Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

நம் கண்களுக்குத் தெரியும்படியும் தெரியாதபடியும் பலவித மென்பொருட்களை நாம் தினமும் பயன்படுத்துகிறோம். உதாரணத்துக்கு, அலுவலகக் கணினியில் இருக்கும் அடோபி மென்பொருள், PDF கோப்புகளைப் படிப்பதற்குத் தேவை. ஆனால், டி.வி-யை இயக்கப் பயன்படுத்தும் ரிமோட்டுக்கும் மென்பொருள் ஒன்று தேவை என்பதை நினைத்துப் பார்ப்பது இல்லை. தெரிந்து பயன்படுத்தும் மென்பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் களங்களை 'ப்ளாட்ஃபார்ம்’ என்று சாப்ட்ஃவேர் இளைஞர் கள் உலவும் காபி கடைகளில் அதிகம் புழங்குவதைக் கேட்டு இருக்கலாம்.

உங்களது கணினி, கையில் இருக்கும் மொபைல் சாதனம் இவை எல்லாமே மேற்படி 'ப்ளாட்ஃபார்ம்’ வகையறாதான். இவற்றில் இயங்கும் மென்பொருட்களை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதால், உங்களை வாடிக்கையாளராக மாற்ற அதிக நிறுவனங்கள் அனுதினமும் முயல்கின்றன. புதிதான மென்பொருட்களை இந்தக் களங்களில் தயாரிப்பதில் மைக்ரோசாஃப்ட்டில் இருந்து நேற்று முளைத்த காளான் கம்பெனி வரை அனைவருக்கும் ஆர்வம். தனியான வலைதளங்களாக உருவாக்கப் பட்ட ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை, தத்தமது தளங்களையே ப்ளாட்ஃபார்மாகப் பயன்படுத்தி மற்றவர்கள் மென்பொருட்கள் தயாரித்துக்கொள்ளும் வசதியை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றன. தங்களது ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்தி மென்பொருட்கள் தயாரிப்பவர்கள் பெருக வேண்டும் என்பதற்காக, இந்த நிறுவனங்கள் போட்டி போடுவதும் உண்டு. மைக்ரோசாஃப்ட்டின் சி.இ.ஓ. ஸ்டீவ் பால்மர் சமீபத்தில் 'மைக்ரோசாஃப்ட்டுக்கு முக்கியம் டெவலப்பர்... டெவலப்பர்... டெவலப்பர்’ என்று உணர்ச்சிவசமாக மேடையில் முழங்க, அதை வைத்துச் செய்யப்பட்ட காமெடி வீடியோக்கள் பல யூடியூபில் கிடைக்கின்றன. அவரது உணர்ச்சிகர 20 நொடி வீடியோவின் உரலி www.youtube.com/watch?v=8To-6VIJZRE

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிவிழி

அது இருக்கட்டும்... கணினி, மொபைல் சாதனம் தவிர, வேறு எதையெல்லாம் மென்பொருள் தயாரித்து இயக்கும் வகையில் 'ப்ளாட்ஃபார்ம்’ ஆக மாற்றுவது என்பதற்கான முயற்சிகளுக்கும் குறைவில்லை. உங்களது டி.வி. சாதனம் கிட்டத் தட்ட ப்ளாட்ஃபார்மாக மாறியபடி இருக்கிறது. ஆப்பிள் டி.வி., கூகுள் டி.வி. சாதனங்களுடன் ஸிஷீளீu இப்போது சேர்ந்திருக்கிறது. இந்தச் சாதனங் களை உங்களது டி.வி-யில் பொருத்திவிடுவதன் மூலம், உங்கள் டி.வி. சாதா டி.வி-யில் இருந்து இணையத்தில் பொருத்தப்பட்டு, மென்பொருட்கள் இயங்கும் ஸ்மார்ட் டி.வி-யாக மாறிவிடுகிறது.

இந்த ப்ளாட்ஃபார்ம் கண்டுபிடிப்பு முயற்சியில் சமீபத்தில் சேர்ந்திருப்பது உங்களது கார். நான்கு சக்கரங்களும், ஒரு ஸ்டீயரிங் சக்கரமுமாக நீங்கள் ஓட்டியோ, அமர்ந்தோ செல்லும் அதே வாகனம். கார் கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், பார்ப்பதிலும் இயங்குவதிலும் மிகப் பெரிய மாற்றங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியாது. ஆனால், கணினி/தகவல், இப்போது இணையத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி உங்கள் காரின் உள்வடிவமைப்பைக் கணிசமாக மாற்றி இருக்கிறது. விமானத்தின் இயக்கத்தைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து பதிவுசெய்து வைத்துக் கொள்ளும் கறுப்புப் பெட்டிபோலவே, கார்களின் தகவல்களைப் பதிந்து வைத்துக்கொள்ளும் வசதி கள் வந்துவிட்டன. ஏதாவது கோளாறு என டெக்னீஷியனிடம் எடுத்துச் சென்றால், சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும் இந்தத் தகவல் தொகுப்பில் இருந்து எந்த இடத்தில், என்ன பிரச்னை என்பதை அறிந்து சரிசெய்ய முடியும். தினமும் பயன்படுத்தும் சாதனத்துக்குள் இப்படி ஒரு தொழில்நுட்பம் இருக்கும்போது, இதை ஒரு 'ப்ளாட்ஃபார்மாக’ மாற்ற எடுக்கப்படும் முயற்சியைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அறிவிழி

இதில் முன்னோடி ஃபோர்டு நிறுவனம். சென்ற வாரத்தில் Open XC platform என்ற பெயரில் தங்களது கார்களுக்கான மென்பொருட்களைத் தயாரிக்கும் ப்ளாட்ஃபார்மை வெளியிட்டு இருக்கிறது ஃபோர்டு. 'முடிந்த வரை எங்களது கார்களின் வடிவமைப்பில் மென்பொருட்களைக் கொடுக்கிறோம். ஆனால், மற்றவர்களும் மென்பொருட்களைத் தயாரித்து காரில் இயக்க முடிந்தால், அந்தப் புதுமையாக்கம் பயனீட்டாளர்களுக்கு இன்னும் வேகமாகப் பயனளிக்கும்!'' என்கிறது ஃபோர்டு வெளியிட்டிருக்கும் அறிக்கை. ஆப்பிள், கூகுள் இரண்டும் அவர்களது மொபைல் சாதனங்களில் வாங்கி, தரவிறக்கிக்கொள்ள உதவியாக அமைத்திருக்கும் App store எனப்படும் மென்பொருள் சந்தைக் கடைகளைப் போலவே கார்களில் இயங்கும் மென்பொருளுக்கான சந்தைக் கடை உருவாகும். இணையத்தில் இணைக்கப்பட்ட காரில் அமர்ந்து மென்பொருள் சந்தையில் ஆங்ரி பேர்ட்ஸ் வாங்கி விளையாடும் நாள் அதிக தூரத்தில் இல்லை. கார்பற்றிய மற்றொரு நிகழ்வும் இந்த வாரத்தில் உண்டு. ஆப்பிள் ஐபோன் பயனீட்டாளர்களுக்கு ‘CK’பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். உங்கள் பேச்சைக் கிரகித்து, அதற்கேற்ப பதில்களை உங்களுக்குச் சொல்லும் உங்களது அசிஸ்டென்ட், இந்த ‘CK’ தொழில்நுட்பம். ‘CK’ இணைக்கப்பட்ட ஹோண்டா, செவி கார்கள் இந்த வருடத்தில் சந்தைக்கு வருகின்றன. ஐபோனை

அறிவிழி

வைத்துக்கொண்டு காரில் ஏறினால், மேற்படி கார் அதை அடையாளம் கண்டுகொண்டு, போனில் இருக்கும் ‘CK’யை காருடன் இணைத்துவிடும். பின்னர், 'அருகில் எந்த தியேட்டரில் 'விஸ்வரூபம்’ ஓடுகிறது. அதற்கு வழி சொல்லு?’ என்றால் காரில் இருக்கும் ப்ளூடூத் மூலம் போன் வழியே இணையத்தைத் தொடர்புகொண்டு உங்களுக்கு வழி காட்டும். கார் செய்திகளுக்கு இங்கே போடுவோம் ஒரு பிரேக்!

ட்விட்டர் சென்ற வாரத்தில் வெளியிட்டு இருக்கும் Vine என்ற வீடியோ மென்பொருள் இந்த வாரத்தில் பிரபலமாகி வருகிறது. 140 எழுத்துக்களுக்குள் ட்வீட் இருக்க வேண்டும் என்பதைப் போல Vine-ஐப் பயன்படுத்தி 6 நொடிகளுக்குள் வீடியோ எடுக்க வேண்டும். அது எப்படி முடியும் எனத் தோன்றுகிறதா?

அறிவிழி

ஸ்மார்ட்டாக வடிவமைப்பட்டு இருக்கும் இந்த மென்பொருளில், போனின் கேமராவை இயக்கிப் படம் எடுக்க, உங்கள் விரல் ஸ்க்ரீன் மீது இருக்க வேண்டும். விரலை நகர்த்தினால், வீடியோ எடுப்பது நின்றுவிடும். மீண்டும் விரலை வைத்து அழுத்தினால் வீடியோ மீண்டும் எடுக்கப் படும். ஆக, ஐந்து நிமிடத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஆறு நொடியில் எடுக்க முடியும். நீங்கள் Vine பயன்படுத்தி இருந்தாலோ அல்லது பயன்படுத் தியோ எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை @antonprakash க்கு ட்வீட் செய்யுங்களேன்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism