குறிப்பிட்ட குழுவையும் சாரா மல், யார் கூப்பிட்டாலும் போனான். பிடித்தால், கொடுத்த கூலிக்குப் போய் மிரட்டினான். அடித்தான்.

ஒரே ஒரு நிபந்தனைதான். சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதுப் படம் ரிலீஸ் என்றால், கோடி ரூபாய் கொடுத்தாலும், அன்றைய தினம் வேறு எந்த வேலையும் எடுத்துக்கொள்ள மாட்டான்.

அன்றன்றைக்குக் கிடைத்த பணத்தைத் தாராளமாகச் செலவுசெய்து சந்தோஷமாக இருந்தான். அடுத்த நாள்பற்றிக் கவலைப்படத் தேவை இன்றித் தொழிலும் பணமும் புழங்கியது.

சென்ற மாதம் திடீரென்று சூப்பர் ஸ்டாரால் அதற்கு எதிர்பாராத முடிவு வந்தது.

- தடதடக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism